SBI வாடிக்கையாளர்களுக்கு முக்கிய செய்தி: இனி பண பரிமாற்றத்திற்கு இது கண்டிப்பாகத் தேவை
நாட்டின் மிகப்பெரிய வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (SBI) ஆன்லைன் வாடிக்கையாளர்களை ஆன்லைன் வங்கி மோசடியில் இருந்து பாதுகாக்க ஆன்லைன் பரிவர்த்தனைகளின் பாதுகாப்பை மேலும் அதிகரித்துள்ளது.
SBI Online Banking: நாட்டின் மிகப்பெரிய வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (SBI) ஆன்லைன் வாடிக்கையாளர்களை ஆன்லைன் வங்கி மோசடியில் இருந்து பாதுகாக்க ஆன்லைன் பரிவர்த்தனைகளின் பாதுகாப்பை மேலும் அதிகரித்துள்ளது.
ஆன்லைன் பாங்கிங்கின் புதிய பாதுகாப்பு அம்சம்
வங்கி பரிவர்த்தனைகளை வாடிக்கையாளர்களுக்கு மிகவும் பாதுகாப்பானதாக மாற்ற, SBI ஒன் டைம் கடவுச்சொல் (OTP) அடிப்படையிலான லாக் இன்-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. OTP அடிப்படையிலான கடவுச்சொல் வாடிக்கையாளர்களுக்கு பாதுகாப்புக்கான மற்றொரு அடுக்கை சேர்க்கும் என்று SBI கூறுகிறது.
உங்கள் மொபைல் தொலைபேசியில் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் வங்கி சார்பில் ஒரு எச்சரிக்கையை பெற நீங்கள் விரும்பினால், உங்கள் SBI கணக்கில் உயர் பாதுகாப்பு கடவுச்சொல்லை (OTP) அமைக்க வேண்டும். இதை நீங்கள் மிக எளிதாக செய்யலாம்.
SBI-யில் உயர் பாதுகாப்பு கடவுச்சொல்லை எவ்வாறு அமைப்பது:
1. SBI வலைத்தளத்திற்கு சென்று அதில் லாக் இன் செய்யவும். 2. பின்னர் 'My accounts & profile’ என்பதைக் கிளிக் செய்யவும்.
3. அதன் பிறகு ‘High-Security Password’ என்ற இணைப்பைக் கிளிக் செய்யவும். இங்கே நீங்கள் உங்கள் கடவுச்சொல்லை உள்ளிட வேண்டும். பின்னர் அடுத்த பக்கத்திற்குச் செல்லவும்
4. அடுத்த பக்கத்தில் நீங்கள் சில பாதுகாப்பு ஆப்ஷன்களைக் காண்பீர்கள்
5- இண்ட்ரா அல்லது இண்டர் பேங் கட்டணம், கிரெடிட் கார்டு அல்லது ஐ.எம்.பி.எஸ் அல்லது சர்வதேச நிதி பரிமாற்றம்
நீங்கள் 'ஆம்' என்பதைத் தேர்ந்தெடுத்தால், ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் உங்களுக்கு OTP கிடைக்கும். நீங்கள் 'இல்லை' என்பதைத் தேர்ந்தெடுத்தால், ஒரு நாளைக்கு ரூ .10,000 வரையிலான பரிவர்த்தனைகளுக்கு OTP கிடைக்காது.
ALSO READ: State Bank of India வங்கியில் உயர் பாதுகாப்பு கடவுச்சொல்லை எவ்வாறு அமைப்பது?
6- வணிகர் மூலம் செய்யப்படும் பரிவர்த்தனைகள்
7- நீங்கள் எந்த வகையில் OTP ஐ பெற விரும்புகிறீர்கள் என்பதை தேர்வு செய்ய வேண்டும். எஸ்எம்எஸ் மூலமாகவா, எஸ்எம்எஸ் மற்றும் மின்னஞ்சல் மூலமாகவா அல்லது மொபைல் செயலி மூலமாகவா என்பதை தேர்ந்தெடுக்க வேண்டும்.
OTP மூலம் வரும் உயர் பாதுகாப்பு கடவுச்சொல் ஒவ்வொரு வங்கி பரிவர்த்தனையையும் கண்காணிக்க உதவும். அதாவது, ஒரு பரிவர்த்தனை நடக்கும் போதெல்லாம், உங்களுக்கு உடனடி அறிவிப்பு வந்துவிடும். மேலும் ஏதேனும் மோசடி அல்லது தவறான பரிவர்த்தனை குறித்து உடனடியாக நீங்கள் எச்சரிக்கப்படுவீர்கள்.
SBI OTP பெஸ்ட் காஷ் மூலம் வாடிக்கையாளர்கள் ரூ.10,000-க்கு மேலான தொகையை எடுக்க வேண்டுமானால், அவர்களிடம் ATM பின்னுடன் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் வந்த OTP-யும் இருக்க வேண்டும். இந்த வசதி 2020 ஜனவரி 1 முதல் வங்கி சார்பில் அளிக்கப்பட்டு வருகிறது.
இது தவிர, சேமிப்புக் கணக்கைத் திறக்க SBI தனது மொபைல் செயலியான யோனோவில் (Yono) வீடியோ அடிப்படையிலான KYC -ஐயும் தொடங்கியுள்ளது. இந்த வசதி செயற்கை நுண்ணறிவு மற்றும் முக அங்கீகார தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டது. இது காகிதமற்ற தொடர்பற்ற வங்கி செயல்முறைக்கு ஊக்கமளிக்கும்.
ALSO READ: SBI Alert! இந்த சேவையை உபயோகம் செய்வதற்க்கு முன்பு மிகுந்த கவனம் தேவை!
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR