SBI Alert: இந்த தேதி முதல் IMPS பரிவர்த்தனைக்கு அதிக கட்டணம் செலுத்த வேண்டும்
2 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரையிலான IMPS பரிவர்த்தனைகளுக்கு வங்கி வாடிக்கையாளர்களிடம் ரூ.20 + ஜிஎஸ்டி வசூலிக்கும் என்று எஸ்பிஐ இணையதளம் கூறுகிறது.
புதுடெல்லி: இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (SBI ) உடனடி கட்டண சேவை (SBI) மூலம் பண பரிவர்த்தனைக்கான வரம்பை ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தியுள்ளது. இருப்பினும் வாடிக்கையாளர்களுக்கு வருத்தம் அளிக்கக்கூடிய செய்தி என்னவென்றால், இதற்கு வங்கி வாடிக்கையாளர்களிடம் கட்டணம் வசூலிக்கும்.
2 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரையிலான IMPS பரிவர்த்தனைகளுக்கு வங்கி உங்களிடம் ரூ.20 + ஜிஎஸ்டி வசூலிக்கும் என்று எஸ்பிஐ இணையதளம் கூறுகிறது. இந்தக் கட்டணங்கள் பிப்ரவரி 1, 2022 முதல் அமலுக்கு வரும்.
SBI Anywhere Personal ஐப் பயன்படுத்தி IMPS மூலம் ரூ. 2 லட்சத்துக்கும் குறைவாக பணம் அனுப்புவதற்கான கட்டணம் எதுவும் இல்லை.
IMPS (உடனடி கட்டண சேவை) என்றால் என்ன?
IMPS சேவையானது நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (NPCI) ஆல் வழங்கப்படுகிறது. இது வாடிக்கையாளர்களுக்கு வங்கிகள் மற்றும் RBI-யால்அங்கீகரிக்கப்பட்ட ப்ரீபெய்ட் பேமென்ட் இன்ஸ்ட்ரூமென்ட் வழங்குநர்கள் (PPI) மூலம் இந்தியா முழுவதும் பணத்தை உடனடியாகப் பரிமாற்றம் செய்ய உதவுகிறது.
ALSO READ | வாடிக்கையாளர்களுக்கு சூப்பர் பயன்களை வழங்கும் SBI வங்கியின் 3-in-1 வசதி!
ஏடிஎம், இன்டர்நெட் பேங்கிங் போன்ற பிற சேனல்கள் மூலமாகவும் இது நீட்டிக்கப்படுகிறது. IMPS உட்புற மற்றும் வெளிப்புற பரிவர்த்தனைகள் 24X7 கிடைக்கின்றன. ஏனெனில் IMPS இன் உள் மற்றும் வெளிப்புற பரிவர்த்தனைகளுக்கு விடுமுறைக் கட்டுப்பாடுகள் இல்லை.
இந்திய ரிசர்வ் வங்கி (RBI) அக்டோபர் 2021 இல், உடனடி கட்டண சேவை (ஐஎம்பிஎஸ்) தினசரி பரிவர்த்தனை வரம்பை ரூ. 2 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்துவதாக அறிவித்தது.
“உடனடி கட்டண சேவை (IMPS) பல்வேறு சேனல்கள் மூலம் வாரத்தின் ஏழு நாட்களும் 24 மணி நேரமும் (24x7) உடனடி உள்நாட்டு நிதி பரிமாற்ற வசதியை வழங்குகிறது. IMPS அமைப்பின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டும், மேம்பட்ட நுகர்வோர் வசதிக்காகவும், ஒரு பரிவர்த்தனைக்கான வரம்பை ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.
ALSO READ | SBI FD Interest Rates: SBI வாடிக்கையாளர்களுக்கு கிடைத்த பம்பர் பரிசு இதோ
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR