RBI relaxes KYC norm: ரிசர்வ் வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஒரு பெரிய நிவாரணத்தை அளித்துள்ளது. கொரோனா தொற்றுநோயின் இந்த காலகட்டத்தில், ரிசர்வ் வங்கி, வங்கி கணக்கு வைத்திருப்பவர்களுக்கு மிகுந்த நிவாரணம் அளிக்கும் செய்தியை அளித்துள்ளது. இந்த நிவாரணம் KYC புதுப்பித்தல் பற்றியது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வங்கிகளில் கணக்கு வைத்திருப்பவர்கள் அவர்களுடைய KYC-ஐ புதுப்பிக்காவிட்டாலும், 2021 டிசம்பர் 31 வரை அவர்களுடைய கணக்குகளை முடக்க வேண்டாம் என்று ரிசர்வ் வங்கி அனைத்து வங்கிகளுக்கும் அறிவுறுத்தியுள்ளது. கொரோனா தொற்றுநோயின் இரண்டாவது அலைக்கு மத்தியில் நாட்டின் பெரும்பாலான மாநிலங்களில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் காரணமாக ரிசர்வ் வங்கி இந்த முடிவை எடுத்துள்ளது. ஆகையால், நீங்களும் இன்னும் உங்கள் வங்கியில் KYC ஐ புதுப்பிக்கவில்லை என்றாலும், இந்த ஆண்டு இறுதி வரை உங்களுக்கு அதை செய்ய நேரம் உள்ளது. அது வரை இந்த காரணத்துக்காக உங்கள் கணக்கு முடக்கப்படாது. உங்களால் தொடர்ந்து பரிவர்த்தனை செய்ய முடியும். இதனுடன், வீடியோ KYC க்கும் ரிசர்வ் வங்கி ஒப்புதல் அளித்துள்ளது.


நாட்டின் மிகப்பெரிய வங்கியான SBI வாடிக்கையாளர்களுக்கு இது ஒரு நிவாரண செய்தியாகும். ஏனெனில் மே 31 க்குள் SBI வாடிக்கையாளர்கள் தங்கள் KYC ஐ புதுப்பிக்க வேண்டும் என வங்கி காலக்கெடுவை நிர்ணயித்திருந்தது. இருப்பினும், எஸ்பிஐ தனது வாடிக்கையாளர்களுக்கு KYC புதுப்பிப்புக்காக மின்னஞ்சல் மற்றும் அஞ்சல் வசதியை வழங்கியுள்ளது. கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக கிளைக்கு செல்ல முடியாத வாடிக்கையாளர்கள் தங்கள் KYC ஐ மின்னஞ்சல் மூலமாகவும் புதுப்பிக்கலாம்.


ALSO READ: State Bank of India முக்கிய முடிவு, வங்கி வாடிக்கையாளர்களுக்காக புதிய சேவை தொடக்கம்!


டிஜிட்டல் முறைகளில் KYC-ஐ புதுப்பிக்கலாம்


ரிசர்வ் வங்கியின் (RBI) கூற்றுப்படி, வாடிக்கையாளர்கள் தங்கள் KYC-ஐ புதுப்பிக்க டிசம்பர் 31 வரை நேரம் உள்ளது. அதற்கு முன்னர் இந்த காரணத்துக்காக வங்கிகளால் வாடிக்கையாளர்களின் கணக்கை முடக்க முடியாது. மேலும், KYC புதுப்பிப்புக்கு எளிதான வழிகள் மற்றும் டிஜிட்டல் முறைகளை பின்பற்றுமாறும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் கிளைக்கு செல்லாமலேயெ இந்த வேலையை செய்து விட முடியும்.  மையப்படுத்தப்பட்ட கே.ஒய்.சி மற்றும் டிஜி லாக்கர் மூலம் அடையாளத்தின் சான்று அதாவது ஐடி ஆதாரம் செயல்படுத்தப்பட்ட வேண்டும் என மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இது தவிர, வரையறுக்கப்பட்ட KYC கணக்குகளுக்கு முழு KYC ஐ உருவாக்குவது எளிமைப்படுத்தப்படும். வங்கி வாடிக்கையாளர்களின் ரிஸ்க் ப்ரொஃபைலின் அடிப்படையில், அவர்கள் ஒரு குறிப்பிட்ட காலத்தில் KYC ஐ புதுப்பிக்க வேண்டும்.


KYC புதுப்பிப்புகளை எஸ்பிஐயில் தபால் மூலமாகவும் அனுப்பலாம்


KYC ஐப் புதுப்பிக்க கணக்கு வைத்திருப்பவர்களுக்கு எஸ்பிஐ பல மாற்று வழிகளையும் அளித்துள்ளது. தபால் அல்லது பதிவுத் தபால், மின்னஞ்சல் ஆகியவை மூலம் ஆவணங்களை அனுப்பி  KYC ஐ புதுப்பிக்கவும் எஸ்பிஐ ஒப்புதல் அளித்துள்ளது. இப்போது எஸ்பிஐ கணக்கு வைத்திருப்பவர்கள் கேஒய்சியைப் புதுப்பிக்க வங்கி கிளைக்குச் செல்லத் தேவையில்லை. வாடிக்கையாளர்கள் KYC ஆவணங்களை தபால் அல்லது மின்னஞ்சல் வழியாக சமர்ப்பிக்கலாம்.


ALSO READ: இதை செய்யவில்லை என்றால் இனி mobile wallet பயன்படுத்த முடியாது: Paytm, PhonePe, Mobikwik பற்றிய முக்கிய செய்தி


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR