அக்டோபரில், பல வங்கிகள் நிலையான வைப்பு, அதாவது ஃபிக்ஸ்ட் டெபாசிட் வட்டி விகிதங்களைத் திருத்தியுள்ளன. அதன் பிறகு மூத்த குடிமக்களுக்கான எஃப்டி திட்டங்கள் இன்னும் கவர்ச்சிகரமானவையாக மாறியுள்ளன. அதே நேரத்தில், மத்திய அரசு தனது சிறு சேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதங்களையும் திருத்தியுள்ளது. அதன் பிறகு மூத்த குடிமக்களுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டங்களின் (SCSS) வட்டி விகிதங்களில் மாற்றம் வந்துள்ளதா என்பதை இந்த பதிவில் காணலாம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தற்போது மூத்த குடிமக்கள் வங்கிகளின் எப்ஃடி திட்டங்களில் முதலீடு செய்வது பலனளிக்குமா, அல்லது மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டங்களில் (SCSS) முதலீடு செய்வது பயனளிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கான பதிலை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். மூத்த குடிமக்களுக்கு வங்கிகள் வழங்கும் சிறந்த FD விகிதங்கள் மற்றும் SCSS வட்டி விகிதங்களைப் பற்றி இங்கே தெரிந்து கொள்ளலாம். இது FD மற்றும் SCSS ஆகியவற்றிற்கு இடையே தேர்வு செய்ய மூத்த குடிமக்கள் மற்றும் அவர்களது பாதுகாவலர்களுக்கு உதவியாக இருக்கும். 


மூத்த குடிமக்களுக்கான சிறந்த எஃப்டி விகிதங்கள்


டிசிபி வங்கி மூத்த குடிமக்களுக்கு 8.10 சதவீத வட்டியை வழங்குகிறது. அதன் எஃப்டி திட்டங்கள் 26 முதல் 37 மாதங்களுக்குள் முதிர்ச்சியடையும். இண்டஸ்இண்ட் (IndusInd) வங்கி மூத்த குடிமக்களுக்கு 8 சதவீத வட்டி விகிதத்தை வழங்குகிறது. அதே நேரத்தில் அதன் FD திட்டங்கள் இரண்டு ஆண்டுகள், ஒன்பது மாதங்கள் முதல் 61 மாதங்களில் முதிர்ச்சியடையும்.


மேலும் படிக்க | குறைந்த முதலீடு.. அதிக லாபம்: ஜாக்பாட் வருமானம் அளிக்கும் அசத்தலான தொழில் யோசனைகள்


யெஸ் வங்கியின் (Yes Bank) திட்டங்கள் 3 முதல் 5 ஆண்டுகளில் முதிர்ச்சியடையும். மூத்த குடிமக்களுக்கு 8 சதவீத வட்டி வழங்கப்படுகிறது. பாங்க் ஆப் பரோடா மூத்த குடிமக்களுக்கு 7.75 சதவீத வட்டி விகிதத்தை வழங்குகிறது. இந்த திட்டங்கள் 3 முதல் 5 ஆண்டுகளில் முதிர்ச்சியடையும். ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் பேங்க் மூத்த குடிமக்களுக்கு 7.75 சதவீத வட்டி விகிதத்தை வழங்குகிறது. இதன் திட்டங்கள் இரண்டு முதல் மூன்று ஆண்டுகளில் முதிர்ச்சியடையும்.


எஸ்சிஎஸ்எஸ் திட்டத்தின் வட்டி விகிதம்


மத்திய அரசு கடந்த வாரம் அக்டோபர்-டிசம்பர் 2023 காலாண்டிற்கான சிறு சேமிப்பு திட்ட வட்டி விகிதங்களை அறிவித்தது. அதைத் தொடர்ந்து டிசம்பர் 31, 2023 இல் முடிவடையும் நிதி காலாண்டில் சில சிறு சேமிப்பு திட்டங்கள் மற்றும் தபால் அலுவலக திட்டங்களுக்கான வட்டி விகிதங்களை திருத்தியது. இதில் ஐந்து ஆண்டுகளுக்கான தொடர் வைப்புத் திட்டத்தின் வட்டியை அரசு அதிகரித்தது. டிசம்பர் 2023 காலாண்டில் SCSS இல் 8.2% வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. இது பல பெரிய வங்கிகளின் ஃபிக்ஸ்ட் டெபாசிட் விகிதங்களை விட அதிகமாகும். ஒருமுறை முதலீடு செய்தால், டெபாசிட் காலம் முழுவதும் வட்டி விகிதம் அப்படியே இருக்கும்.


அக்டோபர்-டிசம்பர் 2023 காலாண்டில், சிறு சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள் பின்வருமாறு:


பிபிஎஃப் - 7.1%


எஸ்சிஎஸ்எஸ் - 8.2%


சுகன்யா சம்ரித்தி யோஜனா - 8.0%


என்எஸ்சி - 7.7%


அஞ்சல் அலுவலக மாதாந்திர வருமானத் திட்டம் - 7.4%


கிசான் விகாஸ் பத்ரா - 7.5%


1-ஆண்டு வைப்பு - 6.9%


2 ஆண்டு வைப்பு - 7.0%


3 ஆண்டு வைப்பு - 7.0%


5 ஆண்டு வைப்பு - 7.5%


5 ஆண்டு RD - 6.7%


மேலும் படிக்க | EPF Withdrawal Rules: வேலையை விட்டவுடன் பிஎஃப் பணத்தை எடுப்பதால் இத்தனை இழப்புகளா? என்ன செய்யலாம்?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ