LPG Cylinder: வீட்டு உபயோக சிலிண்டர்களின் விலை கடந்த சில நாட்களில் கணிசமாக அதிகரித்துள்ளது. டெல்லியில் சிலிண்டர் இப்போது 819 ரூபாயாக உயர்ந்துள்ளது. பிப்ரவரி மாதத்துடன் ஒப்பிடும்போது விலை 125 ரூபாய் அதிகரித்துள்ளது. இத்தகைய சூழ்நிலையில், ஏதாவது ஒரு சலுகையின் கீழ் சிலிண்டரை வாங்கி அதில் சிறிது பணத்தை மிச்சப்படுத்த முடிந்தால், அது நன்றாக இருக்கும் என மக்கள் நினைப்பது நியாயமான விஷயமாகும். சிலிண்டர் முன்பதிவு செய்யும்போது நீங்கள் எப்படி பணத்தை மிச்சப்படுத்தலாம் என்பதை இப்போது இங்கே காணலாம்.
Paytm இல் சிறப்பு சலுகை
டிஜிட்டல் கட்டண செயலியான Paytm நீங்கள் முதல்முறையாக LPG சிலிண்டரை முன்பதிவு செய்யும் போது 100 ரூபாய் கேஷ்பேக் தருகிறது. நீங்கள் LPG சிலிண்டர் முன்பதிவின் கட்டணத்தை Paytm மூலம் செலுத்தினால், 819 ரூபாய்க்கான ஒரு சிலிண்டரை டெல்லியில் 719 ரூபாய்க்கு பெறலாம். சிலிண்டர் முன்பதிவுக்கு Paytm வழங்கியுள்ள சலுகையில் சில நிபந்தனைகளும் அடங்கியுள்ளன.
-முதல் நிபந்தனை என்னவென்றால், முதல் முறையாக முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே கேஷ்பேக் சலுகை கிடைக்கும்.
-இரண்டாவதாக, மார்ச் 31 வரை ஒரே ஒரு சிலிண்டர் மட்டுமே முன்பதிவு செய்ய முடியும்.
-பணம் செலுத்திய பிறகு நீங்கள் பெறும் ஸ்க்ரேட்ச் கார்டை நீங்கள் ஏழு நாட்களுக்குள் கீறிப்பார்க்க வேண்டும். இல்லையெனில் அதன் பிறகு அது செல்லுபடியாகாது.
-ஸ்க்ரேட்ச் கார்டில் நீங்கள் வெல்லும் தொகை 24 மணி நேரத்திற்குள் உங்கள் Paytm வாலெட்டில் வரும்.
ALSO READ: இனி டென்ஷன் வேண்டாம்! CNG மற்றும் PNG இல் கேஷ்பேக் பெறலாம்!
கேஷ்பேக் அமேசானிலும் கிடைக்கிறது
LPG சிலிண்டர்களை முன்பதிவு செய்வதற்கு அமேசானும் (Amazon) கேஷ்பேக் அளிக்கிறது. அமேசானிலிருந்து இந்தேனின் LPG சிலிண்டரை முதன்முறையாக முன்பதிவு செய்யும்போது, 50 ரூபாய் கேஷ்பேக் கிடைக்கும் என்று இந்தியன் ஆயில் ஒரு ட்வீட்டில் தெரிவித்துள்ளது.
டிஜிட்டல் கட்டணம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்
இன்றைய உலகில், டிஜிட்டல் கட்டணத்தின் பல நன்மைகள் உள்ளன. அமேசான், Paytm, Googlepay, Phonepe உள்ளிட்ட பல கட்டண செயலிகள் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த நன்மைகளைத் தருகின்றன. கொரோனா காலத்தில், வைரஸிலிருந்து விலகி இருக்க டிஜிட்டல் முறையில் கட்டணம் செலுத்துமாறு ரிசர்வ் வங்கி மக்களிடம் வேண்டுகோள் விடுத்தது. இப்போது டிஜிட்டல் கட்டண முறைகளில் கேஷ் பேக்கும் பல கிடைக்கின்றன. ஒட்டுமொத்தமாக, வாடிக்கையாளர்கள் டிஜிட்டல் கட்டணங்களால், பல விதத்திலும் பயனடைகிறார்கள்.
ALSO READ: Free Cooking Gas: இலவச சமையல் எரிவாயு இணைப்பு அறிய வாய்ப்பு! முந்துங்கள்!
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR