SBI YONO Super Saving Days: நாட்டின் மிகப்பெரிய வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (SBI) தனது மிகச் சிறந்த ஷாப்பிங் திருவிழாவை வாடிக்கையாளர்களுக்காக அறிமுகப்படுத்துகிறது.  யோனோ சூப்பர் சேவிங் டேஸ் என்று பெயரிடப்பட்ட இந்த திருவிழாவில், வாடிக்கையாளர்களுக்கு மிகவும் கவர்ச்சிகரமான சலுகைகளை பெறுவதற்கான வாய்ப்பு கிடைக்கும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த திருவிழா ஏப்ரல் 4 முதல் 2021 ஏப்ரல் 7 வரை நடக்கும். இதில் SBI-யின் வங்கி சேவை மற்றும் யோனோ இயங்குதளத்தால் பெரும் தள்ளுபடிகள் மற்றும் கேஷ்பேக்குகள் வழங்கப்படுகின்றன.


இந்த ஆண்டு தொடர்ந்து மூன்றாவது முறையாக சலுகை மழையை பொழிகிறது SBI


தனது சலுகை சேல்களுக்கு வாடிக்கையாளர்கள் அளித்த அதிகப்படியான ஆதரவு காரணமாக, வங்கி இந்த ஆண்டு மூன்றாவது முறையாக யோனோ சூப்பர் சேமிப்பு நாட்கள் விற்பனையை கொண்டு வந்துள்ளது. இதற்கு முன்னர் நடந்த சேல், 2021 மார்ச் 4 முதல் 7 வரை நடந்தது. அதற்கு வாடிக்கையாளர்களின் அதிரடியான ஆதரவு கிடைத்தது. SBI தனது வாடிக்கையாளர்களுக்கு பணம் செலுத்துவதிலும் சிறந்த சலுகைகளை வழங்குகிறது. Yono SBI செயலியில் நீங்கள் யுபிஐ (UPI) மூலம் பணம் செலுத்தினால், கேஷ்பேக் வசதியையும் பெறலாம் 


ALSO READ:  கார் வாங்கணுமா? Maruti Suzuki அளிக்கிறது அதிரடியான கார் கடன்கள்: விவரம் உள்ளே



50 சதவீதம் வரை தள்ளுபடி கிடைக்கும்


இந்த சிறந்த விற்பனை சலுகையில் (Offer), SBI பெரிய பிராண்டுகளுடன் இணைந்துள்ளது. இதனால் வாடிக்கையாளர்களுக்கு பெரிய பிராண்டுகளின் பொருட்களை குறைந்த விலையில் வாங்குவதற்கான வாய்ப்பும் கிடைக்கும். இவற்றில் அமேசான், அப்பல்லோ 24X7, ஈஸிமிட்ரிப், ஓயோ மற்றும் @home போன்ற பெரிய பிராண்டுகளும் உள்ளன.


ஏப்ரல் பதிப்பில், வாடிக்கையாளர்கள் ஹோட்டல் முன்பதிவு, விமான முன்பதிவு, சுகாதார பிரிவில் 50 சதவீதம் வரை தள்ளுபடி ஆகியவற்றை மெற்கொள்ளலாம். இது தவிர, அமேசானில் (Amazon) தேர்ந்தெடுக்கப்பட்ட வகைகளில் 10% கூடுதல் கேஷ்பேக்கையும் பெறலாம்.


3.6 கோடி வாடிக்கையாளர்களுக்கு நன்மை கிடைக்கும் 


இந்த ஷாப்பிங் திருவிழாவை வங்கியின் சுமார் 3.6 கோடி வாடிக்கையாளர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். பயணம், விருந்தோம்பல், உடல்நலம், ஆடைகள் மற்றும் ஆன்லைன் ஷாப்பிங் ஆகியவற்றில் சிறப்பு சலுகைகளை வங்கி அளிக்கின்றது. Yono அதாவது You Only Need One செய்லி SBI-யின் டிஜிட்டல் வங்கி மற்றும் வாழ்க்கை முறை செயலியாகும். https://sbiyono.sbi/index.html என்ற வங்கியின் வலைத்தளத்திற்கு சென்று இந்த செயலியை பதிவிறக்கலாம்.


ALSO READ: Honda City மற்றும் Swift Dzire கார்களை குறைவான விலையில் வாங்குவது எப்படி?


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR