வோடபோன் ஐடியா மற்றும் ஏர்ட்டெல்லை தொடர்ந்து ரிலையன்ஸ் ஜியோ தனது வாடிக்கையாளர்களின் கட்டணத்தை 40 % உயர்த்துவதாக அறிவிப்பு!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வோடபோன் ஐடியா மற்றும் ஏர்ட்டெல்லை தொடர்ந்து ரிலையன்ஸ் ஜியோ தனது வாடிக்கையாளர்களின் கட்டணத்தை 40 % உயர்த்துவதாக அறிவித்துள்ளது. ஆனால் 300 % கூடுதல் தன்மைகளை வழங்க உள்ளதாக அறிவித்துள்ளது. வரும் டிசம்பர் 6 ஆம் தேதி முதல் புதிய பிளான்கள் நடைமுறைக்கு வரவுள்ளது.


ப்ரீபெய்ட் திட்டங்களில் ரிலையன்ஸ் ஜியோவின் கட்டண உயர்வு குறித்து கவனிக்க வேண்டிய மற்றொரு விஷயம் என்னவென்றால், தொலைத் தொடர்பு ஆபரேட்டர் டிசம்பர் 6 முதல் விலைகளை உயர்த்த உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். மற்ற நிறுவனங்கள் டிசம்பர் 3 ம் தேதி முதல் கட்டணத்தை உயர்த்த உள்ளன.


ரிலையன்ஸ் ஜியோவின் இந்த புதிய ஆல் இன் ஒன் திட்டங்களின் நன்மைகளைப் பற்றி குறிப்பிட்டுள்ளது. 40 % வரை கட்டணத்தை உயர்த்தினாலும் 300%  அதிகப்படியான நன்மைகளை வழங்குவதாக அறிவித்துள்ளது. எனவே, ரிலையன்ஸ் ஜியோ விலையை உயர்த்தினாலும், இது ஆல் இன் ஒன் திட்டங்களின் சில நன்மைகளையும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. புதிய பிளான்களின் கட்டண விபரம் டிசம்பர் 6 ஆம் தேதி வெளியாகலாம்.


இது குறித்து ஜியோ நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில்; ‘AIO திட்டத்தின் கீழ், ஒரு மாதத்துக்கு தினசரி 2 ஜி.பி டேட்டா மற்றும் அன்லிமிடேட் ஜியோ கால்கள், பிற நெட்வொர்க் எண்களுக்கு 1000 நிமிஷங்கள் என கொண்ட பேக்கிற்கான கட்டணமாக 222 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக மாதத்துக்கு 111 ரூபாய் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மூன்று மாதத்துக்கு மேற்கூறிய திட்டத்துக்கு 444 ரூபாய் ஆகும்.