டிஜிட்டல் பரிவர்த்தனைகள் அதிகரித்துள்ள நிலையில், ஆன்லைன் மோசடிகளும் அதிகரித்துள்ளன.
இது ஒரு சிறிய காய்கறி கடையாக இருந்தாலும் சரி, அல்லது ஒரு மாலில் ஷாப்பிங் ஆக இருந்தாலும், டிஜிட்டல் பரிவர்த்தனை கிட்டத்தட்ட எல்லா இடங்களிலும் கடைபிடிக்கப்படுகிறது. இப்போது டிஜிட்டல் பரிவர்த்தனை அதிகரித்து வருவதால், மோசடிகளும் அதிகரித்து வருகின்றன. அதனால், ஆன்லைன் பரிவர்த்தனைகளைச் செய்யும்போது நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். உங்கள் சிறிய தவறு, உங்கள் கணக்கை காலி செய்யலாம். எனவே, பாதுகாப்பான பரிவர்த்தனை செய்வதற்கான சில முக்கிய விஷயங்களை அறிந்து கொள்ளலாம்,
CVV எண்ணை யாருடனும் பகிர்ந்து கொள்ள வேண்டாம்
ஒவ்வொரு அட்டையிலும் 3 இலக்க சி.வி.வி (CVV) எண் இருக்கும். இந்த எண் மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்த எண்ணை ஒருபோதும் யாருடனும் பகிரக்கூடாது என்பதை அட்டைதாரர் அறிந்து கொள்ள வேண்டும். சி.வி.வி அதாவது Card Verification Value , அனைத்து ஆன்லைன் பரிவர்த்தனையிலும் பயன்படுத்தப்படுகிறது. ஆன்லைனில் ஷாப்பிங்கில், நீங்கள் பொருளுக்கான விலையை, ஆன்லைனில் கட்டணம் செலுத்தும் போது, உங்கள் மூன்று இலக்க சி.வி.வி.யைப் பயன்படுத்தினால் தான் பரிவர்த்தனை மேற்கொள்ள முடியும்.
ALSO READ | Laptop வாங்க போறீங்களா; நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள்
அட்டை விவரங்களைச் சேமிக்க வேண்டாம்
அனைத்து ஆன்லைன் ஷாப்பிங் வலைத்தளங்களிலும் உங்கள் அட்டையின் விவரங்களை சேமிக்கலாம் என்ற ஆப்ஷன் உள்ளது. அதன்பிறகு, நீங்கள் எப்போதாவது மீண்டும் அந்த வலைத்தளத்திற்கு உள்நுழைந்து ஏதேனும் பொருட்களை வாங்கினால், நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் சி.வி.வி-யை மட்டும் உள்ளிட்டால் போது. உங்கள் பரிவர்த்தனை நிறைவடைந்து விடும். பலர் வசதிக்காக விவரங்களை சேமிக்கிறார்கள். இது நல்லதல்ல. ஏனென்றால், இதன் மூலம், ஹேக்கர்கள் அத்தகைய அட்டைகளை எளிதாக ஹேக் செய்கிறார்கள். இணையதளத்தில் சேமிக்கப்படும் விவரங்களை ஹேக் செய்யலாம் என்பதால், அட்டை எண், பாஸ்வேர்ட் மற்றும் பின் (PIN) ஆகியவற்றை இணையதளத்தில் சேமிப்பது ஆபத்து. தொழில்நுட்பம் வளர்ந்துள்ள இந்த கால கட்டத்தில் ஹேக்கர்கள் அவற்றை எளிதாக ஹேக் செய்கிறார்கள்.
எப்போதும் OTP ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்கவும்
ஒரு ஆன்லைன் பரிவர்த்தனையில், உங்களுக்கு இரண்டு ஆப்ஷன்கள் இருக்கும். முதல் ஆப்ஷன் உங்கள் அட்டையைச் சேமித்தல் (Save Your Card), இரண்டாவது ஆப்ஷன் OTP ஐ பயன்படுத்துதல் (Generate OTP) . பரிவர்த்தனை செய்யும் போது நீங்கள் எப்போதும் OTP ஆப்ஷனை தேர்ந்தெடுக்க வேண்டும். இந்த ஆப்ஷனை கிளிக் செய்த பிறகு, பதிவு செய்யப்பட்ட உங்கள் மொபைல் எண்ணுக்கு நான்கு இலக்க OTP அனுப்பப்படும். உங்கள் பரிவர்த்தனையை இதன் மூலம் நிறைவு செய்யலாம். ஓடிபி ஆப்ஷன் மிகவும் பாதுகாப்பானது.
ALSO READ | உங்கள் வீட்டு கரண்ட் பில் ஷாக் அடிக்கிறதா; இதோ உங்களுக்கான டிப்ஸ்
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR