மறுஉத்தரவு வரும் வரை BS-IV ரக வாகனங்களை பதிவு செய்ய SC தடை விதிப்பு!!
உச்சநீதி மன்றத்திலிருந்து மறுஉத்தரவு வரும் வரை BS-IV ரக வாகனங்களை பதிவு செய்ய தடை விதிப்பு..!
உச்சநீதி மன்றத்திலிருந்து மறுஉத்தரவு வரும் வரை BS-IV ரக வாகனங்களை பதிவு செய்ய தடை விதிப்பு..!
ஒரு குறிப்பிடத்தக்க வளர்ச்சியில், BS-IV ரக வாகனங்களை பதிவு செய்ய உச்சநீதிமன்றம் (Supreme Court) தடை விதித்து அதிரடி உத்தரவு ஒன்றை வெளியிட்டுள்ளது. இது குறித்து மறு உத்தரவு வரும் வரை பதிவு செய்ய தடை விதிக்கப்படுவதாக நீதிபதி அருண் மிஸ்ரா உத்தரவு விடுத்துள்ளார். மார்ச் மாதம் விற்கப்பட்ட BS-IV வாகனங்கள் குறித்து நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்த நிலையில், வாகன விற்பனையில் மோசடி நடைபெற்றிருக்கலாம் என குற்றம் சாட்டியுள்ளனர்.
கடந்த ஏப்ரல் 1 ஆம் தேதிக்குப் பின்னர் BS-IV வாகனங்களை உற்பத்தி செய்யவோ விற்கவோ கூடாது என தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து, வாகன விற்பனையாளர்கள் கூட்டமைப்பின் கோரிக்கையை ஏற்று 10 நாட்களுக்கு கட்டுப்பாடுகளுடன் வாகனங்களை விற்பனை செய்ய உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தது. ஒரு லட்சம் வாகனங்களை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என அனுமதி வழங்கிய நிலையில், 2.55 லட்சம் வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது.
இந்நிலையில், இன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது உச்சநீதிமன்றம் வழங்கிய அனுமதியை விட அதிகமாக வாகனங்களை விற்றது ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல, என நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும், மறு உத்தரவு வரும்வரை BS-IV ரக வாகனங்களை பதிவு செய்ய தடைவிதித்து உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. BS-IV ரக வாகனங்களைப் பயன்படுத்தி வருகிறோம். இந்த BS-IV ரக வாகனங்களை விட BS-VI வாகனங்கள் குறைவான மாசுவை ஏற்படுத்தும்.
ALSO READ | வாகனம் ஓட்டும் போது தொலைபேசி பயன்படுத்தினால் ₹10,000 அபராதம்..!
இந்த ஆண்டு மார்ச் 31-க்குப் பிறகு விற்கப்பட்ட பாரத் ஸ்டேஜ்Bharat Stage (BS)-IV வாகனங்கள் மற்றும் அரசாங்கத்தின் இ-வாகன் போர்ட்டலில் பதிவேற்றப்படாத விவரங்கள் பதிவு செய்யப்படாது என்று எஸ்சி பெஞ்ச் கூறியது. அக்டோபர் 1, 2020 முதல் இந்தியாவில் எந்த BS-IV வாகனமும் விற்கவோ பதிவு செய்யவோ மாட்டேன் என்று நீதிமன்றம் கூறியிருந்தது.
மேலும், BS-VI வாகனப் புகையில் புற்றுநோயை ஏற்படுத்து நச்சுப் பொருள் 80 சதவிகிதம் குறைவாக உள்ளது. இதனால், BS-V என்னும் ரகத்தை அறிமுகம் செய்யாமல் நேரடியாக BS-VI வாகனச் சட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. BS-VI விலை அதிகம் என்றாலும் குறைவான மாசுபாடை ஏற்படுத்தக் கூடியது. இதன் காரணமாக மக்கள் BS-VI ரக வாகனங்களை வாங்க அறிவுறுத்தப்படுகின்றனர்.