RBI Update: இந்திய ரிசர்வ் வங்கி ஒரு பெரிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்ப்பு கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களுக்கு பயனளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய ரிசர்வ் வங்கி, வரும் காலத்தில், அதாவது ஜனவரி 2024 முதல், கடன் பெறும் வாடிக்கையாளர்களுக்கு ஒரு வார கால அவகாசம், அதாவது க்ரேஸ் பீரியட் (Grace Period) வழங்கப்படும் என்று கூறியுள்ளது. வாடிக்கையாளர்களின் EMI பவுன்ஸ் ஆகிவிட்டால், ஒரு வாரத்திற்கு பயப்படத் தேவையில்லை. அந்த EMI தொகையைச் செலுத்த வாடிக்கையாளர்களுக்கு 7 நாட்களுக்கான அவகாசம் கிடைக்கும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

2 முதல் 3 கோடி வாடிக்கையாளர்கள் நேரடியாக பயனடைவார்கள்


ரிசர்வ் வங்கி (Reserve Bank) இந்த அறிவிப்பை வெளியிட்டதை அடுத்து, இரண்டு முதல் மூன்று கோடி வாடிக்கையாளர்கள் நேரடியாகப் பயனடைவார்கள் என்று தரவுகள் தெரிவிக்கின்றன. மேலும், இந்த விதி அனைத்து வங்கிகளுக்கும் NBFC களுக்கும் பொருந்தும். EMI நிலுவைத் தேதியை தவறவிட்டால், அதாவது அது பவுன்ஸ் ஆகிவிட்டால், வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு பெரும் அபராதம் விதிக்கும் நடைமுறை இதுவரை பொதுவாகக் காணப்பட்டது. அதாவது ட்யூ டேடிற்கு பிறகு EMI -ஐ செலுத்த வங்கியில் இருந்து சலுகை காலம் எதுவும் கிடைப்பதில்லை. இதனால் வாடிக்கையாளர்கள் சிரமத்திற்கு ஆளாகினர்.


ஜனவரி 2024 முதல் விதிகள் மாறலாம்


ஆனால் இனி வரும் காலங்களில் இந்த விதிகள் அனைத்தும் மாறப் போகின்றன. இதற்கான உறுதியான தேதியை ரிசர்வ் வங்கி இன்னும் வழங்கவில்லை என்றாலும், இந்த விதி 2024 ஜனவரி 1 முதல் அமல்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சமீப காலங்களில் ரிசர்வ் வங்கி (RBI) வங்கிகளை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது. பெரிய வங்கிகள் மீது ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுத்துள்ளது. ரிசர்வ் வங்கியின் செயல் பட்டியலில் (ஆக்ஷன் லிஸ்ட்) தற்போது குறைந்தது 20 வங்கிகள் சேர்க்கப்பட்டுள்ளன. அதாவது ரிசர்வ் வங்கியின் தரப்பிலிருந்து  வாடிக்கையாளர்களுக்கு நன்மை பயக்கும் இன்னும் பல வித நடவடிக்கைகளை வரும் காலங்களில் எதிர்பார்க்கலாம். 


மேலும் படிக்க | NPS புதிய விதி... SLW வசதி பயனாளிகளுக்கு பயனளிக்குமா..!


அபராதம்


இந்திய ரிசர்வ் வங்கி சமீப காலங்களில் வாடிக்கையாளர்களுக்கு சாதகமான பல அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. சமீபத்தில் ஆர்பிஐ சார்பில் கடன் வாங்கிய வாடிக்கையாளர்களுக்கு நன்மை பயக்கும் மற்றொரு அறிவிப்பு வெளியிடப்பட்டது. வாடிக்கையாளரின் புகார் 30 நாட்களுக்குள் தீர்க்கப்படாவிட்டால், தினமும் 100 ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி கடன் வழங்கும் நிறுவங்களிடம் தெரிவித்துள்ளது.


ரிசர்வ் வங்கி (Reserve Bank of India) CIBIL, Experian மற்றும் பிற அனைத்து கடன் தகவல் நிறுவனங்களுக்கான விதிகளை கடுமையாக்கியுள்ளது. கிரெடிட் ஸ்கோர் தொடர்பான பரிவர்த்தனைகளை செய்யும் நிறுவனங்களுக்கு எதிராக மத்திய வங்கி கடுமையான நடவடிக்கை எடுத்து வருகிறது. வாடிக்கையாளரின் கிரெடிட் ஸ்கோர் கேட்கப்படும்போது ஒரு எச்சரிக்கை செய்தியை அனுப்புவது அவசியம் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. நிறுவனங்கள் எஸ்எம்எஸ்/மின்னஞ்சல் மூலம் வாடிக்கையாளர்களுக்கு விழிப்பூட்டல்களை அனுப்ப வேண்டும். 30 நாட்களுக்குள் புகார் தீர்க்கப்படாவிட்டால், நிறுவனங்கள் தினமும் ரூ.100 அபராதம் வழங்கவேண்டும். 


இப்போது வாடிக்கையாளர்கள் இலவச கடன் அறிக்கையைப் பெறுலாம்


ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள மற்றொரு செய்திக்குறிப்பில், கடன் நிறுவனங்கள் ஒரு காலண்டர் வருடத்திற்கு ஒருமுறை வாடிக்கையாளர்களுக்கு (கிரெடிட் ஹிஸ்டரி உள்ளவர்கள்) இலவச கடன் அறிக்கையை (Credit Report) வழங்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளாது. இதற்காக, வங்கிகள் மற்றும் நிறுவனங்கள் தங்கள் இணையதளத்தில் ஒரு இணைப்பையும் வழங்க வேண்டும். இதன் மூலம் வாடிக்கையாளர் இலவச கடன் அறிக்கையை எளிதாகப் பெறக்கூடிய வகையில் வசதி செய்யப்பட வேண்டும் என ஆர்பிஐ (RBI) தெரிவித்துள்ளது. இந்த புதிய விதிகளின் சுற்றறிக்கை அக்டோபர் 26 அன்று ரிசர்வ் வங்கியால் வெளியிடப்பட்டது. சுற்றறிக்கை வெளியிடப்பட்ட ஆறு மாதங்களுக்குப் பிறகு இந்த விதிகள் அமலுக்கு வரும்.


மேலும் படிக்க | திரிகோணமலையில் SBI கிளையை தொடக்கி வைத்தார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ