ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (SBI) சிறந்த பேஷன் பிராண்டுகளுக்கான பிரத்யேக தள்ளுபடியை வழங்குகிறது. இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான SBI 50 சதவீதம் வரை தள்ளுபடி மற்றும் யோனோ பிரத்தியேக சலுகையை வழங்குகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

SBI Yono செயலி மூலம் செய்யப்படும் ஷாப்பிங்கில் தள்ளுபடிகள் மற்றும் கேஷ்பேக்குகளை வங்கி வழங்குகிறது. ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (SBI) தனது வாடிக்கையாளர்களுக்கு அதிரடியான சலுகைகளை வழங்குவதற்காக lifestylestore.com, BIBA, Van Heusen, Allen Solly, Louis Phillipe போன்ற பிராண்டுகளுடன் இணைந்துள்ளது.


'மீட் தி நெக்ஸ்ட் ஃபேஷன் ஐகான்-யூ ’என்ற பிரச்சாரத்தின் கீழ், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா 50% வரை தள்ளுபடி மற்றும் சிறந்த பேஷன் பிராண்டுகளில் பிரத்யேக தள்ளுபடி ஆகியவற்றை வழங்குகிறது. இந்த சலுகைகள் SBI Yono செயலியில் மட்டுமே கிடைக்கின்றன.


Myntra-வில் நீங்கள் செய்யும் ஷாப்பிங்கில் SBI உங்களுக்கு ஃப்ளாட் ரூ .150 தள்ளுபடி அளிகிறது. Lifestylestores.com-ல் 30% வரை தள்ளுபடியும், பீட்டர் இங்கிலாந்து ஆடைகளில் 10 சதவீதம் தள்ளுபடியும், அலென் சோலியில் 10 சதவீதம் தள்ளுபடியும், பிபா ஸ்டோர்களில் 300 ரூபாய்க்கான தள்ளுபடியும் அளிக்கின்றது. அதேபோல், SBI Yono வழியாக ஷாப்பிங் செய்யும்போது, வான் ஹுசைனில் 10 சதவீத தள்ளுபடியும் லூயிஸ் பிலிப்பில் 10 சதவிகித தள்ளுபடியும் கிடைக்கிறது.


ALSO READ: IRCTC News: டிக்கெட் முன்பதிவு செய்யும் போது இந்த புதிய விதியை மனதில் கொள்ளுங்கள்


தங்களது பிரத்யேக சலுகைகள் மற்றும் தள்ளுபடிகளைப் பற்றி அறிவித்த SBI வெள்ளிக்கிழமை ட்விட்டரில், “ஷாப்பிங்கும் செய்யலாம் சேமிப்பும் செய்யலாம்!  YONO SBI மூலம் ஷாப்பிங் செய்து டாப் ஃபாஷன் பிராண்டுகளில் 10 சதவிகித தள்ளுபடியை பெறுங்கள். இந்த இணைப்பில்: https://sbiyono.sbi/index.html பதிவிறக்கம் செய்யலாம்.” என எழுதியுள்ளது.


இந்த சலுகைகள் யோனோ செயலியில் பிரத்தியேகமாகக் கிடைப்பதால், நீங்கள் இதன் மூலம் ஷாப்பிங் செய்யும்போது இந்த செயலியை வைத்திருக்க வேண்டியது அவசியமாகும்.


SBI சலுகைகளைப் பெற இந்த வழிமுறைகளைப் பின்பற்றவும்:


Step 1: யோனோ செயலியில் லாக் இன் செய்யவும். இதுவரை நீங்கள் இன்னும் இந்த செயலியை பதிவிறக்கம் செய்யவில்லை என்றால், அதை பதிவிறக்கம் செய்யவும்.


Step 2: ‘Shop and order’பிரிவுக்கு செல்லவும்.


Step 3: ஃபேஷன் மற்றும் லைஃப்ஸ்டைலில் கிளிக் செய்து உங்கள் பிடித்தமான பிராண்டுகளில் ஷாப்பிங் செய்யலாம்.


மேலும், நீங்கள் SBI Yono app மூலம் ஷாப்பிங் செய்யும்போது வெவ்வேறு ஈ-காமர்ஸ் வலைத்தளங்களிலும் இந்த சலுகைகளை நீங்கள் பெறலாம்.


ALSO READ: வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஒரு நற்செய்தி; இனி EMI கட்டக் கூட வங்கி பக்கம் செல்ல வேண்டாம்..


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR