மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் Vs மூத்த குடிமக்களுக்கான நிலையான வைப்பு திட்டம்: வட்டி வருமானத்தை நம்பி இருக்கும் பல  மூத்த குடிமக்களுக்கு பலனளிக்கும் வகையில் பல்வேறு திட்டங்களை மத்திய அரசும் வங்கிகளும் செயல்படுத்தி வருகின்றன. தனக்கள் பணம் பாதுகாப்பாகவும் இருக்க வேண்டும். அதே சமயத்தில், நல்ல வருமானமும் கொடுக்க வேண்டும் என்பதே இவர்களின் விருப்பமாக இருக்கும்.  இந்நிலையில் தங்கள் பணத்தை வங்கி FD கணக்கில் முதலீடு செய்யலாமா அல்லது மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்தில் முதலீடு செய்வது நல்லதா என்ற குழப்பம் பலருக்கு இருக்கும். தங்கள் பணத்தை எங்கு முதலீடு செய்தால், உத்திரவாத வருமானத்துடன், பாதுகாப்பான முதலீடாக இருக்கும்   என யோசிப்பவர்களுக்கு, மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் மற்றும் மூத்த குடிமக்களுக்கான நிலையான வைப்பு திட்டம் ஆகிய இரண்டு  முதலீட்டு விருப்பங்களை ஒப்பீடு செய்து அறிந்து கொள்ளலாம்


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் 


மத்திய அரசின் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான மூத்த குடிமக்கள் மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் (SCSS), நல்ல வருமானத்தைப் பெறுவதற்கான சிறந்த திட்டம் (Investment Tips).  எனினும்,  55 வயதுக்கு மேற்பட்ட ஓய்வு பெற்றவர்கள் அல்லது விருப்ப ஓய்வு பெற்றவர்கள் அல்லது 50 வயதை எட்டிய முன்னாள் ராணுவ வீரர்கள் ஆகியோரும் இதில் முதலீடு செய்யலாம். மூத்த குடிமக்களுக்கான FD முதலீட்டுடன்  உடன் ஒப்பிடும்போது இந்தத் திட்டம் அதிக வருமானத்தை அளிக்கிறது.


SCSS என்னும் மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டத்தின் பலன்கள்


1. மத்திய அரசால் செயல்படுத்தப்படும் இந்த திட்டத்தில் உங்கள் பணம் பாதுகாப்பாக இருக்கும்.


2. முதலீட்டாளர்களுக்கு வருமான வரிச் சட்டம் 1961 இன் பிரிவு 80C இன் கீழ் ரூ.1.5 லட்சம் வரை வரிவிலக்கு கிடைக்கும். இருப்பினும், ஒரு நிதியாண்டுக்கு ரூ. 50,000க்கு மேல் வட்டி இருந்தால் டிடிஎஸ் கழிக்கப்படும்.


3. இதில் செய்யப்படும் முதலீடுகளுக்கான முதிர்வு காலம் 5 ஆண்டுகள். அடுத்த மூன்று வருடங்களுக்கு நீட்டிக்கலாம்.


4. SCSS கணக்கைத் திறப்பது மிகவும் எளிது. நாடு முழுவதும் உள்ள  அங்கீகரிக்கப்பட்ட வங்கி அல்லது தபால் அலுவலகத்திற்கும் சென்று கணக்கைத் தொடங்கலாம். 


5. வாடிக்கையாளர்கள், தேவைப்பட்டால் தங்கள் SCSS கணக்கை நாடு முழுவதும் உள்ள எந்த வங்கி அல்லது போஸ்ட் ஆபீஸ் கிளைக்கும் மாற்றலாம்.


6. இந்தத் திட்டத்தின் கீழ் நீங்கள் குறைந்தபட்ச முதலீடு ரூ.1,000. இதற்குப் பிறகு நீங்கள் 1,000 மடங்குகளில் முதலீட்டு தொகையை அதிகரிக்கலாம். 


7. அதிகபட்ச வரம்பை பொறுத்தவரை, ஒரு நிதியாண்டில் ரூ.30 லட்சம் வரை முதலீடு செய்யலாம்.


மேலும் படிக்க |  செல்வமகள் சேமிப்பு திட்டம்... 21வது வயதில் உங்கள் மகளின் கையில் ரூ.70 லட்சம் இருக்கும்!


மூத்த குடிமக்கள் FD திட்டம்


1.வங்கிகள் வழங்கும் சாதாரண FD கணக்குடன் ஒப்பிடும்போது, ​​மூத்த குடிமக்களுக்கு வங்கிகளில் அதிக வட்டி வழங்கப்படுகிறது.


2. பொதுவாக வங்கி மூத்த குடிமக்களுக்கு, பிற வாடிக்கையாளர்களை விட, 0.50 சதவீதம் கூடுதல் வட்டி அளிக்கிறது.


3. உங்கள் தேவை அல்லது விருப்பத்திற்கு ஏற்ப மாதம் தோறும், காலாண்டு, அரையாண்டு அல்லது ஆண்டுதோறும் என வட்டிப் பணத்தைப் பெறலாம்.


4. குறிப்பிட்ட சில FDகளில் வரிச் சலுகைகளும் கிடைக்கும். அதன் முதிர்வு காலம் 5 ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் என்ற வகையில் இருக்கும்.


மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் Vs மூத்த குடிமக்களுக்கான நிலையான வைப்பு திட்டம்: ஒரு ஒப்பீடு


மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்தில், ஆண்டுக்கு 8.2 சதவீத வட்டி பெறலாம். இந்த திட்டத்தின் கீழ் வருமான வரி சட்டத்தின் 80C விதியின் கீழ் வரிச்சலுகையும் பெறலாம்.  ஆனால், நீங்கள் ஐந்து வருடங்களுக்கும் குறைவான கலாத்திற்கான FD திட்டத்தில் முதலீடு செய்தால், உங்களுக்கு எந்த வரிச் சலுகை எதுவும்  கிடைக்காது. அதெ எபோன்று, SCSS என்னும் மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்தில், அதிகபட்ச முதலீட்டிற்கான வரம்பு உள்ளது.  ஒரு நிதியாண்டில் ரூ.30 லட்சம் வரை முதலீடு செய்யலாம். அதேசமயம்  மூத்த குடிமக்களுக்கான FD திட்டங்களில் முதலீடு செய்ய அதிபட்ச வரம்பு ஏதும் இல்லை. இதில் நீங்கள், உங்கள் தேவை மற்றும் விருப்பத்தின் படி இரண்டு முதலீட்டு விருப்பங்களில் ஒன்றை தேர்தெடுக்கலாம். 


மேலும் படிக்க | Business Idea: லட்சங்களில் வருமானத்தை தரும் அட்டைப்பெட்டி தயாரிக்கும் தொழில்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ