State Bank of India வங்கியில் உயர் பாதுகாப்பு கடவுச்சொல்லை எவ்வாறு அமைப்பது?

ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் OTP- அடிப்படையிலான உயர் பாதுகாப்பு கடவுச்சொல்லை (OTP) அமைக்க வேண்டும் என்பதைக் குறித்து தெரிந்துக்கொள்ளுங்கள்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Apr 26, 2021, 03:20 PM IST
State Bank of India வங்கியில் உயர் பாதுகாப்பு கடவுச்சொல்லை எவ்வாறு அமைப்பது? title=

ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் உங்கள் மொபைல் தொலைபேசியில் எச்சரிக்கை வேண்டுமானால், உங்கள் எஸ்பிஐ கணக்கிற்கு உயர் பாதுகாப்பு கடவுச்சொல்லை (OTP) அமைக்க வேண்டும். அதை எப்படி அமைப்பது, அதனால் என்ன பயன்கள் என்பதைக் குறித்து தெரிந்துக்கொள்ளுங்கள்.

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (State Bank of India), வாடிக்கையாளர்களின் பரிவர்த்தனைகளை பாதுகாப்பானதாக்க மாற்ற ஒன் டைம் கடவுச்சொல் (OTP) முறையை கொண்டு வந்துள்ளது. உங்கள் வாங்கிக் கணக்கின் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பான பரிவர்த்தனைகளை உறுதிப்படுத்த, இந்த OTP அடிப்படையிலான செயல்முறை கொண்டு வரப்பட்டு உள்ளது. இது உங்கள் வங்கிகணக்கின் பாதுகாப்பை அடுத்தகட்டத்திற்கு எடுத்துச்செல்லும். 

"வாடிக்கையாளர்களின் கூடுதல் பாதுகாப்பிற்காக எங்கள் OTP அடிப்படையிலான பரிவர்த்தனை எஸ்பிஐ ஆன்லைன் வங்கியை பாதுகாப்பானதாக்குகிறது. இப்போது நீங்கள் வீட்டில் இருந்தபடியே கவலையில்லாமல் வங்கி பரிவர்த்தனை மேற்கொள்ளலாம்" என்று ட்வீட் மூலம் வங்கி சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ALSO READ |  SBI Alert! இந்த சேவையை உபயோகம் செய்வதற்க்கு முன்பு மிகுந்த கவனம் தேவை!

ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் உங்கள் மொபைல் தொலைபேசியில் ஒரு எச்சரிக்கையை நீங்கள் பெற விரும்பினால், உங்கள் எஸ்பிஐ வங்கிகணக்கிற்கு உயர் பாதுகாப்பு கடவுச்சொல்லை (OTP) அமைக்க வேண்டும்.

எஸ்பிஐயில் உயர் பாதுகாப்பு பாஸ்வேர்ட் எவ்வாறு அமைப்பது?

1) உங்கள் பயனர்பெயர் (Username) மற்றும் கடவுச்சொல் (Password) மூலம் எஸ்பிஐயின் ஆன்லைன் இணையதளத்தில் உள்நுழைக.

2) ‘எனது கணக்குகள் & சுயவிவரம்’ (My Accounts & Profile) என்பதைக் கிளிக் செய்க.

3) ‘உயர் பாதுகாப்பு கடவுச்சொல்’ (High-Security Password) இணைப்பைக் கிளிக் செய்து சுயவிவர கடவுச்சொல்லைப் பயன்படுத்தி, அடுத்த பக்கத்திற்குச் செல்லவும்.

4) அடுத்த பக்கத்தில், கீழே கொடுக்கப்பட்டுள்ளபடி உங்களுக்கு சில பாதுகாப்பு விருப்பங்கள் (Security Options) காண்பிக்கப்படும்.

ALSO READ |  State Bank of India முக்கிய முடிவு, வங்கி வாடிக்கையாளர்களுக்காக புதிய சேவை தொடக்கம்!

கீழே காண்பிக்கப்படும் கிரெடிட் கார்டு பரிவரத்தனை, ஐ.எம்.பி.எஸ், சர்வதேச நிதி பரிமாற்றம் போன்ற பரிவர்த்தனைகளுக்கு "உயர் பாதுகாப்பு கடவுச்சொல்" தேவை என்பதைத் தேர்ந்தெடுத்தால், எல்லா பரிமாற்றங்களுக்கும் நீங்கள் OTP ஐப் பெறுவீர்கள். ஒருவேளை நீங்கள் "தேவை இல்லை" என்பதைத் தேர்ந்தெடுத்தால், ஒரு நாளில் ரூ. 10,000 வரை பரிவர்த்தனைகளுக்கு OTP ஐப் பெற அவசியம் இல்லை.

 

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News