புதுடெல்லி: நவராத்திரி கொண்டாட்டங்களுக்கு இடையே நாட்டின் மிகப்பெரிய வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (SBI), தன்னுடைய கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களுக்கு பெரிய பரிசை அளித்துள்ளது. அனைத்து வகையான கடன்களுக்கும் பெரிய அளவிலான தள்ளுபடியை அளிக்கப்போவதாக SBI அறிவித்துள்ளது. இந்த தள்ளுபடி வங்கியின் டிஜிட்டல் வங்கி செயலியான யோனோ (Yono) டிஜிட்டல் வங்கி செயலியில் (Yono Digital Banking App) மட்டுமே கிடைக்கும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

100 சதவீதம் தள்ளுபடி


பண்டிகை காலங்களில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த திட்டத்தின் கீழ், Yono மூலம் பெறப்படும் வீட்டுக் கடன், கார் கடன் மற்றும் பிற கடன்களுக்கான செயலாக்கக் கட்டணங்களுக்கு 100% தள்ளுபடி வழங்கப்படுகிறது. அதே நேரத்தில், வீட்டுக் கடன்களுக்கான வட்டி விகிதத்தில் தள்ளுபடியையும் வங்கி அறிவித்துள்ளது.


வீட்டுக் கடனின் வட்டி விகிதங்கள் இந்த அறிவிப்பின்படி, SBI வீட்டுக் கடன் வாடிக்கையாளர்களுக்கு, ரூ .75 லட்சம் மதிப்புள்ள வீடு வாங்க 0.25% வட்டி தள்ளுபடி கிடைக்கும். இந்த தள்ளுபடி சிபில் ஸ்கோரை அடிப்படையாகக் கொண்டது. இதை Yono செயலி (Yono App) மூலம் விண்ணப்பித்து பெற்றுக்கொள்ளலாம். SBI சமீபத்தில் அறிவித்த பண்டிகை சலுகையின் படி, நாடு முழுவதும் ரூ .30 லட்சம் முதல் ரூ .2 கோடி வரையிலான வீட்டுக் கடன்களில், க்ரெடிட் ஸ்கோரின் அடிப்படையில் வங்கி, முன்பிருந்த 0.10 சதவீதத்திற்கு பதிலாக 0.20 சதவீதம் வரை தள்ளுபடி அளிக்கும்.


ALSO READ: SBI Card வைத்திருப்பவர்களுக்கு Good News: உங்கள் card-ன் பலம் கூடியது!!


இந்த தள்ளுபடி நாட்டின் எட்டு மெட்ரோ நகரங்களில் மூன்று கோடி ரூபாய் வரை வீட்டுக் கடன் பெறும் வாடிக்கையாளர்களுக்கும் கிடைக்கும். யோனோ செயலி மூலம் விண்ணப்பிக்கும்போது, ​​அனைத்து வீட்டுக் கடன்களுக்கும் கூடுதலாக 0.5 சதவீதம் தள்ளுபடியும் கிடைக்கும். SBI ஆண்டுக்கு 6.90 முதல் 7.95 சதவீதம் என்ற வட்டி விகிதத்தில் வீட்டுக் கடன்களை வழங்கி வருகிறது.


வட்டி விகிதம் 6.9 சதவீதத்திலிருந்து தொடங்குகிறது


வங்கி தற்போது ரூ .30 லட்சம் வரையிலான வீட்டுக் கடன்களை (Home Loan) 6.90 சதவீதம் என்ற குறைந்த வட்டி விகிதத்தில் வழங்கி வருகிறது. 30 லட்சம் ரூபாய்க்கு மேல் உள்ள வீட்டுக் கடன்களுக்கான வட்டி விகிதம் 7 சதவீதமாகும். கடந்த மாதம், வங்கி தனது சில்லறை கடன் வாடிக்கையாளர்களுக்காக பல பண்டிகைக்கால முயற்சிகளை எடுத்தது. இதன் கீழ், Yono மூலம் கார், தங்கம் அல்லது தனிநபர் கடனுக்கு விண்ணப்பிக்கும் வாடிக்கையாளர்களுக்கு செயலாக்கக் கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்கப்பட்டது.


கார் கடன் மலிவான விலையில் கிடைக்கும்


கார் கடன் (Car Loan) பெறும் வாடிக்கையாளர்களுக்கு மிகக் குறைந்த விகிதமான 7.5 சதவீதத்திலிருந்து தொடங்கி கடன்களை வழங்குவதாக SBI தெரிவித்துள்ளது. இது தவிர, தேர்ந்தெடுக்கப்பட்ட மாடல்களில், வாகனத்தின் வரி சேர்த்த விலைக்கும் (on road price) கடன் வழங்கப்படும்.


ALSO READ: SBI வழங்கும் விழாக்கால சிறப்பு சலுகைகள்: விவரம் இதோ!!


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR