கார் வாங்கணுமா? Maruti Suzuki அளிக்கிறது அதிரடியான கார் கடன்கள்: விவரம் உள்ளே

மாருதி சுசுகி இந்தியா லிமிடெட் (MSIL) மங்களூருவை தலைமையிடமாகக் கொண்ட தனியார் துறை கடன் வழங்குநரான கர்நாடக வங்கியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Sripriya Sambathkumar | Last Updated : Apr 2, 2021, 05:51 PM IST
  • மாருதி சுசுகி இந்தியா லிமிடெட் மற்றும் கர்நாடக வங்கிக்கு இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்.
  • இந்த கூட்டாண்மை வாடிக்கையாளர்களின் வாகனம் வாங்கும் அனுபவத்தை மேன்மையாக்கும்-மாருதி சுசுகி.
  • மாருதி சுசுகி இந்தியாவுடனான இந்த கூட்டு, நுகர்வோரின் வசதியை அதிகரிக்கும்-கர்நாடகா வங்கி.
கார் வாங்கணுமா? Maruti Suzuki அளிக்கிறது அதிரடியான கார் கடன்கள்: விவரம் உள்ளே title=

மாருதி சுசுகி இந்தியா லிமிடெட் (MSIL) மங்களூருவை தலைமையிடமாகக் கொண்ட தனியார் துறை கடன் வழங்குநரான கர்நாடக வங்கியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இதன் மூலம் கர்நாடக வங்கியின் மெட்ரோ, நகர்ப்புற, செமி அர்பன் மற்றும் கிராமப்புறங்களில் உள்ள 858 கிளைகளில் வாடிக்கையாளர்கள் இதன் நன்மைகளைப் பெறலாம்.

இந்த புரிந்துணர்வின் கீழ், வாடிக்கையாளர்கள் Maruti Suzuki ARENA மற்றுன் NEXA ஷோரூம்களிலிருந்து அனைத்து புதிய கார்களின் ஆன் - ரோட் விலையில் 85% வரை கடன்களைப் பெறலாம். கார் கடன்கள் வெளிப்புற பெஞ்ச்மார்க் கடன் விகிதத்துடன் இணைக்கப்பட்ட வட்டி வீதத்தைக் கொண்டிருக்கும். வாடிக்கையாளர்கள் தங்கள் கடன்களுக்கு 84 மாதங்கள் வரையிலான கால அளவை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். 

வாடிக்கையாளர்களுக்கு ஏதுவாக இருக்கும் இந்த செயல்முறையை வெளியிட்ட மாருதி சுசுகி இந்தியா லிமிடடின் நிர்வாக இயக்குநர் ஷஷாங்க் ஸ்ரீவாஸ்தவா, “இந்த கூட்டாண்மை வாடிக்கையாளர்களின் வாகனம் வாங்கும் பயணத்தை எளிதாகவும் மலிவானதாகவும் மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. விரைவான தொழில்நுட்ப மேம்பாடு மற்றும் புதிய டிஜிட்டல் நுகர்வோர் செயல்முறைகள் இந்தியா முழுவதும் வாகன விற்பனையை தீர்மானிக்கின்றன. சமீபத்திய ஆண்டுகளில், மாருதி சுசுகி இந்த திசையில் பல முயற்சிகளை எடுத்துள்ளது.

இதில் டிஜிட்டல் ஸ்மார்ட் நிதி தளம் மற்றும் புதுமையான திட்டங்கள் வாடிக்கையாளர்களுக்கு புதிய கார்களை கவர்ச்சிகரமான வட்டி விகிதத்தில் (Interest Rate) வாங்க உதவுகின்றன மற்றும் அவர்களின் தேவைகளுக்கு ஏற்ப தனிப்பயனாக்கப்பட்ட ஈ.எம்.ஐ வசதியும் கிடைக்கிறது. 2020-21 நிதியாண்டில், கூட்டாளர் நிதியாளர்களுடனான ஒப்பந்தத்தின் கீழ், நாங்கள் 9.7 லட்சத்துக்கும் மேற்பட்ட வாகனங்களுக்கு நிதியளித்துள்ளோம். கர்நாடக வங்கியுடன் சமீபத்திய ஒப்பந்தம் எங்கள் வாடிக்கையாளர்களின் பல்வேறு நிதித் தேவைகளைப் பூர்த்தி செய்ய உதவும் என்று நாங்கள் நம்புகிறோம். " என்று கூறினார்.

ALSO READ:  Honda City மற்றும் Swift Dzire கார்களை குறைவான விலையில் வாங்குவது எப்படி?

இந்த கூட்டாண்மை குறித்து கருத்து தெரிவித்த கர்நாடக வங்கியின் நிர்வாக இயக்குநரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான மகாபலேஸ்வர எம்.எஸ்., "மாருதி சுசுகி இந்தியாவுடனான இந்த கூட்டு, நுகர்வோரின் வசதியை அதிகரிக்கும், அதே நேரத்தில் எங்கள் டிஜிட்டல் கார் கடன் (Car Loan) உற்பத்தியின் மகிழ்ச்சியான அனுபவத்தையும் அவர்கள் பெற முடியும். மாருதி சுசுகியிடமிருந்து உலகத் தரம் வாய்ந்த தயாரிப்புகளை சொந்தமாகக் கொண்டு வாடிக்கையாளர்கள் தங்கள் ஆசைகளை பூர்த்தி செய்து கொள்ளலாம். கர்நாடகா வங்கி டிஜிட்டல் மற்றும் பரந்த கிளை நெட்வொர்க்குகள் மூலம் தற்போதுள்ள மற்றும் புதிய வாடிக்கையாளர்களுக்கு கார் கடன்களை வழங்குகிறது. இது விரைவான செயலாக்க திறனுடன் செயல்படுத்தப்படுகிறது” என்று கூறினார்.

ALSO READ: கார் வாங்கணுமா? Maruti, Hyundai, Renault கார்களில் பம்பர் தள்ளுபடி: முழு விவரம் உள்ளே

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News