போன் கால் கூடாது, அச்சுறுத்த கூடாது....ஏஜெண்டுகளை அடக்கி வைக்கவும்: வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவு

RBI Update: ரிசர்வ் வங்கியால் முன்மொழியப்பட்ட விதிகளின்படி, வாடிக்கையாளர் கடன் இஎம்ஐ -ஐ சரியான நேரத்தில் (EMI பவுன்ஸ்) செலுத்தாவிட்டாலும், கடன் மீட்பு முகவர் கடன் பெற்றவரை காலை 8 மணிக்கு முன்னரும் மாலை 7 மணிக்கும் பின்னரும் அழைக்க முடியாது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Nov 29, 2023, 07:26 PM IST
  • நிதி நிறுவனங்கள் முக்கியமான பணிகளை அவுட்சோர்சிங் செய்வதைத் தவிர்க்க வேண்டும்: ரிசர்வ் வங்கி
  • அவுட்சோர்சிங் நிதி நிறுவனங்களின் பொறுப்பைக் குறைக்காது: ஆர்பிஐ
  • கடன் பெற்றவர்களை அச்சுறுத்த முடியாது: ஆர்பிஐ
போன் கால் கூடாது, அச்சுறுத்த கூடாது....ஏஜெண்டுகளை அடக்கி வைக்கவும்: வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவு title=

RBI Update: பொதுவாக கடன் வாங்கி அதன் தவணையை சரியான நேரத்தில் கட்டாதவர்களுக்கு அவ்வப்போது தொல்லை தரும் தொலைபேசி அழைப்புகள் வருவதுண்டு. ஆனால், இவை சில சமயங்களில் அளவுக்கு மீறிய அழுத்தத்தை அளிக்கின்றன. கடனை திரும்பப் பெறுவதற்காக வங்கி முகவர்கள் அவ்வப்போது அழைத்து தொல்லை தருகின்றனர். வங்கி முகவர்களின் இந்த தொல்லை தரும் அழைப்புகளை நிறுத்துவதற்காக இந்திய ரிசர்வ் வங்கி அவ்வப்போது கடுமையான விதிமுறைகளை கொண்டு வருகிறது. 

ரிசர்வ் வங்கியால் (Reserve Bank) முன்மொழியப்பட்ட விதிகளின்படி, வாடிக்கையாளர் கடன் இஎம்ஐ (EMI) -ஐ சரியான நேரத்தில் (EMI பவுன்ஸ்) செலுத்தாவிட்டாலும், கடன் மீட்பு முகவர் கடன் பெற்றவரை காலை 8 மணிக்கு முன்னரும் மாலை 7 மணிக்கும் பின்னரும் அழைக்க முடியாது. 

அவுட்சோர்சிங் நிதி நிறுவனங்களின் பொறுப்பைக் குறைக்காது

இந்திய ரிசர்வ் வங்கி (RBI), நிதி நிறுவனங்கள் சில பணிகளை வெளி ஆட்களிடம் கொடுத்தாலும், அதாவது அவுட்சோர்சிங் செய்தாலும், அந்த பணிகளுக்கான அவற்றின் பொறுப்பு முடிவடையாது என்றும் கூறியுள்ளது. வாடிக்கையாளர்களுக்கான பொறுப்பு நிதி நிறுவனங்களுக்கு எப்போதும் இருக்க வேண்டும் என்றும் ஆர்பிஐ கூறியுள்ளது. இதனுடன், இந்த வரைவில், நேரடி விற்பனை முகவர்கள் (Direct Sales Agent), நேரடி சந்தைப்படுத்தல் முகவர்கள் (Direct Marketing Agent) மற்றும் மீட்பு முகவர்களுக்கான (Recovery Agent) விதிகளை உருவாக்குவது குறித்து RBI பேசியுள்ளது. இந்த விதி பொது, தனியார் மற்றும் NBFC ஆகிய மூன்றுக்கும் பொருந்தும் வகையில் இருக்க வேண்டும். இதனுடன், கடனைத் திரும்பப் பெறும்போது வாடிக்கையாளருடன் அழைப்பு அல்லது மெசேஜ் மூலம் எப்போது, ​​எப்படி தொடர்புகொள்வது என்பது குறித்து மீட்பு முகவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட வேண்டும் என்று ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.

மேலும் படிக்க | மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜனவரியில் ஜாக்பாட்: 5% டிஏ ஹைக், அதிரடி ஊதிய உயர்வு

கடன் பெற்றவர்களை அச்சுறுத்த முடியாது: ஆர்பிஐ

இதனுடன், வாடிக்கையாளர்களின் உரிமைகளை உறுதி செய்வதற்காக, ரிசர்வ் வங்கி, நிதி நிறுவனங்கள், கடனை வசூலிப்பதற்காக முகவர்கள் அச்சுறுத்தல்கள் அல்லது துன்புறுத்தல்களை நாட முடியாது என்பதை அவர்களுக்கு விளக்குமாறு நிதி நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளது. இதனுடன், மீட்பு முகவர்கள் கடன் வாங்கியவர்களை அவமானப்படுத்த முடியாது. கடனைத் திரும்பப் பெறும்போது கடன் வாங்குபவர்களின் தனியுரிமை முழுமையாக மதிக்கப்பட வேண்டும் என்பதை நிதி நிறுவனங்கள் மனதில் கொள்ள வேண்டும்.

நிதி நிறுவனங்கள் முக்கியமான பணிகளை அவுட்சோர்சிங் செய்வதைத் தவிர்க்க வேண்டும்: ரிசர்வ் வங்கி

இதனுடன், கேஒய்சி விதிகள், கடன் ஒப்புதல் போன்ற முக்கியமான கொள்கை மேலாண்மை பணிகளை மற்ற நிறுவனங்களுக்கு அவுட்சோர்சிங் செய்வதைத் தவிர்க்குமாறு வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் மற்றும் வங்கிகளுக்கு இந்திய ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது. ரிசர்வ் வங்கி நிதிச் சேவைகளின் அவுட்சோர்சிங்கில் அபாயங்கள் மற்றும் நடத்தை விதிகளை நிர்வகிப்பதற்கான அதன் வரைவு வழிகாட்டியில்  (Draft Master Direction on Managing Risks and Code of Conduct in Outsourcing of Financial Services) இந்த விஷயங்களைக் கூறியுள்ளது.

கடன் மறுசீரமைப்பு

கடனை திருப்பி செலுத்த முடியாமல் பலர் தவித்து வருகின்றனர். அப்படிப்பட்டவர்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் தற்போது ரிசர்வ் வங்கி (RBI) சில விதிகளை வகுத்துள்ளது. அந்த வகையில் கடன் வாங்குபவர்களுக்கு கடன் மறுசீரமைப்பு (Loan Restructuring) ஒரு சிறந்த வழியாக இருக்கும். இது, கடனை உரிய நேரத்தில் செலுத்தாத நபர்கள் மீதிருந்து டீஃபால்டர், அதாவது, கடனை திருப்பி செலுத்தாதவர் என்ற அடையாளத்தை அகற்றும். கடன் வாங்கிய ஒரு நபர் டீஃபால்டராக மாறினால், அவரது கடன் வரலாறு (Credit History) மோசமடைகிறது. இது மட்டுமின்றி இது அவரை உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பாதிக்கின்றது. இதன் காரணமாக, அவரது CIBIL ஸ்கோரும் கெட்டுவிடுகிறது. இதனால், எதிர்காலத்தில் கடன் பெறுவதற்கான வாய்ப்புகளும் இல்லாமல் போய் விடுகின்றது, அல்லது சிக்கலுக்கு உள்ளாகிறது. இந்த பிரச்சனைகள்ளுக்கு ரிசர்வ் வங்கியின் லோன் ரீஸ்ட்ரக்சரிங் விதி பெரிய நிவாரணம் அளிக்கின்றது. 

மேலும் படிக்க | ரூ.1, 5, 10, 20 நாணயங்கள்.. இவை செல்லுமா செல்லாதா? ரிசர்வ் வங்கி அளித்த முக்கிய அப்டேட்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News