COVID-19-னை குணப்படுத்தும் என கூறப்பட்ட கொரோனில் மாத்திரை தடை செய்யப்படலாம்...

அரசு வழங்கிய உரிமத்தில் கொரோனாவுக்கு தீர்வாக கொரோனில்(Coronil) பயன்படுத்தலாம் என குறிப்பிடவில்லை என உத்தரகண்ட் AYUSH அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Last Updated : Jun 24, 2020, 03:22 PM IST
  • 'கொரோனில்' மருந்தைப் பயன்படுத்தி ஒரு வாரத்தில் நோயாளிகளை குணப்படுத்த முடியும் என்றும் ராம்தேவ் கூறினார்.
  • அரசு வழங்கிய உரிமத்தில் கொரோனாவுக்கு தீர்வாக கொரோனிலை பயன்படுத்தலாம் என குறிப்பிடவில்லை என உத்தரகண்ட் AYUSH அமைச்சகம் தெரிவித்துள்ளது.
  • கொரோனா தொடர்பான எந்தவொரு மருந்திற்கும் உரிமம் பெற திவ்யா பார்மசி(Divya Pharmacy) விண்ணப்பிக்கவில்லை.
COVID-19-னை குணப்படுத்தும் என கூறப்பட்ட கொரோனில் மாத்திரை தடை செய்யப்படலாம்... title=

அரசு வழங்கிய உரிமத்தில் கொரோனாவுக்கு தீர்வாக கொரோனில்(Coronil) பயன்படுத்தலாம் என குறிப்பிடவில்லை என உத்தரகண்ட் AYUSH அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றை போக்க தனது நிறுவனத்தின் மருந்து கொரோனில்(Coronil) உதவும் என யோகா குரு பாபா ராம்தேவ் அறவித்த சில மணி நேரத்திற்கு பின்னர், கொரோனில் மருந்து கொரோனா-வை குணப்படுத்தும் என விளப்பரப்படுதக்கூடாது,  அரசு வழங்கிய உரிமத்தில் கொரோனாவுக்கு தீர்வாக கொரோனிலை பயன்படுத்தலாம் என குறிப்பிடவில்லை எனவும் உத்தரகண்ட் AYUSH அமைச்சகம் தெரிவித்துள்ளது.

READ | ராம்தேவின் கொரோனா சிகிச்சை: Coronil பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை...

உத்தரகண்ட் மாநிலத்தைச் சேர்ந்த மாநில மருத்துவ உரிம ஆணையத்தின் இணை இயக்குநர் டாக்டர் YS ராவத் இதுகுறித்து குறிப்பிடுகையில்., கொரோனா தொடர்பான எந்தவொரு மருந்திற்கும் உரிமம் பெற திவ்யா பார்மசி(Divya Pharmacy) விண்ணப்பிக்கவில்லை, இது தொடர்பாக அவர்களுக்கு எந்த உரிமமும் வழங்கப்படவில்லை. நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் மற்றும் காய்ச்சல் மருந்தாக பயன்படுத்த மட்டுமே கொரோனில்(Coronil)-க்கு உரிமம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் குறித்து தற்போது AYUSH துறையின் கவனத்திற்கு வந்துள்ளதால், திவ்யா பார்மசிக்கு அறிக்கை கோரி கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இதற்கு நிறுவனம் தரப்பில் இருந்து திருப்திகரமான பதில் வரவில்லை என்றால், அவர்களின் தற்போதைய உரிமங்களும் ரத்து செய்யப்படும்" என குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக செவ்வாயன்று, COVID-19 நோய் தொற்றை தீர்பதற்கான மருந்தாக 'கொரோனில்' பயன்படுத்தலாம். இது முற்றிலும் ஆயுர்வேத முறைப்படி தயாரிக்கப்பட்ட மருந்து, COVID-19 தொற்று பெற்ற நோயாளிகள் கொரோனில் மாத்திரைகளை எடுத்துக்கொள்வதன் மூலம் முழுமையாக நலம் பெறுவர் என பாபா ராம்தேவின் பதாஞ்சலி தெரிவித்தது.

READ | கொரோனா-வை குணப்படுத்தும் ஆயுர்வேத மருந்தை அறிமுகம் செய்தது பதாஞ்சலி!...

மேலும் இந்த 'கொரோனில்' மருந்தைப் பயன்படுத்தி ஒரு வாரத்தில் நோயாளிகளை குணப்படுத்த முடியும் என்றும் ராம்தேவ் கூறினார். 'கொரோனில்' என்ற இந்த மருந்து மூலம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பொருட்டு, பதஞ்சலி 'திவ்யா கொரோனா கிட்'  ஒன்றையும் அவர் உருவாக்கியுள்ளார். அடுத்த வாரத்திற்குள் 'கொரோனில்' மருந்து நாடு முழுவதும் கிடைக்கும் என்று பதஞ்சலி தெரிவித்த நிலையில் தற்போது இந்த மருந்திற்கான உரிமத்தை ரத்து செய்ய உத்ரகாண்ட் AYUSH அமைச்சகம் முயற்சித்து வருகிறது.

Trending News