பங்குச்சந்தை என்ற வார்த்தையை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் தினசரி பத்து முறையாவது கேட்கும் நிலை, கடந்த பத்து நாட்களாக இருந்துவருகிறது. இதற்குக் காரணம் பங்குச்சந்தைகளில் எழுந்த திடீர் எழுச்சி மற்றும் வீழ்ச்சி. இது, இந்தியாவில் தேர்தல் நடைபெற்றதால், வாக்கு எண்ணிக்கைக்கு சில நாட்கள் முன்னதாக உச்சபட்ச அதிகரிப்பை கண்டது என்றால், வாக்குகள் எண்ணப்பட்ட ஜூன் மாதம் நான்காம் தேதியன்று படுவீழ்ச்சியை பங்குச்சந்தை சந்தித்தது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பங்குச்சந்தையில் முதலீடு செய்வதில் ஆபத்துகள் இருக்கின்றன என்பதை புரிந்துக் கொண்டு தான் பங்கு வர்த்தகத்தில் மக்கள் ஈடுபட்டாலும், திடீர் எழுச்சியும் வீழ்ச்சியும் பலரின் வாழ்க்கையையே மாற்றிவிடுகிறது. தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்கு பிறகு, மிகப் பெரிய கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்பு கணிசமாக குறைந்தது என்பது நிதர்சனம். அதற்கு உதாரணம், அதானி மற்றும் அம்பானியின் சொத்து மதிப்பில் ஏற்பட்ட மிகப்பெரிய வீழ்ச்சி என்று கூறலாம். 


எது எப்படியிருந்தாலும், பங்குகளை எவ்வாறு வர்த்தகம் செய்வது என்பதைக் கற்றுக்கொள்வது ஒரு உற்சாகமான அனுபவமாக இருக்கும். பங்குச்சந்தையில் ஈடுபட விரும்புபவர்கள், முதலில் சந்தையின் நுணுக்கங்களைத் தெரிந்துகொள்வது அவசியம். 


இந்தியாவில் பங்குச் சந்தையில் முதலீடு செய்வது என்பது நீண்ட கால முதலீடு மற்றும் பன்முகப்படுத்தப்பட்ட போர்ட்ஃபோலியோவில் பணத்தைப் போடுவது முதலீட்டாளர்களுக்கு இலாபகரமானதாக இருக்கும். எந்தவொரு முதலீட்டுடன் தொடர்புடைய அபாயங்கள் இருந்தாலும், இந்தியா வளர்ந்து வரும் பொருளாதாரமாக இருப்பதாலும், நிலையான பொருளாதாரச் சூழல் நிலவுவதாலும் பங்குச் சந்தை முதலீட்டாளர்களுக்கு ஈர்ப்பை உருவாக்குகிறது.  


மேலும் படிக்க | அதிக வட்டி தரும் சிறப்பு ஃபிக்சட் டெபாசிட்கள்! ஜூன் 30க்கு பிறகு இந்த பிளான்கள் இருக்காது!


பங்குச் சந்தை கட்டுப்பாட்டாளர் செபியின் நடவடிக்கை


இதன் அடிப்படையில் பங்கு வர்த்தகம் என்பது மிகவும் முக்கியமனதாக மாறிய நிலையில், முதலீட்டாளர்களின் பாதுகாப்புக்காக, பங்குச் சந்தை கட்டுப்பாட்டாளர் செபி, தரகர்களின் சொந்த வர்த்தகம் தொடர்பான விதிகளில் பெரிய மாற்றங்களைச் செய்கிறது. தற்போது, ​​உங்கள் சார்பாக வாங்கப்பட்ட பங்குகள் முதலில் தரகரிடம் செல்கிறது. ஆனால் இனிமேல், இந்த நிலை மாறிவிடும். தற்போதைய அமைப்பில், தீர்வு நிறுவனம் முதலீட்டாளர்களின் பங்குகளை தரகர்களிடம் டெபாசிட் செய்கிறது.


பங்குச்சந்தை மோசடி


பங்குச் சந்தையில் வர்த்தகம் என்ற பெயரில் மோசடி நடப்பது தொடர்ந்து அதிகரித்து வருவதாக புகார்கள் அதிகரித்து வரும் நிலையில், அதற்கான நடவடிக்கைகளை செபி எடுத்துவருகிறது. புனேவை சேர்ந்த ஒரு குடும்பத்தை சேர்ந்த இரு சகோதரர்களிடம் ஆன்லைன் பங்கு வர்த்தகம் என்ற பெயரில் பெரும் மோசடி நடைபெற்றது.


அதில், யாரென்று தெரியாத ஒருவர், சகோதர்கள் இருவரையும் ஒரு வாட்ஸ்அப் குழுவில் சேர்த்து, பங்கு வர்த்தகத்தில் பெரும் லாபம் ஈட்டுமாறு கூறி அவர்களுக்கு ஆசை காட்டி மோசம் செய்தார்கள். இந்த மோசடியில் சுமார் 2.5 கோடி ரூபாயை சகோதரர்கள் இழந்தனர். இதுபோன்ற வேறு மோசடி இனியும் தொடராமல் இருக்க, பங்குச் சந்தையில் வர்த்தகம் செய்யும் முறையில் செபி மாற்றங்களைக் கொண்டு வருகிறது.


மேலும் படிக்க | ஒரே நாளில் பில்லியன்கள் கணக்கில் நஷ்டம்! பணக்காரர் அந்தஸ்தை இழந்த கெளதம் அதானி!


அக்டோபர் 14ம் தேதி முதல் விதிமுறைகளில் மாற்றம்
முதலீட்டாளர்களின் வசதிக்காகவும், பங்குச்சந்தை அபாயத்தைக் குறைக்கவும், முதலீட்டாளர்களை மோசடியில் இருந்து பாதுகாக்கவும், சந்தை கட்டுப்பாட்டாளர் செபி புதிய விதியை அமல்படுத்தப் போகிறது. இந்த விதியின் கீழ், அக்டோபர் 14 முதல் முதலீட்டாளர்கள் வாங்கும் பங்குகள் நேரடியாக அவர்களின் டிமேட் கணக்கில் வரவு வைக்கப்படும். தற்போதைய முறையின்படி, ​​உங்கள் சார்பாக வாங்கப்பட்ட பங்குகள் முதலில் தரகரிடம் செல்கின்றன.  க்ளியரிங் கார்ப்பரேஷன் முதலீட்டாளர்களின் பங்குகளை தரகர்களிடம் டெபாசிட் செய்கிறது. இதற்குப் பிறகு, தரகர்கள் அவற்றை முதலீட்டாளர்களின் டிமேட் கணக்கில் டெபாசிட் செய்கிறார்கள்.


இடைத்தரகர் நீக்கப்படுவதால் என்ன பயன்?
செபியின் புதிய முறையில் தரகர் நீக்கப்படுவார்கள். ஏனென்றால், சில தரகர்கள், வாடிக்கையாளர்களின் பங்குகளை  தவறாகப் பயன்படுத்துகிறார்கள். மோசடிகளின் தொடர்பாக புகார்கள் அதிகரித்ததை அடுத்து,  பங்குச் சந்தை கட்டுப்பாட்டாளர் செபி இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. இதன் மூலம், முதலீட்டாளர்கள் தங்கள் பங்குகளை நேரடியாகப் பெற முடியும். செபி வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், க்ளியரிங் கார்ப்பரேஷன், வாடிக்கையாளர் வாங்கும் பங்குகளை நேரடியாக அவர்களுடைய டீமேட் கணக்கில் வரவு வைக்கும் என்று தெரிவித்துள்ளது.


மார்ஜின் டிரேடிங்


மார்ஜின் டிரேடிங் சேவையின் கீழ் செலுத்தப்படாத பத்திரங்கள் மற்றும் நிதியளிக்கப்பட்ட பங்குகளை அடையாளம் காண வணிக உறுப்பினர்/கிளியரிங் உறுப்பினருக்கு கிளியரிங் கார்ப்பரேஷன் பொறிமுறையை வழங்கும். இது தொடர்பான செபியின் சுற்றறிக்கையில், ஒரு தரகர் ஏதேனும் பங்குகளை வாங்க பணம் கொடுத்திருந்தால், அந்த பங்குகளை தரகர் தன்னிடம் அடகு வைக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. முதலீட்டாளர் சரியான நேரத்தில் பணத்தை திருப்பிச் செலுத்த முடியாவிட்டால், தரகர் அந்தப் பங்குகளை ஏலம் விடலாம்.


மேலும் படிக்க | சம்பளம் வாங்காதவர்களுக்கு வீடு வாங்க கடன் கிடைக்குமா? தேவையான ஆவணங்கள் யாவை?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ