பணவீக்கம் உயர்வு எதிரொலி.. காய்கறிகள் 36%; பருப்பு வகைகள் 14% விலை உயர்வு
நாட்டின் சில்லறை பணவீக்கம் அதிகரித்துள்ளதால், உணவு விலைகள் உயர்ந்து கொண்டே வருகிறது. அதாவது 20 அத்தியாவசிய உணவு பொருட்களின் விலைகள் அதிகரித்து வருகின்றன
புதுடில்லி: நாட்டின் சில்லறை பணவீக்கம் அதிகரித்துள்ளதால், உணவு விலைகள் உயர்ந்து கொண்டே வருகிறது. அதாவது காய்கறிகளின் விலை 36 சதவீதமும், பருப்பு வகைகள் 14 சதவீதமும் அதிகரித்துள்ளது. நேற்று தேசிய புள்ளிவிவர அலுவலகம் (என்எஸ்ஓ) வெளியிட்டுள்ள தகவல்களின்படி, நவம்பர் மாதத்தில் உணவு பணவீக்கம் 7.89 சதவீதத்திலிருந்து 10.01 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிராமப்புற சில்லறை பணவீக்கம் நவம்பரில் 4.29 சதவீதத்திலிருந்து 5.27 சதவீதமாகவும், நகர்ப்புற சில்லறை பணவீக்கம் 5.11 சதவீதத்திலிருந்து 5.76 சதவீதமாகவும் அதிகரித்துள்ளது எனக் கூறப்பட்டு உள்ளது.
மேலும் உணவு விலைகள் அதிகரித்ததால் நவம்பர் மாதத்தில் பணவீக்கம் அதிகரித்துள்ளது. சில்லறை பணவீக்கம் 4.62% இலிருந்து 5.54% ஆக உயர்ந்துள்ளது. இதனால் தானியங்களின் விலை அதிகரித்துள்ளது. உணவு பணவீக்கம் 7.89 சதவீதத்திலிருந்து 10.01 சதவீதமாக உயர்ந்துள்ளது. முன்னதாக, சில்லறை பணவீக்கம் அக்டோபரில் 4.62 சதவீதமாக இருந்தது. சில்லறை பணவீக்க விகிதம் செப்டம்பர் மாதத்தில் 3.99 சதவீதமாக இருந்தது. சில்லறை பணவீக்க விகிதம் கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நவம்பரில் மிக உயர்ந்த மட்டத்திற்கு சென்றுள்ளது என்பது தெளிவாகி தெரிகிறது.
தொழில் உற்பத்தி துறை தொடர்ந்து வீழ்ச்சியை நோக்கை சென்றுகொண்டு இருப்பதால், பல நிறுவனங்கள் தங்கள் தொழிற்சாலையை மூடி வருகின்றனர். இதனால் பலர் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே பலர் வேலை இழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆட்டோமொபைல், மின்சாரம், சுரங்கம் போன்ற துறைகள் வீழ்ச்சி அடைந்துள்ளது. வேலை இல்லா நிலை உருவாகி வருவதால், மக்களிடையே பண புழக்கமும் குறைந்து விட்டது. இதனால் ஜி.எஸ்.டி. வரி வசூலும் குறைந்துள்ளது.
பருப்பு வகைகள் உட்பட உணவுப் பொருட்கள் விலை உயர்வால் தான் நாட்டின் பணவீக்க விகிதத்தில் மாற்றம் அதிக அளவில் உள்ளது எனவும் கூறப்படுகிறது.
வரவிருக்கும் காலாண்டில் பணவீக்கம் அதிகரிக்கக்கூடும் என்று நாணயக் கொள்கையை மறுஆய்வு செய்யும் போது இந்திய ரிசர்வ் வங்கி சமீபத்தில் கூறியது. பணவீக்க விகிதத்தை 4% வரம்பிற்குள் வைத்திருக்குமாறு இந்திய ரிசர்வ் வங்கியை அரசாங்கம் கேட்டுள்ளது. ஆனால் அது 2 சதவீத விளிம்பில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
சரியான நடவடிக்கைகள் மற்றும் நிதி ஊக்கத்தின் மூலம் தனிநபர் துறை மட்டத்தில் முதலீட்டு நம்பிக்கையை அதிகரிப்பதே காலத்தின் தேவை. இந்தியா வளர்ச்சியில் கவனம் செலுத்த வேண்டும் என்று பொருளாதார நிபுணர்கள் தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர். கடந்த மாதத்தில் சில்லறை பணவீக்க விகிதம் அதிகரித்து இருப்பது,இந்திய பொருளாதாரம் மோசமான நிலையை நோக்கி செல்வதை சுட்டி காட்டுவதாக உள்ளது.
உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.