SBI Big update: வீட்டில் இருந்தபடியே இனி இதையும் ஆன்லைனில் செய்யலாம், அசத்தும் SBI!!
நீங்கள் SBI-ல் சேமிப்புக் கணக்கு வைத்திருந்து, உங்கள் வங்கி கிளையை மாற்ற விரும்பினால், SBI-யின் ஆன்லைன் வங்கி சேவைகளைப் பயன்படுத்தி உங்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் இந்த வேலையை செய்து விடலாம்.
புதுடெல்லி: நாட்டின் மிகப்பெரிய கடன் வழங்குநரான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (SBI) தனது வாடிக்கையாளர்களுக்கு ஒரு பெரிய நிவாரணத்தை அளித்துள்ளது.
நீங்கள் SBI-ல் சேமிப்புக் கணக்கு வைத்திருந்து, உங்கள் வங்கி கிளையை மாற்ற விரும்பினால், SBI-யின் ஆன்லைன் வங்கி சேவைகளைப் பயன்படுத்தி உங்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் இந்த வேலையை செய்து விடலாம். இதற்கான நீங்கள் வங்கிக் கிளைக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை.
கொரோனா தொற்றுநோயைக் (Coronavirus) கருத்தில் கொண்டு ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா இந்த முழு செயல்முறையையும் ஆன்லைனில் செய்துள்ளது.
"உங்கள் வங்கிக் கணக்கை ஒரு கிளையிலிருந்து மற்றொரு கிளைக்கு மாற்ற விரும்பினால், அதன் செயல்முறையை SBI எளிதாக்கும். YONO SBI, YONO Lite மற்றும் ஆன்லைன் SBI ஆகியவற்றைப் பயன்படுத்தி உங்கள் வீட்டின் வசதியிலிருந்து பாதுகாப்பாக வங்கி செயல்முறைகளை செய்யுங்கள்" என்று எஸ்பிஐ ட்வீட் செய்துள்ளது.
ஆன்லைனில் வங்கி கிளையை மாற்றும்போது நினைவில் கொள்ள வேண்டிய விஷயங்கள்
இணைய வங்கி (Online Banking) வசதி மூலம் உங்கள் SBI கிளையை எளிதாக மாற்றலாம். இணைய வங்கி மூலம் SBI சேமிப்புக் கணக்கின் கிளையை மாற்றுவதற்கான கோரிக்கையை உள்ளிடுவதற்கு, நீங்கள் கணக்கை மாற்ற விரும்பும் வங்கிக் கிளையின் கிளைக் குறியீடு (Branch Code) உங்களுக்குத் தேவைப்படும். மேலும், உங்கள் மொபைல் எண்ணை வங்கியில் பதிவு செய்து இணைய வங்கி செயல்பாட்டை தொடங்க வேண்டும்.
ALSO READ: SBI வாடிக்கையாளர்களுக்கு ஹேப்பி நியூஸ்! வீட்டில் இருந்தபடியே KYC பூர்த்தி செய்யலாம்!
SBI வங்கிக் கிளையை ஆன்லைனில் மாற்றுவதற்கான படிப்படியான செயல்முறை இதோ:
1. முதலில் onlinesbi.com என்ற SBI-யின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் லாக் இன் செய்யவும்.
2. 'Personal Banking' விருப்பத்தை கிளிக் செய்யவும்.
3. பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல்லைக் கிளிக் செய்யவும்.
4. இதற்குப் பிறகு உங்கள் முன் e-service என்ற டேப் காணப்படும் அதை கிளிக் செய்யவும்.
5. 'Transfer Savings Account'-ல் கிளிக் செய்யவும்.
6. மாற்றப்பட வேண்டிய உங்கள் கணக்கைத் தேர்ந்தெடுக்கவும்.
7. நீங்கள் கணக்கை மாற்ற விரும்பும் கிளையின் IFSC குறியீட்டை எழுதவும்.
8. எல்லாவற்றையும் ஒரு முறை சரிபார்த்து உறுதிப்படுத்தல் (Confirm) பொத்தானை அழுத்தவும்.
9. உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் OTP கிடைக்கும். அதை நிரப்பி பின்னர் உறுதிப்படுத்தவும்.
10. சில நாட்களுக்குப் பிறகு, நீங்கள் கோரிய கிளைக்கு உங்கள் கணக்கு மாற்றப்படும்.
ஆன்லைன் செயல்முறை தவிர, YONO செயலி அல்லது YONO Lite மூலமும் உங்கள் கிளையை மாற்றலாம். உங்கள் மொபைல் எண் உங்கள் வங்கிக் கணக்குடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள், இல்லையெனில் நீங்கள் OTP இல்லாமல் கணக்கை மாற்ற முடியாது. கொரோனா தொற்றுநோயைக் கருத்தில் கொண்டு, எஸ்பிஐ அதன் அனைத்து சேவைகளையும் ஆன்லைனில் செய்துள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் கிளைக்குச் சென்று எந்த வேலையும் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. இதனால் வாடிக்கையாளர்களுக்கு மிகுந்த நன்மை கிடைக்கிறது.
ALSO READ: SBI Alert, மே 31க்குள் இதை செய்து விடவும், இல்லையெனில்..
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR