2023-ல் மூத்த குடிமக்களுக்கு வருமானம் தரும் சூப்பரான முதலீட்டு திட்டங்கள்!
Senior Citizen schemes: பிஓஎம்ஐஎஸ் திட்டம் மூத்த குடிமக்களின் முதலீட்டுக்கு ஆண்டுதோறும் 6.7% வட்டி விகிதத்தை கொடுக்கிறது. மேலும் ஸ்லாப் விகிதத்தின்படி இந்தத் திட்டத்தில் பெறப்படும் வட்டிக்கு வரி பொருந்தும்.
Senior Citizen schemes: மனிதராக பிறந்த ஒவ்வொருவரும் தங்களது ஓய்வுக்கு பின்னர் அதாவது முதுமை காலத்தில் நிதி தேவையை பூர்த்தி செய்ய விரும்புகின்றனர். இதற்காக பலரும் பல்வேறு வகையான திட்டங்களில் பணத்தை முதலீடு செய்து வருகின்றனர். இப்போது நீங்கள் உங்கள் பணத்தை பாதுகாப்பான இடத்தில் முதலீடு செய்ய விரும்புகிறீர்கள் என்றால், உங்களுக்கான சில திட்டங்களைப் பற்றி இங்கு பார்க்கலாம். 60 வயதை தாண்டிய முதியவர்களுக்கு பின்வரும் திட்டங்கள் சிறப்பான வருமானத்தை கொடுத்து அவர்களின் நிதி தேவையை சமாளிக்க உதவும்.
தபால் அலுவலக மாதாந்திர வருமானத் திட்டம் (பிஓஎம்ஐஎஸ்):
மத்திய அரசுக்கு சொந்தமான தபால் அலுவலகங்கள் மூலம் வழங்கப்படும் தபால் அலுவலக மாதாந்திர வருமான திட்டத்தில் (பிஓஎம்ஐஎஸ்) மூத்த குடிமக்கள் தயக்கமின்றி முதலீடு செய்யலாம். தற்போது, பிஓஎம்ஐஎஸ் திட்டம் மூத்த குடிமக்களின் முதலீட்டுக்கு ஆண்டுதோறும் 6.7% வட்டி விகிதத்தை கொடுக்கிறது. மேலும் ஸ்லாப் விகிதத்தின்படி இந்தத் திட்டத்தில் பெறப்படும் வட்டிக்கு வரி பொருந்தும்.
மேலும் படிக்க | இந்த வழிகள் மூலம் வருமான வரியை அதிகளவில் சேமிக்கலாம்!
மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் (எஸ்சிஎஸ்எஸ்)
மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் (எஸ்சிஎஸ்எஸ்) என்பது அரசாங்கத்தின் திட்டமாகும், 60 வயதைத் தாண்டியவர்கள் இந்தத் திட்டத்தில் முதலீடு செய்யலாம். இது உங்கள் முதலீட்டுக்கு 7.4% வட்டி விகிதத்தை வழங்குகிறது, இதில் 80சி பிரிவின் கீழ் வரிவிலக்கு அளிக்கப்படுகிறது. இத்திட்டத்தின் முதிர்வு காலம் 5 ஆண்டுகள் மற்றும் திட்டத்தின் முதிர்வு காலத்தை மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டிக்க முடியும். இதில் ஒரு முதலீட்டாளர் அதிகபட்சமாக ரூ.15 லட்சத்தை வரை டெபாசிட் செய்ய முடியும்.
வங்கி எஃப்டி:
வங்கிகள் மூத்த குடிமக்களின் பிக்ஸட் டெபாசிட் கணக்குகளுக்கு சிறந்த வருமானத்தை வழங்குகிறது. பொது வாடிக்கையாளர்களுடன் ஒப்பிடும் போது, வங்கிகள் மூத்த குடிமக்களின் பிக்ஸட் டெபாசிட் கணக்குகளுக்கு 25% முதல் 1% வரை அதிக வட்டியை வழங்குகின்றன. வருமான வரியின் பிரிவு 80டிடிபி-ன் கீழ், மூத்த குடிமக்கள் வருமானத்தில் ரூ. 50,000 வரை வரி விலக்கு கோரலாம். தற்போது சில வங்கிகள் தங்கள் மூத்த குடிமக்களுக்கு சுமார் 8.75 சதவீதம் வரை வருமானத்தை வழங்குகின்றன.
வருடாந்திர திட்டங்கள்:
மூத்த குடிமக்களின் எதிர்கால நிதி தேவைகளுக்கு வருடாந்திர திட்டங்கள் சிறந்த தேர்வாக இருக்கும் என்று கருதப்படுகிறது. இதில் முதலீடு செய்யும் தொகைக்கு 5.5% முதல் 6.5% வரை ஆண்டு வருமானம் வழங்கப்படுகிறது.
மேலும் படிக்க | Budget 2023: பட்ஜெட்டில் நுகர்வு செலவினங்களுக்கான வரி தள்ளுபடி பலன்கள் எவ்வளவு?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ