புதுடில்லி: கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் லிமிடெட் செலுத்த வேண்டிய கடன் நிலுவைத் தொகையை மீட்டெடுக்கும் முயற்சிகள் தொடர்பாக கர்நாடக உயர்நீதிமன்றம் விதித்த உத்தரவை எதிர்த்து விஜய் மல்லையாவின் United Breweries Holdings Limited (UBHL) உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தது. யுனைடெட் ப்ரூவரிஸ் ஹோல்டிங்ஸ் லிமிடெட் (யுபிஹெச்எல்) தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. .


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நீதிபதி யு.யூ.லலித் (Justice UU Lalit) தலைமையிலான தலைமையிலான உயர் நீதிமன்ற அமர்வு யு.பி.எச்.எல் (UBHL) தாக்கல் செய்த மேல்முறையீட்டை ஏற்க மறுத்துவிட்டது. யுபி குழுமத்தின் 102 வயதான தாய் நிறுவனத்தை கையகப்படுத்துவதை உச்ச நீதிமன்றம் உறுதிப்படுத்தியது.


எஸ்பிஐ தலைமையிலான வங்கிகளின் கூட்டமைப்பின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி, இதுவரை மல்லையாவிடம் இருந்து சுமார் 3,600 கோடி ரூபாய் மீட்கப்பட்டுள்ளதாக குறிப்பிடார். மேலும், மல்லையா மற்றும் யுபிஹெச்எல் நிறுவனங்களிடம் இருந்து இன்னும் 11,000 கோடி ரூபாய் கடன் நிலுவை இருப்பதாக முகுல் ரோஹ்தகி உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தார்.


அமலாக்க இயக்குநரகம் (ED) நிறுவனத்தின் சொத்துக்களை இணைத்திருக்கக்கூடாது, ஏனெனில் இவை எஸ்பிஐ தலைமையிலான வங்கிகளின் கூட்டமைப்பின் சார்பில் கணக்கிடப்பட்ட சொத்துக்கள் என்று வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி சுட்டிக் காட்டினார். எனவே மல்லையா கடன் வாங்கிய எஸ்பிஐ தலைமையிலான வங்கிகளின் கூட்டமைப்பில் இடம் பெற்றிருக்கும் வங்கிகளுக்கு தான் சொத்துக்கள் மீது முதல் உரிமை உண்டு என்று அவர் வாதிட்டார்.  


Also Read | Diwali Gift: நவம்பர் 5 ஆம் தேதிக்குள் இந்த வாடிக்கையாளர்களுக்கு வங்கிகள் கேஷ்பேக் வழங்கும்


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR