RBI Rules For Apply New Credit Cards: கிரெடிட் கார்டுகளை சரியான விதத்தில் பயன்படுத்தினால் ஒவ்வொருவருக்கும் அது வரப்பிரசாதமாக இருக்கும். கிரெடிட் கார்டுகள் ஒரு சக்திவாய்ந்த நிதிக் கருவியாக இருக்கும். வேண்டிய நேரத்தில் பண வசதி, பாதுகாப்பு, கேஷ்பேக், வெகுமதி புள்ளிகள் மற்றும் பயணச் சலுகைகள் போன்ற பல நன்மைகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகின்றன. இருப்பினும், பலருக்கும் கிரெடிட் கார்டுகளை எப்படி பயன்படுத்துவதென்று தெரிவதில்லை. இதனால் தேவையில்லாத அதிகப்படியான கட்டணங்களை செலுத்த வேண்டிய நிலை ஏற்படுகிறது.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கிரெடிட் கார்டு மூலம் நன்மைகளை அதிகரிக்க, கிரெடிட் கார்டுகள் எவ்வாறு வேலை செய்கின்றன மற்றும் அவற்றை எவ்வாறு தேவைகளுக்கு ஏற்றவாறு பயன்படுத்துவது என்பதைப் தெரிந்து கொள்வது அவசியம். புதிதாக கிரெடிட் கார்டுக்கு விண்ணப்பிக்கும் போது, ​​வாடிக்கையாளர்கள் அவர்களுக்கு தேவையான கார்டை சரியாக தேர்ந்தெடுப்பது, செலவினங்களை நிர்வகிப்பது, வெகுமதி புள்ளிகளை பெறுவது மற்றும் கிரெடிட் ஸ்கோரை பாதிக்கும் தவறுகளைத் சரி செய்வது எப்படி என்பதில் கவனமாக இருக்க வேண்டும்.


மேலும் படிக்க | உங்கள் PF கணக்கில் எவ்வளவு பணம் இருக்கிறது? தெரிந்து கொள்ள எளிய வழிகள்!


கிரெடிட் கார்டின் நன்மைகள்


கிரெடிட் கார்ட் போனஸ்: நீங்கள் எப்படி செலவு செய்வீர்கள் என்பதை பொறுத்து கிரெடிட் கார்டை தேர்வு செய்யுங்கள்.  நீங்கள் அடிக்கடி பயணம் செய்பவராக இருந்தால் டிக்கெட் புக் செய்வதில் அதிக பலன்களை தரும் கிரெடிட் கார்டைத் தேர்வு செய்யுங்கள்.  அதேபோல, ஷாப்பிங் செய்வதற்கு கிரெடிட் கார்டை அதிகம் பயன்படுத்தினால், ஷாப்பிங்கிற்கு தள்ளுபடி மற்றும் வெகுமதிகளை வழங்கும் கார்டுகளை தேர்வு செய்வது நல்லது.


போனஸ் பாயிண்ட்: பல கிரெடிட் கார்டு நிறுவனங்கள் குறிப்பிட்ட நாட்களுக்குள் அவர்கள் வைத்துள்ள வரம்பிற்கு அதிகமாக செலவு செய்தால் புதிய வாடிக்கையாளர்களுக்கு வரவேற்பு போனஸ் புள்ளிகளை வழங்குகின்றன. ஆனால் இந்த போனஸுக்குத் தகுதிபெற நீங்கள் செலவிட வேண்டிய காலக்கெடுவைச் சரிபார்க்க வேண்டும். கிரெடிட் கார்டு பலன்களை அதிகரிக்க, உங்கள் செலவுகளுக்கு ஏற்றார் போல கிரெடிட் கார்டைத் தேர்வு செய்வது அவசியம்.  அவை உங்களுக்கு தேவையான வெகுமதிகளை வழங்குகிறது. மேலும் கிரெடிட் கார்டின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளைப் புரிந்துகொள்வதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். 


பில்கள்: கிரெடிட் கார்ட் பில்லில் தேவையில்லாத வட்டியை தவிர்க்கவும், நல்ல கிரெடிட் ஸ்கோரைப் பராமரிக்கவும் ஒவ்வொரு மாதமும் கிரெடிட் கார்டு பில்களை கட்டும் போது ஒரு ரூபாய் கூட மிச்சம் இல்லாமல் கட்டுவது நல்லது.  சிறிய தொகை மீதி இருந்தாலும் அதற்கும் அதிக வட்டி கட்டணங்கள் செலுத்த வேண்டி இருக்கும். இவை உங்கள் கிரெடிட் ஸ்கோரை எதிர்மறையாக பாதிக்கும். 


பில்லிங் சுழற்சி: பலர் கிரெடிட் கார்டு பில்லிங் தேதிகளை நினைவில் கொள்வதில் சிரமப்படுகின்றனர். இதனால் குறிப்பிட்ட தேதியில் கடனை செலுத்த முடியாமல் தேவையில்லாத வட்டியை செலுத்துகின்றனர்.  ஒவ்வொரு நபரும் கிரெடிட் கார்ட் பில்லிங் தேதியை நினைவில் கொள்வது அவசியம்.  தற்போது கிரெடிட் கார்ட் பயன்படுத்துவோர் தங்களது வேண்டிய தேதிகளில் பில்லிங் தேதியை மாற்றி கொள்ள முடியும். உங்கள் கிரெடிட் கார்டின் அனைத்து பில்களையும் சரியான நேரத்தில் செலுத்தப்படுவதை உறுதிப்படுத்தி கொள்ளுங்கள். இது நல்ல கிரெடிட் ஸ்கோரை பராமரிக்க உதவும்.


மேலும் படிக்க | ஏப்ரல் மாதம் 14 நாட்கள் வங்கிகள் விடுமுறை.. தேதி வாரியாக விவரம் இதோ!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ