புதுடெல்லி: ஒழுங்குமுறை விதிமுறைகளுக்கு இணங்காதது தொடர்பாக சில வங்கிகளுக்கு கண்டனம் தெரிவித்த மத்திய ரிசர்வ் வங்கி அபராதமும் விதித்திருக்கிறது. இது தொடர்பாக, யூனியன் பாங்க் ஆஃப் இந்தியா, ஆர்பிஎல் வங்கி மற்றும் பஜாஜ் ஃபைனான்ஸ் லிமிடெட் ஆகியவற்றுக்கு அபராதம் விதித்துள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி (Reserve Bank of India) வெள்ளிக்கிழமை (2023, அக்டோபர் 13) தெரிவித்தது. இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கையில், 'கடன்கள் மற்றும் அட்வான்ஸ்கள் - சட்டப்பூர்வ மற்றும் பிற கட்டுப்பாடுகள்' தொடர்பான வழிகாட்டுதல்களை மீறியதற்காக, யூனியன் பேங்க் ஆஃப் இந்தியாவுக்கு ரூ. 1 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ரிசர்வ் வங்கியின் தனியார் துறை வங்கிகளில் பங்குகள் அல்லது வாக்களிக்கும் உரிமையைப் பெறுவதற்கான முன் அனுமதி வழிகாட்டுதல்கள், 2015 இன் சில வழிகாட்டுதல்களுக்கு இணங்காததற்காக தனியார் துறை RBL வங்கி லிமிடெட் மீது ரூ. 64 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்று மத்திய வங்கி தெரிவித்துள்ளது. 


அதேபோல, பஜாஜ் ஃபைனான்ஸ் லிமிடெட் மீது '2016ம் ஆண்டின் என்பிஎஃப்சி (ரிசர்வ் வங்கி) வழிகாட்டுதல்கள், மோசடிகளைக் கண்காணித்தல்' விதிமுறைகளுக்கு இணங்காததற்காக ரூ.8.5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.


இந்த விதிமீறல்கள் அனைத்துமே அபராதங்கள் ஒழுங்குமுறை இணக்கத்தில் உள்ள குறைபாடுகளை அடிப்படையாகக் கொண்டவை என்றும், அந்தந்த வாடிக்கையாளர்களுடன் நிறுவனங்கள் செய்துள்ள எந்தவொரு பரிவர்த்தனை அல்லது ஒப்பந்தத்தின் செல்லுபடியாகும் தன்மையைப் பற்றி பேச விரும்பவில்லை என்றும் மத்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.  


மேலும் படிக்க | PIDF திட்டத்தின் கீழ் வருகிறது விஸ்வகர்மா திட்டம்! அதிரடி அறிவிப்பை வெளியிட்ட RBI


இதற்கிடையில், அகமதாபாத், தி சுவிகாஸ் மக்கள் கூட்டுறவு வங்கி லிமிடெட் (Suvikas People's Co-operative Bank Ltd) மற்றும் அகமதாபாத் தி கலுபூர் வணிக கூட்டுறவு வங்கி லிமிடெட் (The Kalupur Commercial Co-operative Bank Ltd) உடன் இணைக்கும் திட்டத்திற்கு ரிசர்வ் வங்கி ஒப்புதல் அளித்துள்ளது.


இந்தத் திட்டம் அக்டோபர் 16 முதல் அமலுக்கு வருகிறது. தி சுவிகாஸ் மக்கள் கூட்டுறவு வங்கி லிமிடெட் கிளைகள் அக்டோபர் 16 முதல் கலுபூர் வணிக கூட்டுறவு வங்கியின் கிளைகளாக செயல்படும்.


இதற்கு முன்னதாக, நாட்டில் பணவீக்க விகிதம் குறைந்துள்ளது. இதற்கு காரணம், இந்திய ரிசர்வ் வங்கி (RBI) தொடர்ந்து நான்காவது முறையாக வட்டி விகிதத்தை அதிகரிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பணவீக்கத்தை குறைக்கவே இந்த முடிவு எடுத்துள்ளது. இந்த காலாண்டில் ரெப்போ விகிதம் 6.50 சதவீதமாக இருக்கும் என்றும் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் தெரிவித்தார். இதே பணவீக்க விகிதம், மூன்றாம் காலாண்டில் 5.7 சதவீதத்திலிருந்து 5.6 சதவீதமாகவும், நான்காவது காலாண்டில் 5.2 சதவீதமாகவும் இருக்கும்.


இதன் தாக்கத்தால், நாட்டின் சில்லறை பணவீக்கம் கடந்த 3 மாதங்களில் இல்லாத அளவுக்கு குறைந்துள்ளது என்பது இந்திய பொருளாதாரத்திற்கு நல்ல செய்தியாக இருக்கிறது. 


மேலும் படிக்க | பஜாஜ் கிரெடிட் கார்டுகளை ஆன்லைனில் உடனடியாக பெறுவது எப்படி?


 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ