புதுடெல்லி: எஸ்பிஐ நிதி மேலாண்மை (SBI MF), ஃப்ராங்க்லின் டெம்பிள்டன் (Franklin Templeton) மியூசுவல் ஃபண்டின் நிறுத்தப்பட்ட ஆறு திட்டங்களின் யூனிட்டுகளை வைத்திருப்பவர்களின் வங்கிக் கணக்கில் அடுத்த தவணையாக இந்த வாரம் ரூ .2,489 கோடியை டிரான்ஸ்வர் செய்யும். திங்கள்கிழமை முதல் பணத்தை மாற்றும் பணி தொடங்கிவிட்டது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதற்கு முன்னர் Franklin Templeton ரூ .12,084 கோடியை முதலீட்டாளர்களுக்கு செலுத்தியது. இதில், ஏப்ரலில் வங்கி மூலம் வெளியிடப்பட்ட ரூ .2,962 கோடியும் அடங்கும்.


Franklin Templeton MF முதலீட்டாளர்களுக்கு பணம் கிடைக்கும்


SBI மியூச்சுவல் ஃபண்ட் 6 திட்டங்களின் யூனிட்களை வைத்திருக்கும் முதலீட்டாளர்களுக்கு, அடுத்த தவணையின் கீழ் ரூ .2,498.75 கோடி விநியோகிக்கப்படும் என்று Franklin Templeton MF செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். KYC அப்டேட் செய்யப்பட்டுள்ள முதலீட்டாளர்களின் கணக்குகளில் 2021 மே 3 திங்களன்று தொடங்கும் வாரத்தில் பணம் செலுத்தப்படும். 


பிராங்க்ளின் டெம்பிள்டனின் 6 பத்திரத் திட்டங்களில் முதலீடு செய்யும் முதலீட்டாளர்களுக்கு பணத்தை திருப்பிச் செலுத்துவதற்காக நிறுவனத்தின் சொத்துக்களை சந்தையில் விற்று, அதில் கிடைக்கும் தொகையை முதலீட்டாளர்களுக்கு பிரித்துக்கொடுக்க, SBI MF மூலம் தயாரிக்கப்பட்ட ஸ்டாண்டர்ட் ஆப்பரேட்டிங் நடைமுறைக்கு (SOP) உச்ச நீதிமன்றம் ஒப்புதல் அளித்தது.


ALSO READ: SBI வாடிக்கையாளர்களுக்கு ஹேப்பி நியூஸ்! வீட்டில் இருந்தபடியே KYC பூர்த்தி செய்யலாம்!


டிஜிட்டல் முறை, காசோலை, டிடி மூலம் பணம் செலுத்தப்படும்


பிராங்க்ளின் டெம்பிள்டன் எம்.எஃப் இன் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், ஏப்ரல் 30 ஆம் தேதி இருந்த யூனிட்டின் நிகர சொத்து மதிப்பின் (NAV) அடிப்படையில் யூனிட் ஹோல்டர்களுக்கு தொகை பிரித்து வழங்கப்படும் என்று கூறினார். SBI MF முதலீட்டாளர்களுக்கு டிஜிட்டல் முறையில் தொகையை செலுத்தும். முதலீட்டாளரின் வங்கிக் கணக்கு மின்னணு கட்டணத்தை (Digital Transfer) ஏற்கவில்லை என்றால், SBI MF மூலம், அந்த தொகைக்கான காசோலை அல்லது டிமாண்ட் டிராஃப்ட், முதலீட்டாளரின் பதிவு செய்யப்பட்ட முகவரிக்கு அனுப்பப்படும்.


1 ஏப்ரல் 2020 அன்று 6 திட்டங்கள் நிறுத்தப்பட்டன


Franklin Templeton MF ஏப்ரல் 2020 இல் 6 பாண்ட் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களை நிறுத்தியது. பத்திரச் சந்தையில் பணப் பற்றாக்குறை மற்றும் மீட்பின் அழுத்தம் ஆகியவற்றைக் காரணம் காட்டி திட்டங்களை மூடுவதாக நிறுவனம் அறிவித்திருந்தது. இந்த மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் இந்தியாவை விட்டு வெளியேறத் தயாராகி வருவதாகவும் சில ஊடக அறிக்கைகளில் கூறப்பட்டது. நியாயமான விசாரணை நடத்தப்படாவிட்டால், இந்திய சந்தையிலிருந்து வெளியேற முடிவெடுக்கப்படும் என நிறுவனம் சந்தை கட்டுப்பாட்டாளர் செபியிடம் கூறியது. இருப்பினும், தங்கள் நிறுவனம் இந்திய சந்தையில் உறுதியாக இருப்பதாகவும், வெளியேறும் எண்ணம் இல்லை என்றும் பின்னர் நிறுவனம் தரப்பில் தெளிவுபடுத்தப்பட்டது.


6 திட்டங்கள் மூடப்பட்டன


மொத்த AUM அதாவது அசெட் அண்டர் மேனேஜ்மெண்ட் 25,000 கொடி ரூபாயாக இருக்கும் பிராங்க்ளின் டெம்பிள்டன் எம்.எஃப் இன் அந்த 6 திட்டங்களின் பெயர்கள் இவை: 


Franklin India Low Duration Fund
Franklin India Dynamic Accrual Fund
Franklin India Credit Risk Fund
Franklin India Short Term Income Plan
Franklin India Ultra Short Bond Fund
Franklin India Income Opportunities Fund


ALSO READ: SBI Alert: இதை செய்யவில்லை என்றால் கணக்கு முடக்கப்படும் என SBI எச்சரிக்கை


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR