புதுடெல்லி: மக்களின் வாழ்க்கையில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும் பல விஷயங்களில் சில வார்த்தைகள் அனைவருக்கும் பரிச்சயமானதாக இருந்தாலும், அதன் பொருள் முழுமையாகத் தெரியாது. அதுபோன்ற முக்கியமான வார்த்தைகளில் ஒன்று தான் ரெப்போ விகிதம் ஆகும். வீடு வாங்குபவரின் வீட்டுக் கடன் தவணை, பே கமிஷன் (7th central pay commission), ஊதியங்கள், வருங்கால வைப்பு நிதி (EPF), தனிநபர் கடன் என மக்களின் அன்றாட வாழ்க்கையிஐ இது பாதிக்குமா என்ற கேள்வியும் எழலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உண்மையில், ரெப்போ ரேட் என்பது வட்டி விகிதம் என்பதால், மக்களின் இயல்பு வாழ்க்கையை  பாதிக்கும் என்றும், செலவினங்களில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று சொன்னாலும், பே கமிஷன் ஊதியம், வருங்கால வைப்பு நிதி ஆகியவற்றில் பாதிப்பை ஏற்படுத்தாது என்று சொல்லலாம்.


பொதுமக்களின் வாழ்க்கையில், பல நிதிசார் செயல்பாடுகளையும் ரெப்போ விகிதம் எவ்வாறு பாதிக்கிறது என்பதை தெரிந்து கொள்வது அவசியம் ஆகும். அதற்கு முன் ரெப்போ வட்டி விகிதம் என்பதன் முழுமையான பொருளை அறிந்துக் கொள்வோம்.


ரெப்போ வட்டி விகிதம் என்றால் என்ன?
ஒரு நாட்டின் மத்திய வங்கியான அந்நாட்டில் இருக்கும் வணிக வங்கிகளுக்கு வழங்கும் கடனுக்கு விதிக்கும் வட்டி விகிதம்தான் ரெப்போ வட்டி விகிதம் (Repurchase Agreement or Repurchasing Option (REPO)) என்று அழைக்கப்படுகிறது. சந்தை நிலவரத்திற்கு ஏற்ப இந்த வட்டி விகிதம் மாற்றத்திற்கு உட்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. ரெப்போ விகிதமானது (repo rate)  மக்களின் வாங்கும் திறனில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை கொண்டுள்ளது. இதைப் பற்றிய தெளிவான புரிதல் அவசியம். 


ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதம்


ரெப்போ வட்டி விகிதம் என்பதைப் போலவே, ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதம் (reverse repo rate) என்ற சொல்லையும் அதிகம் கேட்டிருக்கலாம். வணிக வங்கிகள் மத்திய வங்கிக்கு கொடுக்கும் கடனுக்கு, ரிசர்வ் வங்கி வழங்கும் வட்டி விகிதம் 'ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதம்' எனப்படுகிறது.


ரெப்போ வட்டி விகிதத்தை மத்திய வங்கி உயர்த்தினால் பணவீக்கம் கட்டுப்படும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். அதாவது ரெப்போ வட்டி விகிதம் அதிகமாக இருந்தால், ரிசர்வ் வங்கியிடம் இருந்து கடன் வாங்குவதற்கு முன், வங்கிகள் பலமுறை யோசிக்கும். இதனால், வங்கிகள் கையிருப்பு பணம் குறையும்.


மேலும் படிக்க | கடன் வாங்கியவர்களுக்கு நல்ல செய்தி: RBI ரெப்போ விகிதம் குறித்து வந்த பெரிய தகவல்


பணவீக்கம்


பொது மக்களின் கைகளுக்கு பணம் வருவதற்கான ஆதாரமாக இருக்கும் வங்கிகளிடம் பணம் குறைந்தால், மக்களின் செலவு செய்யும் திறனும் குறையும். இது மக்கள் தங்கள் செலவுகளை கட்டுப்படுத்த முயல்வார்கள். அதாவது அதிகம் செலவு செய்ய தயங்குவார்கள்.  இதனால் பொருட்களின் விலை குறையும் என்பது ஒருபக்கம் என்றால், விலை உயர்வு அதிகம் இருக்காது என்பதும் பணவீக்கம் கட்டுப்படும் என்பதும் அனைவரும் புரிந்துக் கொள்ள வேண்டிய முக்கியமான பொருளியல் கோட்பாடு ஆகும். 


ரெப்போ விகிதம் அதிகரித்தால், பொருளாதாரத்தில் ஒட்டுமொத்த பண விநியோகம் குறையும். மாறாக, ரெப்போ விகிதம் குறைந்தால், வங்கிகள் பெறும் மற்றும் கொடுக்கும் கடன்கள் அதிகரித்து, பணப் புழக்கம் அதிகரிக்கும். 


ரெப்போ விகிதம் ரியல் எஸ்டேட் சந்தையை பாதிக்குமா?


ரெப்போ விகிதத்தில் ஏற்படும் மாற்றம் ரியல் எஸ்டேட் உட்பட பொருளாதாரத்தின் அனைத்து துறைகளையும் பாதிக்கிறது. சொத்து வாங்குவதற்கு முதலீடு தேவைப்படுவதால், மக்கள் கடன்களை வாங்கி சொத்துக்களை வாங்குகின்றனர். கடன் கொடுக்கும் வங்கிகளின் திறனும், செலவு செய்யும் பொதுமக்களின் மனோபாவத்தையும் தீர்மானிக்கும் ரொப்போ ரேட், ரியல் எஸ்டேட் துறையில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.


மேலும் படிக்க | ரிசர்வ் வங்கி அதிரடி உத்தரவு! இந்த வங்கியில் ரூ.50,000க்கு மேல் பணம் எடுக்க முடியாது!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ