நாட்டின் மிகப்பெரிய வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (SBI) ஏழு வகையான ATM-cum-Debit Card-களை தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது. ஒரு நாளில் ATM கார்டிலிருந்து எவ்வளவு பணம் எடுக்க முடியும் என்பது உங்கள் டெபிட் அல்லது ஏடிஎம் கார்டின் வகையைப் பொறுத்தது. ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா தினசரி பல்வேறு ஏடிஎம்களில் ரூ .20,000 முதல் ரூ .1 லட்சம் வரை பணம் எடுக்கப்படும் வரம்பைக் கொண்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் (State Bank of India) அதிகாரப்பூர்வ வலைத்தளத்தின்படி, வழக்கமான சேமிப்புக் கணக்கு வைத்திருப்பவருக்கு ஒரு மாதத்தில் எட்டு இலவச பரிவர்த்தனைகளை மேற்கொள்ள வங்கி அனுமதிக்கிறது. வாடிக்கையாளர்கள் அடிக்கடி பரிவர்த்தனை செய்வதால், வங்கி வாடிக்கையாளர்களிடமிருந்து ஒரு கட்டணத்தை வசூலிக்கிறது.


பல்வேறு SBI டெபிட் கார்டுகள் பற்றிய தகவல்களை இப்போது பெறலாம். மேலும், இந்த கார்டுகளில் நீங்கள் செலுத்த வேண்டிய வருடாந்திர கட்டணம் என்ன, இந்த கார்டுகளில் பரிவர்த்தனை வரம்பு (Transaction Limit) என்ன என்பதையும் பார்க்கலாம்:


1. SBI Classic Debit Card


வெளியீட்டு கட்டணம்: இல்லை


ஆண்டு பராமரிப்பு கட்டணம்: ரூ 125 + GST


Card மாற்று கட்டணம்: ரூ 300 + GST


ATM-ல் இருந்து பணத்தை எடுக்க தினசரி அதிகபட்ச வரம்பு: 20,000 / -


2. SBI Global International Debit Card


வெளியீட்டு கட்டணம்: இல்லை


ஆண்டு பராமரிப்பு கட்டணம்: ரூ 175 + GST


Card மாற்று கட்டணம்: ரூ 300 + GST


ATM-ல் இருந்து பணத்தை எடுப்பதற்கான தினசரி அதிகபட்ச வரம்பு: வெவ்வேறு நாடுகளில் இந்த வரம்பு வேறுபடுகிறது. இங்கே இந்த வரம்பு ரூ .40,000 ஆகும்.


3. SBI Gold International Debit Card


வெளியீட்டு கட்டணம்: ரூ 100 + GST


ஆண்டு பராமரிப்பு கட்டணம்: ரூ 175 + GST


Card மாற்று கட்டணம்: ரூ 300 + GST


ATM-களில் இருந்து பணத்தை எடுப்பதற்கான தினசரி அதிகபட்ச வரம்பு: வெவ்வேறு நாடுகளுக்கு வெவ்வேறு வரம்புகள் உள்ளன. ஆனால் இந்த தொகை ரூ .50,000 ஐ தாண்டாது.


4. SBI Platinum International Debit Card


வெளியீட்டு கட்டணம்: ரூ 100 + GST


ஆண்டு பராமரிப்பு கட்டணம்: ரூ 175 + GST


Card மாற்று கட்டணம்: ரூ 300 + GST


ATM-மில் இருந்து பணம் எடுப்பதற்கான அதிகபட்ச தினசரி வரம்பு: இந்த அட்டை மூலம் நீங்கள் அதிகபட்சமாக ஒரு லட்சம் ரூபாயை எடுக்கலாம்.


5. sbiINTOUCH Tap and Go Debit Card


வெளியீட்டு கட்டணம்: பூஜ்ஜியம்


ஆண்டு பராமரிப்பு கட்டணம்: ரூ .175 + GST


Card மாற்று கட்டணம்: ரூ .300 + GST


ATM-மில் இருந்து தினசரி திரும்பப் பெறுவதற்கான அதிகபட்ச வரம்பு: ரூ .40 ஆயிரம்


6. SBI Mumbai Metro Combo Card


இந்த கார்டின் மிகப்பெரிய அம்சம் என்னவென்றால் நீங்கள் இதன் மூலம் மும்பை மெட்ரோவில் வசதியான வழியில் பயணம் செய்யலாம்.


வெளியீட்டு கட்டணம்: கார்டு பெறும் நேரத்தில் நீங்கள் ரூ .100 கட்டணம் செலுத்த வேண்டும். மேலும், இந்த மெட்ரோ கார்டில் ரூ .50 முன்பே செலுத்தப்பட்டிருக்கும்.


ஆண்டு பராமரிப்பு கட்டணம்: ரூ 175 + GST


Card மாற்று கட்டணம்: ரூ 300 + GST


ATM-மில் இருந்து அதிகபட்ச தினசரி திரும்பப் பெறும் வரம்பு: இந்த வரம்பு ஒரு நாளைக்கு ரூ .40,000.


7. SBI My Card International Debit Card


வெளியீட்டு கட்டணம்: ரூ 250 + GST


ஆண்டு பராமரிப்பு கட்டணம்: ரூ 175 + GST


Card மாற்று கட்டணம்: நீங்கள் கார்டை இழந்தால் எந்த மாற்றுக் கட்டணத்தையும் செலுத்த வேண்டியதில்லை.


ATM-மில் இருந்து பணத்தை எடுக்க தினசரி அதிகபட்ச வரம்பு: ரூ .40 ஆயிரம்


ALSO READ: SBI Card வைத்திருப்பவர்களுக்கு Good News: உங்கள் card-ன் பலம் கூடியது!!