அரசாங்கம் மக்களுக்கு பல்வேறு விதமான முதலீட்டு திட்டங்களை வழங்கி வருகிறது, அதிலும் குறிப்பாக மூத்த குடிமக்களுக்கு அரசு பல்வேறு சிறப்பான ஓய்வூதிய திட்டங்களையும் வழங்குகிறது.  இந்த திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் மூத்த குடிமக்களுக்கு மாதந்தோறும் நல்ல அளவில் ஓய்வூதியம் கிடைக்கப்பெறும்.  மேலும் அரசாங்கத்தின் திட்டத்தில் முதலீடு செய்யும் பணத்திற்கு பாதுகாப்பு கிடைக்கிறது மற்றும் நல்ல வருமானமும் கிடைக்கிறது.  அரசாங்கத்தின் இந்த திட்டம் மூத்த குடிமக்கள் பிரதான் மந்திரி வய வந்தனா யோஜனா (PMVVY) என்று அழைக்கப்படுகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | 7th Pay Commission: DA, DR உயர்வு எப்போது? வெளியான சூப்பர் அப்டேட்! 


இந்த PMVVY திட்டத்தில் 60 வயதிற்குப் பிறகு கணவன் மற்றும் மனைவி இருவரும் சேர்ந்து பங்களிப்பதன் மூலமாக ஒவ்வொரு மாதமும் ரூ.18500 ஓய்வூதியமாக பெறலாம்.  பத்து ஆண்டுகள் கால அளவு கொண்ட இந்த திட்டத்தை எஸ்ஐசி செயல்படுத்துகிறது.  இதில் 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு அரசாங்கம் மானியத்துடன் கூடிய ஓய்வூதியத் திட்டத்தை வழங்குகிறது.  இத்திட்டத்தின் கீழ் மூத்த குடிமக்களுக்கு மாதாந்திர, காலாண்டு, அரையாண்டு அல்லது வருடாந்திர ஓய்வூதிய வசதி வழங்கப்படுகிறது.  மொத்தமாக முதலீட்டாளர்கள் இந்த திட்டத்தில் ரூ.15 லட்சம் செலுத்துவதன் மூலம் நல்ல வருமானம் கிடைக்கும்.



PMVVY திட்டத்தின் கீழ் ஓய்வூதியத்தின் முதல் தவணை திட்டம் வாங்கிய நாளிலிருந்து 1 வருடம், 6 மாதங்கள், 3 மாதங்கள் அல்லது 1 மாதத்திற்குப் பிறகு தொடங்குகிறது.  இத்திட்டத்தில் குறைந்தபட்ச ஓய்வூதியம் மாதம் ரூ.1000 மற்றும் அதிகபட்ச ஓய்வூதியம் மாதம் ரூ.9250 ஆகும்.  இதன் குறைந்தபட்ச கொள்முதல் விலை ரூ.1,62,162, காலாண்டு ஓய்வூதியம் ரூ.1,61,074, அரையாண்டு ஓய்வூதியம் ரூ.1,59,574 மற்றும் ஆண்டு ஓய்வூதியம் ரூ.1,56,658.  இத்திட்டத்தின் கீழ் அதிகபட்ச கொள்முதல் விலை மாதாந்திர ஓய்வூதியம் ரூ.15 லட்சம், காலாண்டு ஓய்வூதியம் ரூ.14,89,933, அரையாண்டு ஓய்வூதியம் ரூ.14,76,064 மற்றும் ஆண்டு ஓய்வூதியம் ரூ.14,49,086 ஆகும்.


மேலும் படிக்க | Aadhaar கார்டில் திருத்தம் செய்யுமா? இனி கஷ்டப்படாமல் ஈஸியா செய்யலாம் 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ