மத்திய அரசு ஊழியர்களுக்கு 2 பெரிய அப்டேட்: செப்டம்பரில் டிஏ ஹைக்.... டிஏ அரியர் தொகை என்ன ஆச்சு?

7th Pay Commission, DA Hike: 7வது ஊதியக் குழுவின் படி, மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி (Dearness Allowance) மற்றும் அகவிலை நிவாரணம் (Dearness Relief) இந்த ஆண்டுக்கான இரண்டாவது அகவிலைப்படி திருத்தத்தில் 3% அதிகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

7th Pay Commission, DA Hike: சமீபத்தில் ஜூன் 2024 -க்கான ஏஐசிபிஐ குறியீட்டு எண்கள் வெளியிடப்பட்டன. இதைத் தொடர்ந்து அகவிலைப்படி அதிகரிப்பு குறித்த தெளிவு கிடைத்துள்ளது. டிசம்பர் 2023 முதல் ஜூன் 2024 வரை, CPI-IW 2.6 புள்ளிகள் உயர்ந்துள்ளது. இது 138.8 இல் இருந்து 141.4 ஆக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, அகவிலைப்படி 50.28% இல் இருந்து 53.36% ஆக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது மிகப்பேரிய ஊதிய உயர்வுக்கு வழி வகுக்கும். இதற்கிடையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு மற்றொரு அப்டேட்டும் உள்ளது. கொரோனா பெருந்தோற்றின் போது முடக்கப்பட்ட அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணத்தின் நிலுவைத் தொகை கிடைப்பது கடினமாகத்  தோன்றுகிறது.

1 /10

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஓரு முக்கியமான அப்டேட் உள்ளது. ஜூலை 2024-க்கான அகவிலைப்படி உயர்வு பற்றிய அறிவிப்பை மத்திய அரசு அடுத்த மாதம், அதாவது செப்டம்பர் முதல் வாரத்தில் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்காக மத்திய அரசு ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் ஆவலோடு காத்திருக்கிறார்கள். இதனுடன் மற்றொரு செய்தியும் உள்ளது. அதைப் பற்றி இங்கே காணலாம். 

2 /10

7வது ஊதியக் குழுவின் படி, மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி (Dearness Allowance) மற்றும் அகவிலை நிவாரணம் (Dearness Relief) இந்த ஆண்டுக்கான இரண்டாவது அகவிலைப்படி திருத்தத்தில் 3% அதிகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதன் பிறகு மொத்த அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் 53% ஆக உயரும். இது மிகப்பெரிய நிவாரணமாக அமையும். 

3 /10

இதற்கிடையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு மற்றொரு அப்டேட்டும் உள்ளது. கொரோனா பெருந்தோற்றின் போது முடக்கப்பட்ட அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணத்தின் நிலுவைத் தொகை கிடைப்பது கடினமாகத்  தோன்றுகிறது. இதற்காக ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

4 /10

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில், சமீபத்தில் இரண்டு உறுப்பினர்கள் 18 மாத டிஏ அரியர் தொகை குறித்து அரசாங்கம் எடுத்துள்ள முடிவை பற்றி கேள்வி எழுப்பினர். கோவிட் 19 தொற்றுநோயின் போது நிறுத்தி வைக்கப்பட்ட மத்திய அரசு ஊழியர்கள்/ஓய்வூதியதாரர்களின் 18 மாத அகவிலைப்படி/ அகவிலை நிவாரணம் வழங்குவது குறித்து அரசாங்கம் தீவிரமாக பரிசீலித்து வருகிறதா என்ற கேள்விக்கு, நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி, 'இல்லை' என்று பதிலளித்தார். இது ஊழியர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.  

5 /10

அரசின் இந்த முடிவுக்கு பின்னால் உள்ள காரணத்தை விளக்கி, சௌத்ரி நாடாளுமன்றத்தில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், “கோவிட்-19 பெருந்தொற்றால் ஏற்பட்ட பொருளாதார சீர்குலைவால் ஏற்பட்ட அசாதாரண சூழல் காரணமாக மத்திய அரசு ஊழியர்கள்/ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு 01.01.2020, 01.07.2020 மற்றும் 01.01.2021 -க்கான அகவிலைப்படி அலவன்சுகளை முடக்குவதற்கான முடிவு எடுக்கப்பட்டது. அரசாங்க நிதி மீதான அழுத்தத்தை குறைக்கவும் நலிந்த பிரிவினருக்கான பல்வேறு நலத்திட்டங்களுக்காகவும் இந்த தொகை பயன்படுத்தப்பட்டது. பெருந்தோற்றால் ஏற்பட்ட நிதி தாக்கம் மற்றும் அரசாங்கத்தால் எடுக்கப்பட்ட நலன்புரி நடவடிக்கைகள் ஆகியவற்றிற்கு ஆன செலவின் தாக்கம் 2020-21 நிதியாண்டுக்கு அப்பாலும் சென்றது. இதனால் DA/DR நிலுவைத் தொகையை அளிப்பது சாத்தியமானதாகக் கருதப்படவில்லை." என்று தெரிவித்தார்.

6 /10

டிஏ அரியர் குறித்து தொழிற்சங்கங்களிடமிருந்து அரசாங்கம் பிரதிநிதித்துவங்களைப் பெற்றுள்ளதா என்ற கேள்விக்கு பதிலளித்த சௌத்ரி, "2024 ஆம் ஆண்டில் தேசிய கூட்டு ஆலோசனை அமைப்புகளின் கவுன்சில் (NCJCM) உள்ளிட்ட அரசு ஊழியர் சங்கங்களிடமிருந்து பிரதிநிதித்துவங்கள் பெறப்பட்டுள்ளன" என்று தெரிவித்தார்ர். முன்னதாக, 2023 ஆம் ஆண்டு மக்களவையில் இது குறித்து பேசிய அவர், "... மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு மூன்று தவணைகளில் வழங்கப்பட வேண்டிய அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் முடக்கப்பட்டதன் காரணமாக, 34,402.32 கோடி ரூபாய் சேமிக்கப்பட்டு, கோவிட்-19 தொற்றுநோயின் பொருளாதாரப் பாதிப்பைக் குறைக்கும் பணிகளில் பயன்படுத்தப்பட்டது." என்று கூறியிருந்தார்.

7 /10

டிஏ அரியர் தொகை மீண்டும் கிடைப்பதற்கான வாய்ப்பு கிட்டத்தட்ட இல்லை என்றே தொன்றுகிறது. இது மத்திய அரசு ஊழியர்களுக்கு பெரிய ஏமாற்றமாகவே உள்ளது. இதற்காக நீண்ட காலமாக ஊழியர் சங்கங்கள் போராடி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

8 /10

இதற்கிடையில் செப்டம்பரில் கிடைக்கவுள்ள டிஏ உயர்வு பற்றிய செய்தி சற்று நிவாரணத்தை அளித்துள்ளது. 7வது ஊதியக்குழுவின் படி, தொழிலாளர் அமைச்சகத்தின் மூலம் வெளியிடப்படும் ஏஐசிபிஐ குறியீட்டு (AICPI Index) எண்களின் அடிப்படையில் அகவிலைப்படி தீர்மானிக்கப்படுகின்றது. ஜனவரி மாத அகவிலைப்படி முந்தைய ஆண்டின் ஜூலை முதல் டிசம்பர் வரையிலான ஏஐசிபிஐ குறியீட்டு எண்களின் அடிப்படையிலும், ஜூலை மாத அகவிலைப்படி ஜனவரி முதல் ஜூன் வரையிலான ஏஐசிபிஐ குறியீட்டு எண்களின் அடிப்படையிலும் கணக்கிடைப்படுகின்றது.

9 /10

சமீபத்தில் ஜூன் 2024 -க்கான ஏஐசிபிஐ குறியீட்டு எண்கள் வெளியிடப்பட்டன. இதைத் தொடர்ந்து அகவிலைப்படி அதிகரிப்பு குறித்த தெளிவு கிடைத்துள்ளது. டிசம்பர் 2023 முதல் ஜூன் 2024 வரை, CPI-IW 2.6 புள்ளிகள் உயர்ந்துள்ளது. இது 138.8 இல் இருந்து 141.4 ஆக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, அகவிலைப்படி 50.28% இல் இருந்து 53.36% ஆக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது மிகப்பேரிய ஊதிய உயர்வுக்கு வழி வகுக்கும்.

10 /10

பொறுப்பு துறப்பு: இந்த பதிவு தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதன் மூலம் அகவிலைப்படி உயர்வுக்கான எந்தவித உத்தரவாதமும் அளிக்கப்படவில்லை. சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அரசாங்க தளங்களை அணுக பரிந்துரைக்கபப்டுகின்றது.