இந்தியாவின் தடுப்பூசி தேவைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா தலைமை நிர்வாக அதிகாரி ஆதார் பூனவல்லா ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார். கோவிஷீல்ட் விநியோகத்திற்காக காத்திருக்கும் நாடுகளும் அரசாங்கங்களும் சிறிது பொறுமையாக இருக்குமாறு பூனவல்லா மேலும் கேட்டுக்கொண்டார். "சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா (SII) இந்தியாவின் மிகப்பெரிய தேவைகளுக்கு முன்னுரிமை அளிக்கும், அதோடு உலகின் பிற பகுதிகளின் தேவைகளையும் கருத்தில் கொண்டு செயல்படும்" என்று ஆதார் பூனவல்லா இன்று தெரிவித்தார்.

COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ட்விட்டரில் இது குறித்து கருத்தை பகிர்ந்து கொண்ட ஆதார் பூனவல்லா, “ பிற நாடுகளும் அரசாங்கங்களும்,  கோவிஷீல்ட் தடுப்பூசியை பெறுவதில் ​​தயவுசெய்து பொறுமையாக காட்டுங்கள் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன், இந்தியாவின் சீரம் நிறுவனம் இந்தியாவின் மிகப்பெரிய தேவைகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. உலகின் பிற பகுதிகளுக்கும் அனுப்ப நாங்கள் எங்களால் முடிந்தவரை முயற்சி செய்கிறோம். ”


முன்னதாக பிப்ரவரி 15 ஆம் தேதி, தடுப்பூசி தயாரிப்பாளர் சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா (SII), அஸ்ட்ராஜெனெகா மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் உருவாக்கிய கோவிட் -19 தடுப்பூசியை ஒரு மாதத்திற்குள் கனடாவுக்கு அனுப்பப்போவதாக கூறியிருந்தது.


கோவிஷீல்ட் (COVISHIELD) என்பது அஸ்ட்ராஜெனெகா-ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக COVID-19 தடுப்பூசியின் பிராண்ட் பெயர்.


இந்தியா ஏற்கனவே 229 லட்சம் டோஸ் கொரோனா வைரஸ் தடுப்பூசிகளை பல்வேறு நாடுகளுக்கு வழங்கியுள்ளது, அதில் 64 லட்சம் டோஸ் மானிய உதவியாகவும், வர்த்தக அடிப்படையில் 165 லட்சம் டோஸ்கள்  வழங்கப்பட்டுள்ளதாக வெளியுறவு அமைச்சகம் பிப்ரவரி 12 அன்று தெரிவித்துள்ளது.

உலகில் தடுப்பூசிகளை மிகப்பெரிய அளவில் உற்பத்தி செய்யும் நாடாக இந்தியா திகழ்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 


ALSO READ | 'Made in India' கோவிட் -19 தடுப்பூசிக்காக 25 நாடுகள் காத்திருக்கின்றன: S.ஜெய்சங்கர்