NPS Scheme: ஓய்வுபெறுகையில் 1 கோடி ஜாக்பாட் வருமானம்.. ஊழியர்களுக்கான அசத்தல் திட்டம்

NPS Scheme Update: பணி ஓய்வுக்கு பிறகான நிதி திட்டமிடல் மிக அவசியமாகும். உங்கள் ஓய்வூதியம் தொடர்பாக உங்களுக்கு ஏதேனும் பதற்றம் இருந்தால், இப்போது நீங்கள் NPS இல் பணத்தை முதலீடு செய்யலாம்.

NPS -இல் சிறிய தொகையை டெபாசிட் செய்து பெரிய நிதியை உருவாக்கலாம். பாதுகாப்பான வழியில் நல்ல லாபம் அளிக்கும் என்பிஎஸ் திட்டம் பற்றி இந்த பதிவில் காணலாம்.

1 /9

30 ஆண்டுகளில் 18 லட்சம் டெபாசிட் செய்ய வேண்டும்: 30 வயதுடைய ஒரு நபர் ஒவ்வொரு மாதமும் தனது NPS கணக்கில் 5000 ரூபாய் டெபாசிட் செய்கிறார் என்று வைத்துக்கொள்வோம். இந்த வழியில் அவரது ஆண்டு முதலீடு ரூ.60 ஆயிரம் ஆகும். அடுத்த 30 ஆண்டுகளில், அவர் மொத்தம் ரூ.18 லட்சம் நிதியை உருவாக்குவார்.

2 /9

முதிர்ச்சியின் போது கோடீஸ்வரர் ஆகலாம்: இப்படி தொடர்ந்து முதலீடு செய்வதன் மூலம், முதிர்வு காலத்தில் மொத்தம் ரூ.1,13,96,627 கிடைக்கும். இதற்கான வட்டித் தொகை ரூ.95,96,627 ஆக இருக்கும். இதில், வாடிக்கையாளர்கள் கூட்டு வட்டியின் பலனைப் பெறுகிறார்கள், இதன் காரணமாக முதலீட்டாளர்கள் மிகவும் வலுவான வருமானத்தைப் பெறுகிறார்கள்.

3 /9

ஓய்வு பெறுவதற்கு 2 ஆப்ஷன்கள் உள்ளன: என்.பி.எஸ் திட்டத்தில், ஓய்வு பெறும் நேரத்தில், உறுப்பினர்களுக்கு இரண்டு ஆப்ஷன்கள் கிடைக்கும். அதில் முதல் விருப்பம் என்னவென்றால், நீங்கள் அனைத்து பணத்தையும் வருடாந்திர திட்டத்தில் முதலீடு செய்து, அதிலிருந்து ஓய்வூதியம் பெறத் தொடங்கலாம். இரண்டாவது விருப்பத்தில், தொகையில் 60 சதவீதத்தை திரும்பப் பெற்று, மீதமுள்ள 40 சதவீதத்துடன் வருடாந்திரத் திட்டத்தை உருவாக்குவது. ஓய்வு பெறும்போது, ​​குறைந்தபட்சம் 40 சதவீத என்பிஎஸ் ஒரு வருடாந்திர திட்டத்தில் முதலீடு செய்யப்பட வேண்டும்.

4 /9

உங்களுக்கு எவ்வளவு ஓய்வூதியம் கிடைக்கும்? வாடிக்கையாளர் ரூ.1,13,96,627-ல் 40 சதவீதத்தை அதாவது ரூ.45,58,650-ஐ வருடாந்திரமாக முதலீடு செய்ய முடிவு செய்தால், உங்களுக்கு ஓய்வூதியம் சற்று குறைவாகவே கிடைக்கும். இதற்கு உங்களுக்கு ஆண்டுக்கு 7-8 சதவீதம் வட்டி கிடைக்கும் என்று வைத்துக்கொள்வோம்.

5 /9

மாதம் எவ்வளவு ஓய்வூதியம் பெறுவீர்கள்? அத்தகைய சூழ்நிலையில் உங்கள் ஓய்வூதியம் ஆண்டுக்கு ரூ. 3,19,105 - ரூ. 364,692 ஆக இருக்கும், அதாவது ரூ.26,592-30,391 மாத ஓய்வூதியத்தின் பலனைப் பெறுவீர்கள்.

6 /9

பழைய ஓய்வூதிய திட்டம்: பழைய ஓய்வூதியத் திட்டத்தை (Old Pension Scheme) மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்னும் கருத்தை வலியுறுத்தி பல போராட்டங்களும் நடத்தப்பட்டு வருகின்றன. 

7 /9

தமிழகத்தில் பழைய ஓய்வூதிய திட்டம்: தமிழ்நாட்டிலும் அதே நிலைதான் உள்ளது. தமிழ்நாட்டில் பழைய ஓய்வூதிய திட்டத்தை (Old Pension Scheme) கொண்டுவர வேண்டும் என தொடர்ந்து மாநில அரசு ஊழியர்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள். 

8 /9

10 சதவீதம் பிடித்தம்: NPSல், பணியாளரின் அடிப்படை சம்பளம் மற்றும் அகவிலைப்படி ஆகியவற்றில் 10 சதவீதம் பிடித்தம் செய்யப்படுகிறது.

9 /9

பழைய மற்றும் தேசிய ஓய்வூதிய திட்டங்களுக்கு உள்ள வித்தியாசம் என்ன? தேசிய ஓய்வூதியத் திட்டம் பங்குச் சந்தையை அடிப்படையாகக் கொண்டது. எனவே இது ஒப்பீட்டளவில் குறைவான பாதுகாப்பு கொண்டதாகக் கருதப்படுகிறது.