அதிக வட்டி தரும் சிறப்பு ஃபிக்சட் டெபாசிட்கள்! ஜூன் 30க்கு பிறகு இந்த பிளான்கள் இருக்காது!

Bank FD Rates To Go Down: ஃபிக்சட் டெபாசிட் வட்டி சதவிகிதத்தைக் குறைக்க சில வங்கிகள் முடிவெடுத்துள்ளன. ஜூன் 30ம் தேதி முதல் சில சிறப்பு ஃபிக்சட் டெபாசிட் வட்டிகள் குறைந்துவிடும்

உத்தரவாதமான முதலீடு என்றால் முதலில் நினைவுக்கு வருவது நிலையான வைப்புத்தொகை எனப்படும் ஃபிக்சட் டெபாசிட்கள் தான்... சில சிறப்பு டெபாசிட்களின் வட்டி விகிதம் இன்னும் 25 நாட்களுடன் முடிவுக்கு வந்துவிடும்...

1 /8

பணம் சம்பாதிப்பதைவிட அதை சேமிப்பது என்பது பலருக்கும் கைவராத விஷயமாக இருக்கிறது. சம்பாதிக்கும் பணத்தை பாதுகாப்பாக, தேவைப்படும்போது பயன்படுத்த ஏதுவாக  வைக்க வங்கிகளில் டெபாசிட் செய்யலாம்

2 /8

 உத்தரவாதமும், அதிக வருவாயும் கொடுக்கும் நிலையான முதலீடான வைப்புக்கணக்கின் மூலம் அதிக லாபம் பெறலாம். அதிலும் சிறப்பு திட்டங்கள் நல்ல வருவாயைக் கொடுக்கும்

3 /8

பல வங்கிகள் சிறப்பு எஃப்டியை வழங்குகின்றன, அதற்கு அதிக வட்டி வழங்கப்படுகிறது.  இருப்பினும், இந்த சிறப்பு FD சலுகை குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே என்ற அறிவிப்புடன் செயல்படுகின்றன

4 /8

சிறப்பு உத்சவ் FD திட்டத்தை ஐடிபிஐ வங்கி வழங்குகிறது. இந்த எஃப்டியில் சாமானியர்களுக்கு 7.05 சதவீதமும், மூத்த குடிமக்கள் 7.55 சதவீத வட்டியையும் பெறுகிறார்கள். 300 நாட்களுக்கான நிலையான வைப்புத் தொகைக்கு இந்த வட்டி என்றால், 375 நாட்களுக்கு FD செய்தால், அதில் 7.1 சதவீதம் வருமானம் கிடைக்கும். மூத்த குடிமக்களுக்கு 7.6 சதவீதம் வட்டி கிடைக்கும். 444 நாட்கள் FDக்கு, 7.2 சதவீத வட்டியும், மூத்த குடிமக்களுக்கு 7.7 சதவீத வட்டியும் கிடைக்கும். ஐடிபிஐயின் இந்த சிறப்பு எஃப்டியில் பணத்தை முதலீடு செய்வதற்கான கடைசி தேதி ஜூன் 30 ஆகும்.

5 /8

இந்தியன் வங்கியின் Ind Supreme 300 Days மற்றும் Ind Super 400 Days திட்டங்களில், 300 நாள் எஃப்டியில் பணத்தை முதலீடு செய்தால், உங்களுக்கு 7.05 சதவிகிதம் வருமானம் கிடைக்கும், மூத்த குடிமக்களுக்கு 7.55 சதவிகிதம் வருமானம் கிடைக்கும். வங்கியின் 400 நாள் எஃப்டியில் பணத்தை முதலீடு செய்வதன் மூலம், உங்களுக்கு 7.25 சதவீத வட்டி கிடைக்கும். மூத்த குடிமக்களுக்கு இந்த FDக்கு 7.75 சதவீதம் வட்டி வழங்கப்படும். அதேசமயம் சூப்பர் மூத்த குடிமக்கள் இந்த FDக்கு 8 சதவீத வட்டியைப் பெறலாம். பணத்தை முதலீடு செய்ய கடைசி தேதி ஜூன் 30 ஆகும்.

6 /8

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவிவின் சிறப்பு FD  அம்ரித் கலஷ் திட்டம் ஆகும். இதில் பணத்தை முதலீடு செய்வதற்கான கடைசி தேதி செப்டம்பர் 30 ஆகும். இதன் கீழ், வங்கி உங்களுக்கு 400 நாள் FDக்கு 7.10 சதவீத வட்டியை வழங்குகிறது. ஏப்ரல் 12, 2023 அமலுக்கு வந்த இந்த திட்டத்தில் மூத்த குடிமக்களுக்கு 7.60 சதவீத வட்டி கொடுக்கப்படுகிறது

7 /8

பஞ்சாப் மற்றும் சிந்து வங்கி, குறிப்பிட்ட காலத்திற்கு சிறப்பு FD வழங்குகிறது. 222 நாட்களுக்கு FD செய்தால், 7.05 சதவீத வட்டி கிடைக்கும். அதேசமயம் 333 நாட்களுக்கு FDக்கு 7.10 சதவீதம் வட்டி வழங்கப்படும். நீங்கள் 444 நாட்களுக்கு FD இல் பணத்தை முதலீடு செய்தால், உங்களுக்கு 7.25 சதவிகிதம் வருமானம் கிடைக்கும். இவை அனைத்திலும் பணத்தை முதலீடு செய்ய கடைசி தேதி ஜூன் 30 ஆகும்.

8 /8

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல் மற்றும் உள்ளடக்கத்திற்கு ஜீ நியூஸ் பொறுப்பேற்காது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே..