Aadhaar கார்டில் திருத்தம் செய்யுமா? இனி கஷ்டப்படாமல் ஈஸியா செய்யலாம்

Aadhaar Update: ஆதார் அட்டை என்பது இந்திய அரசாங்கத்தின் சார்பாக வழங்கிய 12 இலக்க தனிநபர் அடையாள எண் ஆகும். 

Written by - Vijaya Lakshmi | Last Updated : Dec 4, 2022, 10:18 AM IST
  • ஆதார் கார்டில் இருக்கும் தவறுகளை எப்படி சரி செய்வது.
  • ஆதார் பதிவு நடைமுறை.
  • விவரங்களை ஆன்லைனில் சரிபார்ப்பது எப்படி.
Aadhaar கார்டில் திருத்தம் செய்யுமா? இனி கஷ்டப்படாமல் ஈஸியா செய்யலாம் title=

தற்போது, ​​நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் அட்டை மிகவும் முக்கியமான ஆவனமாகும். தற்போது அனைத்து சிறிய மற்றும் பெரிய வேலைகளுக்கும், அரசின் திட்டங்களின் பலன்களைப் பெறுவதற்கும் ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அத்துடன் வங்கி கணக்கு, சிம் கார்டு மட்டுமின்றி எந்த ஒரு சான்றிதழுக்கும் ஆதார் அவசியமாகும். இப்படிப்பட்ட சூழ்நிலையில், உங்கள் ஆதார் அட்டையில் ஏதேனும் தவறுகள் இருந்தால் அதை ஆன்லைனில் எப்படி சரி செய்வது என்பதை தெரிந்துக்கொள்வோம்.

பல நேரங்களில் ஆதாரில் விவரங்களை உள்ளிடும்போது சில தவறுகள் நடைபெறுகிறது. இந்த தவறுகளால், பிற்காலத்தில் அனைத்து விதமான பிரச்சனைகளையும் சந்திக்க நேரிடுகிறது. இத்தகைய சூழ்நிலையில், ஆதார் தவறுகளை எவ்வாறு சரிசெய்வது மற்றும் எளிதான வழி என்ன என்பதை அறிந்து கொள்வது அவசியமாகிறது.

மேலும் படிக்க: Aadhaar Mobile Link: ஆதார் அட்டையுடன் மொபைல் எண்ணை எப்படி இணைப்பது

உங்கள் ஆதார் அட்டையில் உள்ள பெயர், முகவரி, பாலினம் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை புதுப்பிக்க Self Service Update Portal (SSUP) உங்களை அனுமதிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. அதன்படி ஆதாரில் உள்ள பெயர், முகவரி, பிறந்த தேதி, பாலினம், மொபைல் மற்றும் மின்னஞ்சல் போன்ற விவரங்களில் உள்ள தவறுகளை சரிசெய்ய ரூ.50 மட்டுமே கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

உங்கள் ஆதார் அட்டையில் உள்ள விவரங்களை ஆன்லைனில் சரிபார்ப்பது எப்படி?

1. முதலில் UIDAI இன் அதிகாரப்பூர்வ இணையதளமான https://uidai.gov.in/ என்ற பக்கத்திற்கு செல்லவும்.

2. இதன் கீழ் மெனுவுக்கு சென்று, 'ஆதார் சேவைகள்' என்பதை தேர்ந்தெடுக்கவும்.

3. பின்னர் 'ஆதார் சரிபார்ப்பு' என்பதை தேர்ந்தெடுக்க வேண்டும்.

4. இப்போது உங்கள் 12 இலக்க ஆதார் எண்ணை கொடுத்து கேப்ஷாவை உள்ளிடவும்.

5. பின்னர் ‘Submit’ என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

6. இதனை தொடந்து உங்கள் ஆதார் விவரங்கள் திரையில் தோன்றும். அதில் உங்கள் விவரங்கள் அனைத்தும் சரியாக உள்ளதா? என சரி பார்த்து கொள்ளலாம். ஏதேனும் தவறு இருக்கும் பட்சத்தில் அதனை தபின்னர் திருத்தி கொள்ளலாம்.

இதற்கிடையில் இது தவிர, ஆதார் அட்டை வைத்திருப்பவர் பயோமெட்ரிக் அப்டேட் செய்ய ரூ.100 மட்டுமே செலுத்த வேண்டும். உங்கள் ஆதார் திருத்தம் செய்ய ஆதார் மையத்தில் அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டால், இந்த இணைப்பில் ( https://resident.uidai.gov.in/file-complaint ) சென்று புகார் செய்யலாம்.

மேலும் படிக்க | Old Income Tax Regime Vs New: இரண்டுக்கும் உள்ள முக்கிய வித்தியாசங்கள் என்ன? 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News