நீங்கள் விரும்பும் முகவரிக்கு SBI cheque book பெற என்ன வழிமுறை? தெரியுமா?

இப்போது, உங்கள் எஸ்பிஐ காசோலை புத்தகத்தை நீங்கள் விரும்பும் எந்த முகவரியில் பெற்றுக் கொள்ளலாம்

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Nov 20, 2020, 01:18 AM IST
  • SBI காசோலை புத்தகத்தை நீங்கள் விரும்பும் எந்த முகவரியிலும் பெற்றுக் கொள்ளலாம்
  • கோவிட் -19 தொற்றுநோய் பரவலால் உலகே முடங்கிப் போய் இருக்கும் நிலையில் வழக்கமான பல விஷயங்கள் மாறிவிட்டன
  • சாமானியனுக்காக சட்டங்களும் சற்று வளைந்து கொடுக்கின்றன
நீங்கள் விரும்பும் முகவரிக்கு SBI cheque book பெற என்ன வழிமுறை? தெரியுமா? title=

புதுடில்லி: கோவிட் -19 தொற்றுநோய் பரவலால் உலகே முடங்கிப் போய் இருக்கும் நிலையில் வழக்கமான பல விஷயங்கள் மாறிவிட்டன. சாமானியனுக்காக சட்டங்களும் சற்று வளைந்து கொடுக்கின்றன. கொரோனா பலரின் இருப்பிடத்தை மாற்றச் செய்துவிட்டது. ஆனால் அவர்களால் முகவரியை மாற்ற முடியாமல் இருந்திருக்கும். இந்த நிலையில் எஸ்.பி.ஐ தற்போது செய்துக் கொடுக்கும் வசதி வாடிக்கையாளர்களின் சிரமத்தை சீர்செய்யும்.  

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வாடிக்கையாளர்கள் இப்போது தங்கள் காசோலை புத்தகம் தேவைப்படும்போது, அதை அவர்கள் விரும்பும் எந்த முகவரியிலும் பெற்றுக் கொள்ளலாம்.

"நீங்கள் விரும்பும் எந்தவொரு முகவரியிலும் உங்கள் காசோலை புத்தகத்தைப் பெறலாம். எங்கள் இணைய வங்கி சேவையைப் பயன்படுத்துவதோடு சில எளிய வழிமுறைகளைப் பின்பற்றினால் போதும்" என்று எஸ்பிஐ (SBI) ட்வீட் செய்துள்ளது.

SBI காசோலை புத்தகத்தை நீங்கள் விரும்பும் எந்த முகவரியிலும் பெறுவது எப்படி? வழிமுறைகளைத் தெரிந்துக் கொள்ளுங்கள்:

  • முதலில், எஸ்பிஐ இணைய வங்கியில் உள்நுழைக (log on)
  • இப்போது, கோரிக்கை மற்றும் அடைவு விருப்பத்தை சொடுக்கவும் (request and directory option)
  • நீங்கள் இப்போது காசோலை என்றத் தெரிவை கிளிக் செய்யவும்
  • அதைக் கிளிக் செய்தவுடன், ஒரு படிவத்தைக் காணலாம்
  • இப்போது உங்கள் கணக்கு எண் மற்றும் பிற தேவையான விவரங்களை பூர்த்தி செய்யவும்
  • விவரங்களை பூர்த்தி செய்த பிறகு, உங்கள் பெயர் மற்றும் முகவரி விவரங்களை வழங்க வேண்டும்
  • எஸ்பிஐ காசோலை புத்தகத்தை எங்கு பெற வேண்டும் என்று விரும்புகிறீர்களோ, அந்த முகவரியை இப்போது நிரப்பவும்

Read Also | Lakshmi Vilas Bank வாடிக்கையாளர்கள் 25 ஆயிரம் ரூபாய்க்கு மேல் பணம் எடுக்க முடியாது -நிதி அமைச்சகம் 

2018 முதல், எஸ்பிஐ பல்வேறு சேவைகளையும் வீட்டிற்கே நேரடியாக கொடுக்கிறது (Doorstep Banking (DSB) Services). 

பின்வரும் கிளைகளில் வங்கி சேவைகள் தேர்ந்தெடுக்கப்பட்ட கிளைகளில் கிடைக்கின்றன (w.e.f. 05.01.2018)

  • பணத்தை பெற்றுக் கொள்வது (Cash pickup)
  • பண விநியோகம் (Cash delivery)
  • காசோலை பெற்றுக் கொள்வது (Cheque pickup)
  • காசோலை கோரிக்கைப் படிவத்தைப் பெற்றுக் கொள்வது (Cheque requisition Slip pickup)
  • 15 எச் படிவத்தை பெற்றுக் கொள்வது (Form 15H pickup)  
  • வரைவோலைகள் விநியோகம் (Delivery of Drafts)
  • Term Deposit தொடர்பான அறிவுறுத்தல் ஆலோசனை வழங்கல்
  • Life Certificate பெற்றுக் கொள்வது 
  • KYC ஆவணங்களை பெற்றுக் கொள்வது  

Also Read | 7% வட்டி, பி.எஃப் தள்ளுபடி, சலுகை வட்டியில் தங்கக் கடன் கொடுக்கும் வங்கி எது தெரியுமா? 

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News