இந்தியா-ரஷ்யா S-400 பாதுகாப்பு ஒப்பந்தத்தால் கடுப்பான US: விளைவுகள் பற்றி எச்சரிக்கை

ரஷ்யாவுடனான ஒப்பந்தத்தை முன்னெடுத்துச் சென்றால் புதுடெல்லி மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை விதிக்கக்கூடும் என்று அமெரிக்காவின் எச்சரிக்கை இருந்தபோதிலும் இந்த ஒப்பந்தத்தை இறுதி செய்ய இந்தியா முடிவு செய்தது.

Written by - ZEE Bureau | Last Updated : Jan 5, 2021, 10:25 AM IST
  • ரஷ்ய பாதுகாப்பு அமைப்பை இந்தியா வாங்குவதால் கோவமுற்றது அமெரிக்கா.
  • இந்தியா மீது பொருளாதாரத் தடைகளை விதிக்கக்கூடும்.
  • இந்தியாவும் ரஷ்யாவும் அக்டோபர் 2018 இல் 5 பில்லியன் டாலர் மதிப்பிலான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
இந்தியா-ரஷ்யா S-400 பாதுகாப்பு ஒப்பந்தத்தால் கடுப்பான US: விளைவுகள் பற்றி எச்சரிக்கை

ரஷ்யாவிடமிருந்து S-400 வான் பாதுகாப்பு அமைப்பை வாங்க பல பில்லியன் டாலர் ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்கான இந்தியாவின் முடிவு அமெரிக்காவை கோவப்படுத்தியுள்ளது. இந்தியாவின் இந்த முடிவு, இந்தியா மீது பொருளாதாரத் தடைகளை விதிக்க வாஷிங்டனைத் தூண்டக்கூடும் என்று அமெரிக்க காங்கிரஸின் அறிக்கை எச்சரித்துள்ளது.

காங்கிரஸின் ஆராய்ச்சி சேவை (CRS) காங்கிரசுக்கு அளித்த அறிக்கையில், "அதிக தொழில்நுட்ப பகிர்வு மற்றும் இணை உற்பத்தி முயற்சிகளில் ஈடுபட இந்தியா ஆர்வமாக உள்ளது. அதே நேரத்தில் இந்தியா தனது பாதுகாப்பு ஆஃப்செட் கொள்கையில் அதிக சீர்திருத்தங்களை செய்ய வேண்டும் என்றும் அதன் பாதுகாப்பு துறையில் அந்நிய நேரடி முதலீட்டை அதிகப்படுத்த வேண்டும் என்றும் அமெரிக்கா வலியுறுத்துகிறது" என்று கூறியுள்ளது. CRS என்பது அமெரிக்க காங்கிரசின் சுயாதீனமான இரு கட்சி ஆராய்ச்சி பிரிவு என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

"காங்கிரஸ் உறுப்பினர்கள் தகவலறிந்து அதற்கேற்ப முடிவுகளை எடுப்பதற்காக" இந்த அறிக்கையை தயார் செய்துள்ளதாக CRS கூறியது. "ரஷ்யா தயாரித்த S-400 வான் பாதுகாப்பு செயல்முறையை வாங்குவதற்கான இந்தியாவின் (India) பல பில்லியன் டாலர் ஒப்பந்தம், இந்தியா மீது பொருளாதாரத் தடைகளை விதிக்க அமெரிக்காவைத் தூண்டக்கூடும். இது அமெரிக்காவின் எதிரிகளை பொருளாதாரத் தடைகள் மூலம் எதிர்கொள்ளும் சட்டத்தின் கீழ் செய்யப்படலாம்” என்று அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

CRS-ன் அறிக்கைகள் அமெரிக்க (America) காங்கிரஸின் உத்தியோகபூர்வ அறிக்கைகள் அல்ல. அமெரிக்க அரசாங்கம் அமைச்சர்களும் சட்டமியற்றுபவர்களும் தகவலறிந்த முடிவுகளை எடுக்க உதவுவதற்காக சுயாதீன வல்லுநர்கள் CRS-ன் அறிக்கைகளைத் தயாரிக்கிறார்கள்.

ALSO READ: Shocking! Pfizer தடுப்பூசி எடுத்துக்கொண்ட 2 நாட்களுக்குப் பிறகு பெண் மரணம்!

இந்தியாவும் ரஷ்யாவும் (Russia) அக்டோபர் 2018 இல் 5 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. இதன் கீழ் S-400 வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்புகளின் ஐந்து யூனிட்களை மாஸ்கோ இந்தியாவுக்கு வழங்கும் என்று ஒப்புக் கொள்ளப்பட்டது. இந்த ஒப்பந்தத்தை முன்னெடுத்துச் சென்றால் புதுடெல்லி மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை விதிக்கக்கூடும் என்று அமெரிக்காவின் எச்சரிக்கை இருந்தபோதிலும் இந்த ஒப்பந்தத்தை இறுதி செய்ய இந்தியா முடிவு செய்தது.

டிசம்பர் 15 அன்று, ரஷ்யாவிடமிருந்து S-400 விமான பாதுகாப்பு அமைப்புகளை வாங்கியதற்காக அமெரிக்கா துருக்கி (Turkey) மீது பொருளாதாரத் தடைகளை விதித்தது. 2019 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் ரஷ்யாவிலிருந்து துருக்கி தரையில் இருந்து வானில் உள்ள இலக்கைத் தாக்கும் இந்த வான்வழி பாதுகாப்பு அமைப்பை வாங்கியது என்பது குறிப்பிடத்தக்கது. தான் ரஷ்யாவிடமிருந்து இந்த பாதுகாப்பு அமைப்புகளை வாங்கியதால், நேட்டோ (NATO) நட்பு நாடுகளுக்கு எந்த அச்சுறுத்தலும் இருக்காது என அந்த நேரத்தில் துருக்கி கூறியிருந்தது.

S-400 ட்ரையம்ஃப், நிலத்திலிருந்து வானில் உள்ள இலக்கைத் தாக்கும் (SAM) ஒரு மொபைல் பாதுகாப்பு அமைப்பாகும். இது இயக்க முறைமையில் உலகின் மிகவும் ஆபத்தான நவீன நீண்ட தூர SAM (MLR SAM) என்று கருதப்படுகிறது. அமெரிக்காவால் உருவாக்கப்பட்ட டர்மினல் அதி உயர பிராந்திய பாதுகாப்பு அமைப்பை (THAAD) விட S-400 மிகச் சிறந்தது என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.

ALSO READ: Jack Ma Missing: Alibaba நிறுவனரை காணவில்லை, சீன சதியா? திடுக்கிடும் உண்மைகள்!!

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

More Stories

Trending News