புதுடில்லி: நீங்கள் நாட்டின் மிகப்பெரிய வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் (SBI) கணக்கு வைத்திருப்பவராக இருந்தால், உங்களுக்கு ஒரு நல்ல செய்தி வந்துள்ளது. இந்த பண்டிகை காலங்களில் ஷாப்பிங் செய்ய நீங்கள் உங்கள் bank balance-ஐ பார்க்க வெண்டிய அவசியமில்லை. SBI தனது வாடிக்கையாளர்களுக்கு அளித்துள்ள டெபிட் கார்டில் ஒரு சிறப்பு வசதியை வழங்குகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

டெபிட் கார்டில் EMI வசதி


ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் படி, இங்கு கணக்கு வைத்திருப்பவர்களுக்கு வழங்கப்பட்ட டெபிட் கார்டு மிகவும் சக்திவாய்ந்ததாக மாற்றப்பட்டுள்ளது. வங்கியின் கூற்றுப்படி, டெபிட் கார்டுகள் இப்போது EMI வசதியுடன் வழங்கப்படுகின்றன. வீட்டு உபகரணங்கள் அல்லது ஆன்லைன் ஷாப்பிங் செய்ய விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு இது பயனளிக்கும். வாடிக்கையாளர்கள் உடனடியாக தாங்கள் வாங்கும் பொருட்களுக்கான மொத்த தொகையை எளிதான தவணைகளில் மாற்றிக்கொள்ளலாம்.



ALSO READ: SBI வழங்கும் விழாக்கால சிறப்பு சலுகைகள்: விவரம் இதோ!!


தகவல்களின்படி, ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, தன் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் டெபிட் கார்டுகளில் முன் அங்கீகரிக்கப்பட்ட EMI வசதியை வழங்குகிறது. உங்களுக்கு இந்த வசதி கிடைக்குமா இல்லையா என்ற தகவலை நீங்கள் வங்கியில் இருந்து பெறலாம். பல டெபிட் கார்டுகளுக்கு இந்த வசதி இல்லாமலும் இருக்கலாம்.


பிளிப்கார்ட் மற்றும் அமேசான் விற்பனையில் பயனடையலாம்


SBI தனது தேர்ந்தெடுக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு ஆன்லைன் ஷாப்பிங்கிற்கு (Online Shopping) முன்பே அங்கீகரிக்கப்பட்ட EMI வசதியையும் வழங்கியுள்ளது என்று நிபுணர்கள் கூறுகின்றனர். வாடிக்கையாளர்கள் மிகவும் பிரபலமான ஆன்லைன் ஷாப்பிங் தளங்களான பிளிப்கார்ட் மற்றும் அமேசானில் இந்த வசதியைப் பெறலாம்.


ALSO READ: Jio மூடி மறைத்த இந்த கூடுதல் தொகை மேட்டர்; வெளியான உண்மை தகவல்


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR