RBI Update: செயலிழந்த வங்கி கணக்குகளை மீண்டும் திறக்கும் நடைமுறையை ரிசர்வ் வங்கி தளர்த்தியுள்ளது. அதுமட்டுமின்றி, நிதி மோசடியை தடுக்க, செயல்படாத கணக்குகளில் இருந்து யாரும் பணம் எடுக்க முடியாத வகையில், விதிமுறைகளும் சற்று கடுமையாக்கப்பட்டுள்ளன. இப்போது செயல்படாத கணக்குகளை மீண்டும் திறக்க, கேஒய்சி (KYC) விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று ஆர்பிஐ (RBI) கூறுகிறது. KYC விவரங்களை வங்கியின் எந்த கிளையில் வேண்டுமானாலும் சமர்ப்பிக்கலாம். கணக்கு வைத்திருப்பவரின் வேண்டுகோளின் பேரில் வீடியோ வாடிக்கையாளர் அடையாள செயல்முறை (V-CIP) மூலமாகவும் இந்த செயல்முறையை முடிக்க முடியும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

எந்தவொரு கணக்கையும் மீண்டும் செயல்படுத்துவதற்கு வங்கிகள் (Banks) எந்த கட்டணத்தையும் வசூலிக்க முடியாது. ஒரு கணக்கு செயலிழந்தால் (Dormant Accounts), குறைந்தபட்ச இருப்புத் தொகையை பராமரிக்காததற்காக வங்கிகள் அபராதம் விதிக்க முடியாது. வங்கிகள் சேமிப்புக் கணக்கு (Savings Account) செயல்படாமல் இருந்தாலும், வட்டியை தொடர்ந்து செலுத்த வேண்டும். ஒரு வருடமாக எந்தப் பணப் பரிவர்த்தனையும் நடைபெறாத வங்கிக்கணக்குகளைக் (Bank Account) கண்டறிய ஆண்டுதோறும் ஆய்வு நடத்துமாறு வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.


வழிகாட்டுதல்கள் எப்போது நடைமுறைக்கு வரும்


ரிசர்வ் வங்கி (Reserve Bank Of India) தனது அறிக்கையில், 'நிதி மோசடி அபாயத்தைக் குறைக்க செயலற்ற கணக்குகளைக் (Inactive Accounts) கண்டறிவது முக்கியம். செயலிழந்த கணக்குகள் மீண்டும் செயல்படுத்தப்பட்டவுடன், அவற்றின் மீதான பரிவர்த்தனைகள் குறைந்தபட்சம் 6 மாதங்களுக்கு உயர் மட்டத்தில் கண்காணிக்கப்பட வேண்டும். இது குறித்து வாடிக்கையாளர் மற்றும் வங்கி ஊழியர்களுக்கு தெரிய வரக்கூடாது. செயலற்ற கணக்குகள் மூலம் நடக்கும் மோசடிகளை குறைக்க இது உதவும்.' என்று தெரிவித்துள்ளது. 


மேலும் படிக்க | Adani Hindenburg Case:அதானி குழுமத்திற்கு சாதகமான உச்ச நீதிமன்ற தீர்ப்பு


ரிசர்வ் வங்கியின் திருத்தப்பட்ட வழிகாட்டுதல்கள் (RBI Guidelines) ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வருகிறது. பிராந்திய கிராமப்புற வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகள் உட்பட அனைத்து வணிக வங்கிகளும் இந்த வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.


டெர்ம் டெபாசிட்களிலும் (Term Deposit) வங்கிகள் கவனம் செலுத்த வேண்டும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இது புதுப்பிக்கப்படாமல் இருந்தாலோ அல்லது வாடிக்கையாளர் முதிர்வுக்குப் பிறகும் தொகையைத் திரும்பப் பெறாவிட்டாலோ அல்லது அதை அவரது சேமிப்பு/நடப்புக் கணக்கிற்கு மாற்றாவிட்டாலோ, அந்த வைப்புத்தொகை க்ளெய்ம் செய்யப்படாமல் இருக்காத வண்ணம், இதை உறுதிசெய்ய, அத்தகைய கணக்குகள் மதிப்பாய்வு செய்யப்பட வேண்டும். 


ஒரு வருடத்திற்கு கணக்குகளில் பரிவர்த்தனை ஏதும் இல்லை என்றால், வங்கிகள் கணக்கு வைத்திருப்பவருக்கு தெரிவிக்க வேண்டும். வங்கிகளுக்கு பதில் வரவில்லை என்றால், அதற்கான காரணத்தைக் கண்டறிய வேண்டியது வங்கிகளின் பொறுப்பாகும். கணக்கு வைத்திருப்பவர் இறந்து விட்டால், அவரது சட்டப்பூர்வ வாரிசுகளைக் கண்டறிய விசாரணை செய்வதும் வங்கிகளின் பணிதான்.


இந்திய ரிசர்வ் வங்கியின் புதிய வழிகாட்டுதல்கள் செயல்படாத கணக்குகள் மற்றும் உரிமை கோரப்படாத டெபாசிட்களின் நிர்வாகத்தை மேம்படுத்துவதற்கான ஒரு முக்கியமான படியாகும். இந்த வழிகாட்டுதல்கள் வாடிக்கையாளர்களின் கணக்குகளின் நிலையைப் பற்றி அறிந்துகொள்ளவும் மோசடிகளைத் தடுக்கவும் உதவும்.


2023 ஆம் ஆண்டில் மத்திய வங்கியான இந்திய ரிசர்வ் வங்கி பல முக்கிய முடிவுகளை எடுத்தது. இதன் தாக்கம் சாமானியர்களின் மீதும் இருந்துள்ளது. அவ்வப்போது ஆர்பிஐ (RBI) ஏற்கனவே உள்ள திட்டங்களிலும் பல மாற்றங்களை செய்கிறது.


மேலும் படிக்க | 100 பில்லியனைத் தாண்டிய UPI ​பரிவர்த்தனைகள்! டாப் கியரில் டிஜிட்டல் பண பரிவர்த்தனை


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ