Reserve Bank of India: பெரும்பாலான மக்கள் தாங்கள் கடினமாக உழைத்து சம்பாதிக்கும் பணத்தை வங்கிகளில் சேமிக்கிறார்கள். தொழில்நுட்பம் வளர்ந்துவிட்ட இந்த காலத்தில் டிஜிட்டல் பணம், பல வித முதலீட்டு திட்டங்கள், பத்திரங்கள் என பல வகையான சேமிப்பு முறைகள் வந்துவிட்டாலும், வங்கியில் மொத்தமான ஒரு இருப்பு உள்ளது என்ற எண்ணம்தான் நிதி ரீதியாக ஒரு பலத்தை அளிக்கின்றது. அந்த அளவிற்கு வங்கிகளில் நம் பணம் பாதுகாப்பாக இருக்கும் என்ற நம்பிக்கை நம்மிடையே உள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆனால், உங்கள் வங்கிக் கணக்கில் வைப்புத் தொகை பாதுகாப்பாக உள்ளதா? இதை எப்படி உறுதி செய்வது? இதற்கான உத்தரவாதத்தை யார் அளிப்பார்கள்? இது குறித்து சமீபத்திய அப்டேட் ஒன்று உள்ளது. இதை பற்றி இந்த பதிவில் காணலாம்.  


இந்திய ரிசர்வ் வங்கியின் (Reserve Bank of India) துணை ஆளுநர் எம்.ராஜேஷ்வர் ராவ் சமீபத்தில் இது குறித்த சில முக்கியமான தகவல்களை தெரிவித்துள்ளார். வங்கிகளில் செய்யப்படும் டெபாசிட்களுக்கான காப்பீட்டுத் தொகையின் தற்போதைய வரம்பான ரூ.5 லட்சத்தை அவ்வப்போது திருத்தம் செய்து அதிகரிக்க வேண்டும் என அவர் பரிந்துரைத்துள்ளார். நாட்டின் பொருளாதார வளர்ச்சி மற்றும் முறைப்படுத்தல் காரணமாக வங்கிகளில் செய்யப்படும் வைப்புத்தொகைகள் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறிய அவர், இதனால், டெபாசிட்களுக்கு அதிக காப்பீட்டுத் தேவை தேவை என்று கூறினார்.


வங்கிகளில் செய்யப்படும் டெபாசிட் மீதான காப்பீடு:


- இந்தியாவில் உள்ள வங்கிச் சட்டங்களின்படி, வணிக வங்கிகளில் வைத்திருக்கும் பணத்திற்கு, ஒரு டெபாசிட்டருக்கு ரூ.5 லட்சம் என்ற வகையில் ஒரே மாதிரியான வைப்புத்தொகை காப்பீடு (Insurance) பொருந்தும்.


- இதற்கான தொகையை இன்னும் அதிகரிக்க வேண்டும் என ராவ் கூறுகிறார். வைப்புத்தொகைக்கான காப்பீட்டுத் தொகையை அதிகரிப்பதற்கான சரியான விருப்பங்களைக் கருத்தில் கொள்வது முக்கியம் என அவர் மேலும் தெரிவிக்கிறார்.


- கவரேஜ் மற்றும் பணத்திற்கான பாதுகாப்பு தற்போது திருப்திகரமாக உள்ளது.


- ஆனால் எதிர்காலத்தில் சவால்கள் வரக்கூடும் என ராவ் எச்சரிக்கிறார்.


- இது தவிர டிஜிட்டல் டெபாசிட் திட்டங்களும் ஒரே மாதிரியான காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட வேண்டும் என்றும் அவர் பரிந்துரைக்கிறார்.


RBI Update: ரிசர்வ் வங்கியின் துணை கவர்னர் சுட்டிக்காட்டிய வேறு சில முக்கிய அம்சங்கள் பற்றி இங்கே காணலாம்: 


- வங்கிகளில் பணத்தை செபாசிட் செய்யும் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும், அதாவது டெபாசிட்டர்களுக்கும் (Depositers) முழு காப்பீட்டுத் தொகையை (Insurance Coverage)  வழங்குவது சாத்தியமில்லை.


மேலும் படிக்க | மத்திய அரசு ஊழியர்களுக்கு 2 பெரிய அப்டேட்: செப்டம்பரில் டிஏ ஹைக்.... டிஏ அரியர் தொகை என்ன ஆச்சு?


- வங்கிகளில் சிறிய தொகையை வைத்திருக்கும் தனிநபர்கள் பற்றி கலந்தாலோசிக்கப்பட வேண்டும். மேலும், மூத்த குடிமக்களின் (Senior Citizens) டெபாசிட்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும்.


- எதிர்காலத்தில் எந்தச் சிக்கலும் ஏற்படாமல் இருக்க, காப்பீட்டு வரம்பை அவ்வப்போது மதிப்பாய்வு செய்து உயர்த்துவது முக்கியம்.


- வங்கிகள் புதிய டெபாசிட் திட்டங்களை அவ்வப்போது கொண்டு வருவதால், ரிஸ்க் பேஸ்ட் பிரீமியங்கள் இந்த விஷயத்தில் காப்பீட்டு முறையை பலப்படுத்தலாம்.


நாட்டில் தற்போதுள்ள வைப்புத்தொகை காப்பீட்டு முறையின் கீழ், ஒரு வங்கியின் செயல்பாடுகளில் சிக்கல் ஏற்பட்டு அது திவால் ஆனாலோ, மூடப்பட்டாலோ, வைப்புத்தொகையாளர்களுக்கு காப்பீட்டு நிதியில் இருந்து பணம் செலுத்தப்படும்.


IADI எனப்படும் இன்டர்நேஷனல் அசோசியேஷன் ஆஃப் டெபாசிட் இன்ஷூரர்ஸ் (International Association of Deposit Insurers) மெற்கொண்ட கருத்துக்கணிப்பு முடிவுகளின்படி, டெபாசிட் காப்பீடு கவரேஜ் நாட்டில் 43.1 சதவீத டெபாசிட்களை உள்ளடக்கியது. மார்ச் 31, 2024 நிலவரப்படி, 97.8 சதவீத வங்கிக் கணக்குகள் முழுமையாக காப்பீட்டு கட்டமைப்பின் கீழ் உள்ளன. இது உலகளாவிய அளவில் 80 சதவீதத்திற்கும் அதிகமாகும்.


மேலும் படிக்க | SCSS: மூத்த குடிமக்களுக்கான அட்டகாசமான சேமிப்பு திட்டம்... பாதுகாப்பான வருமானம் கேரண்டி


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ