மும்பை: FMGC பிரிவில் முன்னணி நிறுவனமாகத் திகழும் இந்த நிறுவனம் ராக்கெட் வேகத்தில் வளர்ச்சி அடைந்து வருகிறது. ருச்சி சோயா நிறுவனம் கனவிலும் நினைத்துப்பார்க்க முடியாத அளவிற்கு வெறும் 5 மாத காலத்தில் இந்நிறுவனப் பங்குகள் சுமார் 8,800 சதவீதம் வளர்ச்சி அடைந்து முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜனவரி 27 அன்று, மும்பை பங்குச்சந்தையில் ருச்சி சோயா ஒரு பங்கு 16.9 ரூபாய் விலையில் பட்டியலிட்டது. 


 


READ | வரும் ஆண்டுகளில் பதஞ்சலி நாட்டின் மிகப்பெரிய FMCG நிறுவனமாகும்...


 


பதஞ்சலி நிறுவனம் கடந்த வருடம் பல முன்னணி நிறுவன போட்டிக்கு மத்தியில் இந்நிறுவனத்தை 4,350 கோடி ரூபாய்க்கு கைப்பற்றியது. இதில் 4,235 கோடி ரூபாய் தொகையை இந்நிறுவனத்திற்குக் கடன் கொடுத்தவர்களுக்குக் கொடுக்கப்பட்ட நிலையில் 115 கோடி ரூபாயை வர்த்தக விரிவாக்கம் மற்றும் மூலதனத்திற்காக முதலீடு செய்தது பதஞ்சலி நிறுவனம்.


 


READ | COVID-19-னை குணப்படுத்தும் என கூறப்பட்ட கொரோனில் மாத்திரை தடை செய்யப்படலாம்...


 


இந்த அதிரடி வளர்ச்சி மூலம் ருச்சி சோயா நிறுவனத்தின் சந்தை மதிப்பு 44,592 கோடி ரூபாயாக உயர்ந்து இந்தியாவின் டாப் 100 நிறுவனங்கள் பட்டியலில் சேர்ந்துள்ளது. இதன் மூலம் 44,482 கோடி ரூபாய் மதிப்புடைய மாரிகோ நிறுவனத்தைப் பின்னுக்குத் தள்ளியுள்ளது.