சட்ட விரோத போராட்டத்தை தூண்டும் வகையிலான பதிவுகளை நீக்காததற்காக கூகிள், பேஸ்புக், ட்விட்டர் ஆகிய நிறுவனக்களின் மீது ரஷ்யா வழக்கு தொடர்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ட்விட்டர் (Twitter), கூகிள் (Google), பேஸ்புக் (Facebook)ஆகியவற்றுக்கு எதிராக, ஒவ்வொன்றின் மீதும்  தலா மூன்று வழக்குகள் உள்ளன. இந்த வழக்குகளில், சட்ட விதிகளை மீறியது நிரூபிக்கப்பட்டால், 4 மில்லியன் ரூபிள் வரை (சுமார், $54,000) அபராதம் விதிக்கப்படும், மேலும் டிக்டாக் (Tiktok) மற்றும் டெலிகிராம் (Telegram) மீதும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

சட்டவிரோத ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்குமாறு குழந்தைகளை ஊக்குவிக்கும் வகையிலான பதிவுகளை நீக்கத் தவறியதாக ரஷ்ய (Russia) அதிகாரிகள் ஐந்து சமூக ஊடக (Social Media) தள நிறுவனங்கள் மீது வழக்குத் தொடுத்துள்ளனர் என்று இன்டர்ஃபேக்ஸ் செய்தி நிறுவனம் (Interfax news agency) செவ்வாயன்று மாஸ்கோ நீதிமன்றத்தை மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டுள்ளது.

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை (Vladimir Putin) விமர்சனம் செய்யும் முக்கிய விமர்சகரான அலெக்ஸி நவல்னியை கடந்த மாதம் சிறையில் அடைத்தது தொடர்பாக நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடைப்பெற்ற நிலையில்,  இந்த வழக்குகள் போடப்பட்டுள்ளன.

ஒரு மோசடி வழக்கு தொடர்பான ஜாமீன் விதிகளை மீறியதற்காக அவருக்கு விதிக்கப்பட்டுள 30 மாத சிறைத்தண்டனை அரசியல் காரணங்களுக்காகவும்,  நவால்னியை ஒடுக்குவதற்காகவும் விதிக்கப்பட்டுள்ளதாக அவரது ஆதரவாளர்களும் கூறுகின்றனர். ஆனால், ரஷிய அதிகாரிகள் இதனை மறுக்கின்றனர்


இன்டர்ஃபேக்ஸ்  அறிக்கை குறித்து கருத்து தெரிவிக்க கூகிள் மறுத்துவிட்டது. பேஸ்புக், ட்விட்டர், டிக்டாக் மற்றும் டெலிகிராம் ஆகிய நிறுவனங்களும் உடனடியாக பதிலளிக்கவில்லை.


கூகிள், பேஸ்புக் மற்றும் ட்விட்டர் மீதான வழக்குகள் ஏப்ரல் 2 ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று கூறப்படுகிறது.


ALSO READ | மியான்மாரில் இரும்பு கரம் கொண்டு போராட்டத்தை ஒடுக்கும் ராணுவம்...!!!


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR