மூத்த குடிமக்களுக்கு ஜாக்பாட்.. அள்ளி வழங்கும் பெஸ்ட் சேவிங் திட்டம் இதோ
இந்தத் திட்டத்தில் முதலீடு செய்தால், வருமான வரியின் 80சி பிரிவின் கீழ் வரி விலக்குப் பலனையும் பெறுவீர்கள்.
மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம்: மூத்த குடிமக்களுக்கு பல முதலீட்டு விருப்பங்கள் (Senior Citizen Scheme) உள்ளன. ஆனால் அஞ்சலகத்தின் மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் (Senior Citizen Savings Scheme (SCSS) முதலீட்டிற்கு சிறந்த வழியாகும். முதலாவதாக, இந்த திட்டத்தில் முதலீட்டின் பாதுகாப்பிற்கான உத்தரவாதம் உள்ளது, இரண்டாவதாக, தற்போது இந்த திட்டத்தில் வருமானமும் சிறப்பாக தரப்படுகிறது. இது மட்டுமின்றி, இந்தத் திட்டத்தில் முதலீடு செய்தால், வருமான வரியின் 80சி பிரிவின் கீழ் வரி விலக்குப் பலனையும் பெறுவீர்கள். அதேபோல் இந்த திட்டத்தில் முதலீடு செய்யத் தொடங்குவது மிகவும் எளிது. அதன்படி 1000 ரூபாய் முதலே இந்த திட்டத்தில் நீங்கள் முதலீடு செய்ய ஆரம்பிக்கலாம்.
கணக்கு திறப்பதற்கான விதிமுறைகள்:
* தபால் நிலையத்தின் இந்தத் திட்டத்தின் கீழ், பொதுவாக 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் கணக்கைத் தொடங்கலாம்.
* இது தவிர, 50 வயதுக்கு மேற்பட்ட மற்றும் 60 வயதுக்குட்பட்ட ஓய்வு பெற்ற பாதுகாப்புப் பணியாளர்கள் கணக்கைத் திறக்கலாம்.
மேலும் படிக்க | வீட்டுக் கடன் வாங்க போறீங்களா... வட்டியில் சலுகை வழங்கும் SBI... மிஸ் பண்ணாதீங்க!
* இதில், கணவன் அல்லது மனைவியுடன் தனியாகவோ அல்லது கூட்டாகவோ கணக்கு தொடங்கலாம். கூட்டுக் கணக்கில், முதல் கணக்கு வைத்திருப்பவருக்கு முழுத் தொகையின் மீதும் கட்டுப்பாடு உள்ளது.
* மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டத்தில் ஒரு நிதியாண்டில் மொத்த வட்டி ரூ. 50,000/-க்கு மேல் இருந்தால், வட்டிக்கு வரி விதிக்கப்படும் மற்றும் செலுத்தப்பட்ட மொத்த வட்டியில் இருந்து நிர்ணயிக்கப்பட்ட விகிதத்தில் TDS கழிக்கப்படும்.
* படிவம் 15G/15H சமர்ப்பிக்கப்பட்டால் மற்றும் பெறப்பட்ட வட்டி நிர்ணயிக்கப்பட்ட வரம்பை மீறவில்லை என்றால், TDS எதுவும் கழிக்கப்படாது.
முழுமையான கணக்கீட்டை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்
தபால் அலுவலக மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் மொத்த வைப்புத்தொகை: ரூ. 5 லட்சம்
வைப்பு காலம்: 5 ஆண்டுகள், வட்டி விகிதம்: 8.2%, முதிர்வுத் தொகை: ரூ. 7,05,000.
வட்டி வருமானம்: ரூ. 2,05,000, காலாண்டு வருமானம்: ரூ. 10,250 உள்ளது.
சிறு சேமிப்பு திட்ட முதலீட்டாளர்களுக்கு செப்டம்பர் 30 கடைசி நாள்
இதனிடையே சிறு சேமிப்பு சந்தாதாரர்கள் பிபிஎஃப், எஸ்எஸ்ஒய், என்எஸ்சி, எஸ்சிஎஸ்எஸ் அல்லது வேறு ஏதேனும் சிறு சேமிப்புக் கணக்கைத் திறக்கும்போது ஆதார் எண்ணைச் சமர்ப்பிக்கவில்லை என்றால், செப்டம்பர் 30, 2023 -க்குள் தங்கள் ஆதார் எண்ணைச் சமர்ப்பிக்க வேண்டும். ஆதார் எண்ணை பதிவு செய்யாத பட்சத்தில், ஒருவரது கணக்கு தொடங்கிய ஆறு மாதங்களுக்குப் பிறகு அவரது சிறுசேமிப்பு கணக்கு முடக்கப்படும். ஏற்கனவே உள்ள சந்தாதாரர்கள், கொடுக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் சிறு சேமிப்புக் கணக்குடன் ஆதார் எண்ணை வழங்கத் தவறினால், அக்டோபர் 1, 2023 முதல் அவர்களது கணக்கு முடக்கப்படும் என நிதி அமைச்சகத்தின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
சிறு சேமிப்புத் திட்டங்களில் ஜூலை-செப்டம்பர் 2023க்கான வட்டி விகிதங்கள்
மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் (SCSS) - 8.2%
செல்வமகள் சேமிப்புத் திட்டம் (SSY) - 8.0%
NSC - 7.7%
கிசான் விகாஸ் பத்ரா - 7.5%
5 ஆண்டு வைப்பு - 7.5%
PO-மாதாந்திர வருமானத் திட்டம் - 7.4%
PPF - 7.1%
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ