புதுடெல்லி: கொரோனா தொற்றின் எண்ணிக்கை நாட்டில் கணிசமாக அதிகரித்து வருகிறது. இதைக் கருத்தில் கொண்டு, ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (SBI) தனது வாடிக்கையாளர்களுக்காக தொடர்பற்ற சேவையை (Contactless Service) அறிமுகப்படுத்தியுள்ளது. இப்போது பயனர்கள் வீட்டில் இருந்தபடி தொலைபேசியின் மூலமாகவே வங்கி தொடர்பான பல பணிகளை செய்து முடிக்க முடியும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

SBI கட்டணமில்லா எண்களை வெளியிட்டது


SBI தனது ட்வீட்டில் இது குறித்த விவரங்களை வெளியிட்டுள்ளது. SBI தனது ட்வீட்டில், " வீட்டில் பாதுகாப்பாக இருங்கள், உங்களுக்கு சேவை செய்ய நாங்கள் இருக்கிறோம். உங்களுடைய உடனடி வங்கி தேவைகளை பூர்த்தி செய்ய உதவும் வகையில், SBI உங்களுக்கு தொடர்பற்ற இணைப்பு சேவையை வழங்குகிறது. எங்கள் கட்டணமில்லா எண் 1800 112 211 அல்லது 1800 425 3800-ல் அழைக்கவும்" என எழுதியுள்ளது. 


இனி தொலைபேசி மூலமாகவே SBI-ன் இந்த சேவைகளைப் பெறலாம்.


SBI தனது ட்வீட்டில், ஒரு வீடியோவையும் இணைத்துள்ளது, அதில் இந்த எண்களை அழைத்தால், வாடிக்கையாளர்கள் எந்தெந்த சேவைகளை எல்லாம் பயன்படுத்திக் கொள்ள முடியும் என்பது போன்ற விவரங்கள் கூறப்பட்டுள்ளன. வீடியோவின் படி, கணக்கு இருப்பு மற்றும் கடைசி 5 பரிவர்த்தனைகள், ATM வசதியைப் பெறுவது அல்லது நிறுத்துவது, ATM பின் அல்லது கிரீன் பின்னை உருவாக்குவது, புதிய ATM கார்டுக்கு விண்ணப்பிப்பது ஆகிய பணிகளுக்கு வாடிக்கையாளர்கள் இந்த கட்டணமில்லா எண்களில் தொடர்பு கொள்ளலாம்.


ALSO READ: வங்கி வாடிக்கையாளர்களுக்கு KYC-யில் நிவாரணம் அளித்தது RBI: விவரம் உள்ளே


முன்னதாக, ஒருபோதும் கியூஆர் குறியீட்டை (QR Code) ஸ்கேன் செய்யக்கூடாது என்று  SBI தனது வாடிக்கையாளர்களை கேட்டுக்கொண்டுள்ளது. இப்படி செய்யாமல் இருந்தால், மக்கள் ஆன்லைன் மோசடிக்கு ஆளாவதை அதிக அளவில் தடுக்கலாம் என்றும் SBI அறிவுறுத்தியுள்ளது. 


"நீங்கள் ஒரு க்யூஆர் குறியீட்டை ஸ்கேன் செய்வதால் உங்களுக்கு பணம் கிடைக்காது. உங்களுடைய வங்கி கணக்கிலிருது ஒரு குறிப்பிட்ட தொகை டெபிட் செய்யப்பட்டுள்ளது என்ற செய்தி மட்டுமே உங்களுக்குக் கிடைக்கும். பணம் செலுத்துவதற்கான குறிக்கோள் இல்லாதவரை, மற்றவர் பகிரும் #QRCodes-ஐ ஸ்கேன் செய்யாதீர்கள். எச்சரிக்கையாக இருங்கள்” என்று SBI ட்வீட் செய்துள்ளது.


ALSO READ: இந்த முதலீட்டாளர்களுக்கு ரூ.2489 கோடியை அனுப்பும் SBI: உங்கள் கணக்கில் பணம் வருமா?


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR