அதானிக்கு அள்ளிக்கொடுத்த SBI-ன் கடந்த 3 மாத லாபம் என்ன தெரியுமா? பல கோடியாம்..!
அதானிக்கு லோன் கொடுத்திருக்கும் எஸ்பிஐ வங்கி, கடந்த காலாண்டில் மட்டும் 14,205.34 கோடி ரூபாய் லாபத்தை ஈட்டியுள்ளது.
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா டிசம்பர் 31 ஆம் தேதியுடன் முடிவடைந்த, காலாண்டில் வரலாறு காணாத லாபத்தை பெற்றுள்ளது. இது வங்கி முதலீட்டாளர் மத்தியில் நம்பிக்கையை கொடுத்துள்ளது. இது குறித்து வங்கி முதலீட்டாளர்கள் பேசும்போது, கடந்த ஆண்டு ஐடி நிறுவன பங்குகள் அதிக லாபத்தை கொடுத்த நிலையில், இந்த ஆண்டு வங்கி துறை பங்குகள் அதிக லாபத்தை கொடுத்துள்ளன. வங்கிகளின் நிதி நிலமையும் சிறப்பாக உள்ளது. இது முதலீட்டு வாய்ப்பை அதிகப்படுத்தும். பங்குச் சந்தை நிபுணர்கள் இதனை முன்பே கணித்திருந்த நிலையில் இப்போது, எஸ்பிஐ வங்கியின் லாபம் தொடர்பான காலாண்டு முடிவுகளும் வெளியாகியுள்ளன.
மேலும் படிக்க | அதானி மொத்தம் இழந்தது எத்தனை லட்சம் கோடி தெரியுமா? சாம்ராஜ்ஜியம் எழுவது சாத்தியமா?
எஸ்பிஐ வங்கியின் கடந்த காலாண்டைப் பொறுத்தவரை நிகர லாபம் 68.5% அதிகரித்துள்ளது. அதாவது கடந்த காலாண்டில் மட்டும் 14,205.34 கோடி ரூபாய் லாபமாக ஈட்டியுள்ளது எஸ்பிஐ. இதுவே எஸ்பிஐ வெளியிட அதிகப்படியான காலாண்டு லாபமாகும். இதேபோல் எஸ்பிஐ வங்கியின் நிகர வட்டி வருமானம் இந்த காலாண்டில் 38,068.62 கோடி ரூபாய். இதனை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் காலாண்டுடன் ஒப்பிடுகையில் 24% அதிகம்.
இதேபோல் எஸ்பிஐ வங்கியின் செயல்பாட்டு லாபமும் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது 36 விழுக்காடு அதிகரித்து 25,219 கோடியாக உள்ளது. டிசம்பர் காலாண்டிற்கான உள்நாட்டு நிகர வட்டி வரம்பு (NIM) 29 அடிப்படை புள்ளிகள் உயர்ந்து 3.69 சதவீதமாக அதிகரித்துள்ளது. நிகரச் செயல்படாத சொத்து விகிதம் (NPA) 0.77% ஆக உள்ளது. கடன் வளர்ச்சி எஸ்பிஐ வங்கியின் கடன் வளர்ச்சி கடந்த ஆண்டை காட்டிலும் 17.60 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது.
மேலும் படிக்க | இந்திய பட்ஜெட் 2023 வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கு சாதகமா? இல்லை பாதகமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ