கூட்டுறவு வங்கிக்கு RBI தடை விதிப்பு; இனி பணம் எடுக்கவும் முடியாது, போடவும் முடியாது..
கர்நாடகாவின் டெக்கான் நகர கூட்டுறவு வங்கி லிமிடெட் நிறுவனத்திற்கு ரிசர்வ் வங்கி 6 மாதங்களுக்கு தடை விதித்துள்ளது..!
கர்நாடகாவின் டெக்கான் நகர கூட்டுறவு வங்கி லிமிடெட் நிறுவனத்திற்கு ரிசர்வ் வங்கி 6 மாதங்களுக்கு தடை விதித்துள்ளது..!
RBI Restrictions: கர்நாடகாவின் டெக்கான் நகர கூட்டுறவு வங்கி லிமிடெட் (Deccan Urban Co-Operative bank) ரிசர்வ் வங்கியால் தடை செய்யப்பட்டுள்ளது. பிப்ரவரி 19 மாலை, இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளன. இதன் கீழ் வங்கி இப்போது நிர்ணயிக்கப்பட்ட நிபந்தனைகளுடன் செயல்பட முடியும். இந்த கட்டுப்பாடு தற்போது 6 மாதங்களுக்கு அமலில் இருக்கும்" என ரிசர்வ் வங்கி (RBI) வங்கி தெரிவித்துள்ளது.
ஆயிரம் ரூபாய்க்கு மிகாமல் திரும்பப் பெறலாம்
ரிசர்வ் வங்கியின் உத்தரவுப்படி, டெக்கான் நகர கூட்டுறவு வங்கியின் வாடிக்கையாளர்கள் ஆயிரம் ரூபாய்க்கு மேல் திரும்பப் பெற முடியாது. இந்த விதி அனைத்து கணக்குகளுக்கும் பொருந்தும். அனைத்து வகையான கணக்குகள், சேமிப்புக் கணக்கு (Saving Account) அல்லது நடப்புக் கணக்கில் (Current Account) கட்டுப்பாடுகள் பொருந்தும். தற்போது, இந்த தடை (Restriction) 6 மாதங்களுக்கு விதிக்கப்பட்டுள்ளது. வங்கியின் நிதி நிலை (Financial Situation) மறுஆய்வு (Review) செய்யப்படும், அதன்பிறகு மேலும் முடிவு எடுக்கப்படும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
ALSO READ | ’ஊடகங்களிடம் இருந்து விலகியே இருங்க’ - RBI தனது அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை
வழங்கவும் தடை செய்யபட்டுள்ளது
கர்நாடகாவின் டெக்கான் நகர கூட்டுறவு வங்கி இனி வாடிக்கையாளர்களுக்கு புதிய கடன்களை வழங்க முடியாது. இது தவிர, இனி பணம் வங்கியில் டெபாசிட் (Deposit) செய்யப்படாது. வங்கியின் பண நிலையை கருத்தில் கொண்டு ரிசர்வ் வங்கி இந்த முடிவை எடுத்துள்ளது. டெக்கான் நகர கூட்டுறவு வங்கியின் அனைத்து பரிவர்த்தனைகளும் ஆராயப்படுகின்றன. வங்கி மூழ்கும் ஆபத்து ஏற்படாத வகையில் வைப்புத்தொகை மற்றும் திரும்பப் பெறுதல் ஆகியவற்றுக்கு இடையில் சமநிலையை நிலைநிறுத்துவதே ரிசர்வ் வங்கியின் முயற்சி.
வங்கி உரிமம் ரத்து செய்யப்படவில்லை
விசாரணை நோக்கத்திற்காக டெக்கான் நகர கூட்டுறவு வங்கி தடை செய்யப்பட்டுள்ளது என்று ரிசர்வ் வங்கி தெளிவுபடுத்தியுள்ளது, ஆனால் வங்கியின் உரிமம் ரத்து செய்யப்படவில்லை. இதன் பொருள் வாடிக்கையாளர்களின் பணம் இப்போது முற்றிலும் பாதுகாப்பானது, ஆனால் அவர்களால் தங்கள் சொந்த விருப்பப்படி பணத்தை எடுக்க முடியாது. எந்தவொரு வதந்திகளையும் புறக்கணிக்குமாறு ரிசர்வ் வங்கி வங்கியின் வாடிக்கையாளர்களிடமும் கோரிக்கை விடுத்துள்ளது.
வங்கி மூழ்கினால் என்ன நடக்கும்
எந்தவொரு சூழ்நிலையிலும் வங்கி மூழ்கினால், வாடிக்கையாளருக்கு ரூ .5 லட்சம் வரை இழப்பீடு கிடைக்கும் என்று மோடி அரசு 2021-22 பட்ஜெட்டில் மீண்டும் வலியுறுத்தியுள்ளது. உங்கள் கணக்கில் 5 லட்சத்திற்கும் குறைவாக டெபாசிட் செய்திருந்தால், உங்கள் பணம் அனைத்தும் பாதுகாப்பானது, ஆனால் உங்கள் கணக்கில் 5 லட்சத்துக்கு மேல் டெபாசிட் செய்திருந்தால், உங்களுக்கு 5 லட்சம் ரூபாய் மட்டுமே கிடைக்கும். முன்னதாக இந்த வரம்பு ஒரு லட்சம் ரூபாயாக இருந்தது, இப்போது அது 5 லட்சமாக குறைக்கப்பட்டுள்ளது.
உலக நிகழ்வுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள ZEE இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்...
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR