சம்பளம் வாங்காதவர்களுக்கு வீடு வாங்க கடன் கிடைக்குமா? தேவையான ஆவணங்கள் யாவை?

Home Loan For Non Salaried People : சொந்தமாக வீடு வாங்க விரும்புபவர்களுக்கு கடன் வாங்குவது தொடர்பாக பல கேள்விகள் இருக்கும். வேலை செய்யாதவர்களுக்கு எப்படி வீட்டுக் கடன் கிடைக்கும்?

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jun 6, 2024, 12:06 AM IST
  • வீட்டுக் கடன் வாங்க ஆசைப்படும் தொழிலதிபரா?
  • வேலை செய்யாதவர்களுக்கு எப்படி வீட்டுக் கடன் கிடைக்கும்?
  • பூர்த்தி செய்ய வேண்டிய படிவங்கள்
சம்பளம் வாங்காதவர்களுக்கு வீடு வாங்க கடன் கிடைக்குமா? தேவையான ஆவணங்கள் யாவை? title=

சொந்த வீட்டுக் கனவு என்பது அனைவருக்கும் இருக்கும். சொந்த வீடு கனவு என்பது, அவர்களுடைய வருமானம் மற்றும் சுற்றி இருப்பவர்களின் வீடு என்பதன் அடிப்படையில் இருப்பது இயல்பானது. சொந்த வீடு வாங்க போதுமான பணம் இல்லை என்றால் வீட்டுக் கடன் வாங்கலாம். அதற்கு தேவையான ஆவணங்களும், வருமான வரி, சிபில் ஸ்கோர் என பல விஷயங்கள் உள்ளன. அதிலும்,  சொந்தமாக வீடு வாங்க விரும்புபவர்களுக்கு கடன் வாங்குவது தொடர்பாக பல கேள்விகள் இருக்கும். அதிலும், வேலை செய்யாதவர்களுக்கு எப்படி வீட்டுக் கடன் கிடைக்கும் என்ற கேள்வி பலருக்கும் இருக்கும். 

சுயதொழில் செய்பவர்களுக்கு வீட்டுக் கடன்

வீடு வாங்க விரும்புபவர்களுக்கு கடன் கொடுக்க நிதி நிறுவனங்களும் வங்கிகளும் முன் வந்தாலும், அவை கோரும் ஆவணங்கள் அனைத்தும் சரியாக இருக்க வேண்டும். ஒரு நடுத்தர வர்க்கத்தினரின் மொத்தச் சேமிப்பையும் போட்டு வீடு வாங்கும் நிலை இருக்கிறது. அதிலும், தொழிலில் செழிப்புடன் இருப்பவர்கள் கூட கடன் வாங்கியே வீடு வாங்க வேண்டிய நிலை இருக்கிறது.

இன்றைய காலகட்டத்தில், புதிதாக வீடு கட்டுபவர்கள் மட்டுமல்ல, பழைய வீட்டை வாங்குபவர்களும் வீட்டுக் கடனையே நம்பி இருக்கின்றனர். பொதுவாக, வீடு வாங்கும் 90 சதவீதம் பேர் வீட்டுக்கடன் வாங்கித்தான் வீடு கட்டுகிறார்கள் என்று அறிக்கைகள் கூறுகின்றன.

மேலும் படிக்க | இருக்கும் பணத்தை இரட்டிப்பாக்க வேண்டுமா? அப்போ ‘இதில்’ முதலீடு செய்யுங்கள்..

சம்பளம் வாங்கும் நபருக்கு வீட்டுக் கடன் கொடுக்கும்போது, ​​வங்கி அவரது சம்பளம் மற்றும் வங்கி அறிக்கையை சரிபார்க்கிறது, ஆனால் சுயதொழில் செய்பவர்களுக்கு எதன் அடிப்படையில் வீட்டுக் கடன் எவ்வாறு வழங்கப்படுகிறது? வங்கிகள் தங்களுக்கு எவ்வளவு வீட்டுக் கடன் வழங்கும், அதற்கான வட்டி விகிதம் என்ன என்பதை தெரிந்துக் கொள்ளலாம்.

கடன் வாங்குபவரின் வயது
வீட்டுக் கடன் கொடுக்கும் போது, ​​வங்கியும் கடன் வாங்குபவரின் வயதைப் பார்க்கின்றன. அதிலும் சுயதொழில் செய்பவர்களுக்கு கடன் வழங்கும்போது, ​​அவரின் வயது தொடர்பாக அதிக கவனம் செலுத்தப்படுகிறது. சுயதொழில் செய்பவரின் வயது குறைவானவராக இருந்தால், வீட்டுக் கடன் கொடுப்பதற்கு தயங்குவதில்லை. நீண்ட கால கடனும் கொடுக்கப்படும்.  

ஆவணங்கள் சரிபார்ப்பு
வீட்டுக் கடன் கோருபவர்களிடம் இருந்து பல ஆவணங்களை வங்கிகள் கேட்கின்றன. ஒருவரின் நிதி நிலை என்ன என்பதை வங்கி சரிபார்க்கிறது. இதற்காக, வருமான வரி கணக்கு, லாப-நஷ்ட அறிக்கை, இருப்புத்தொகை, வங்கி அறிக்கை என ஆவணங்கள் பரிசீலிக்கப்படும். இவற்றின் மூலம், கடன் கேட்பவரின் தொழில் எப்படி நடக்கிறது என்பதைத் தெரிந்துக் கொண்டு கடன் வழங்கப்படலாம்.

வருமானம்
ஒருவரின் நிகர வருமானம் என்பது, கடன் வழங்கும் வங்கிக்கு மிகவும் முக்கியமானது. இதன் அடிப்படையில், அந்த நபர் மாதந்தோறும் எவ்வளவு சம்பாதிக்கிறார் என்பதை தெரிந்துக் கொள்ள பல்வேறு ஆவணங்களை வங்கி சரிபார்க்கிறது. அதன் அடிப்படையில் வீட்டுக் கடனை வழங்குகிறது. ஒருவர், வாங்கப்போகும் கடனுக்கான தவணைத்தொகையை உரிய நேரத்தில் செலுத்தும் அளவு வருமானம் இருக்கிறதா என்பதை சரிபார்ப்பார்கள்.

சிபில் ஸ்கோர் சரிபார்ப்பு
வீட்டுக் கடன் கோருபவர்களின் கிரெடிட் ஸ்கோரையும் வங்கிகள் சரிபார்க்கின்றன. வாங்கிய கடனை எப்படிச் செலுத்துகிறார்கள் என்பதைத் தெரிந்துக் கொள்ள உதவும் சிபில் ஸ்கோர் அதிகமாக வைத்திருப்பவர்களுக்கு வீட்டுக் கடன் எளிதாக கிடைக்கும். கிரெடிட் ஸ்கோர் மோசமாக இருந்தால் வீட்டுக் கடன் கொடுப்பது தொடர்பாக வங்கி தீவிரமாக சிந்திக்கும்.  

மேலும் படிக்க | ஒரே நாளில் பில்லியன்கள் கணக்கில் நஷ்டம்! பணக்காரர் அந்தஸ்தை இழந்த கெளதம் அதானி!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News