மும்பை: முதலீட்டாளர்களை ஊக்குவிக்கும் வகையில், மூலதனச் சந்தை கட்டுப்பாட்டாளர் செபி (Securities and Exchange Board of India) அடிப்படை டிமேட் கணக்குகளுக்கான வரம்பை ஐந்து மடங்கு உயர்த்தி ரூ.10 லட்சமாக உயர்த்தி வெள்ளிக்கிழமையன்று அறிவிப்பு வெளியிட்டது. இந்த புதிய வழிகாட்டுதல்கள் செப்டம்பர் 1 முதல் அமலுக்கு வரும் என்று செபி தெரிவித்துள்ளது. இது தொடர்பாக செபி ஜூன் மாதம் 28ம் தேதியன்று சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அடிப்படை சேவைகள் டிமேட் கணக்கு (பிஎஸ்டிஏ - Basic Services Demat Account (BSDA)) வழக்கமான டிமேட் கணக்கின் மிகவும் அடிப்படையான பதிப்பாகும், இது சிறிய அளவில் முதலீடு செய்யும் முதலீட்டாளர்களுக்கு டிமேட் கட்டணங்களின் சுமையைக் குறைக்க 2012 இல் செபி இதனை அறிமுகப்படுத்தியது. அடிப்படைச் சேவைகளான டிமேட் கணக்குகளுக்குப் பொருந்தக்கூடிய உச்ச வரம்பு இது, அது வைத்திருக்கக்கூடிய பத்திரங்களின் அதிகபட்ச மதிப்பை நிர்ணயிக்கும்.


செப்டம்பர் 1 முதல் அமலுக்கு வரும் விதிமுறைகள்
ரூ.2 லட்சம் மதிப்புள்ள பத்திரங்களுக்குப் பதிலாக, பிஎஸ்டிஏ வைத்திருப்பவர்கள், அதிகபட்சமாக ரூ.10 லட்சம் வரையிலான பத்திரங்களை டிமேட் வடிவத்தில் வைத்திருக்க முடியும்.


வரம்பு அதிகரிப்பின் நன்மைகள்


அடிப்படை சேவைகளின் டீமேட் கணக்கின் அதிகபட்ச வரம்பு அதிகரிப்பட்டுள்ளதால், பங்குச்சந்தையில் முதலீடு செய்ய விரும்பும் மக்களின் ஆர்வம் அதிகரிக்கும் மேலும் இது சில்லறை வர்த்தக பங்கேற்பை ஊக்குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, செபியின் இந்த நடவடிக்கை சில்லறை முதலீட்டாளர்களை பங்குச் சந்தையில் வர்த்தகம் செய்ய ஊக்குவிக்கும் வகையில் அமைந்துள்ளது.


மேலும் படிக்க | சாலையில் நின்றாலே அடுத்த ஊருக்கு போகலாம்! தானியங்கி சாலைகள்! ஒரே கல்லில் 3 மாங்காய்!


அடிப்படை சேவைகளின் டீமேட் கணக்கை யார் தொடங்கலாம்?
சில நிபந்தனைகளை பூர்த்தி செய்யும் நபர்கள் மட்டுமே அடிப்படை சேவைகளின் டீமேட் கணக்கைத் திறந்து இயக்க முடியும். அடிப்படை டீமேட் கணக்கு வைத்திருப்பதற்கான நிபந்தனைகளைத் தெரிந்துக் கொள்வோம்.


முதலீட்டாளர் ஒரே ஒரு டிமேட் கணக்கை மட்டுமே  வைத்திருக்க வேண்டும். பத்திரங்களின் மதிப்பு - கடன் மற்றும் கடன் அல்லாதவை - வரம்புக்கு மிகாமல் இருக்க வேண்டும். அதாவது இதுவரை இந்த அதிகபட்ச வரம்பு 2 லட்சம் ரூபாயாக இருந்தது. செப்டம்பர் 1 முதல் புதிய விதிமுறைகள் நடைமுறைக்கு வந்ததும் ரூ. 10 லட்சமாக உயரும்.


வருடாந்திர பராமரிப்பு கட்டணம்
சுற்றறிக்கையின்படி, ரூ. 4 லட்சம் வரை மதிப்புள்ள போர்ட்ஃபோலியோக்களுக்கு ஆண்டு பராமரிப்புக் கட்டணங்கள் ஏதுமில்லை, ரூ. 4 லட்சத்துக்கு மேல் ஆனால் ரூ. 10 லட்சம் வரையிலான போர்ட்ஃபோலியோக்களுக்கு ரூ.100 கட்டணம் வசூலிக்கப்படும். போர்ட்ஃபோலியோ ரூ.10 லட்சத்தை தாண்டினால் என்ன ஆகும்? போர்ட்ஃபோலியோவின் அளவு ரூ.10 லட்சத்திற்கு மேல் இருந்தால், அடிப்படை டிமேட் கணக்கு தானாகவே வழக்கமான டிமேட் கணக்காக மாற்றப்படும்.


மேலும் படிக்க | FATF: சர்வதேச அளவில் இந்தியாவிற்கு பாராட்டு! பணமோசடியை தடுப்பதில் நம்பர் ஒன் நாடு!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ