புதுடெல்லி: ஐபிஎல் 2021 போட்டிகள் ஒத்திப் போடப்பட்டதால் பிசிசிஐக்கு 2000 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. ஸ்பான்சர்கள் மற்றும் ஒளிபரப்பாளர்கள் கிரிக்கெட் வாரியத்தின் முடிவுக்கு ஆதரவு கொடுத்துள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

செவ்வாயன்று பி.சி.சி.ஐ.யின் பயோ-குமிழில் COVID-19 தாக்கம் அதிகமாக இருந்தது தெரியவந்தது. எனவே லாபகரமான டி 20 விளையாட்டுப் போட்டிகளை பிசிசிஐ காலவரையின்றி நிறுத்துவதற்கான முடிவு எடுத்தது. அதற்கு இந்தியன் பிரீமியர் லீக்கின் அதிகாரப்பூர்வ ஒளிபரப்பாளரான ஸ்டார் இந்தியா பூரண ஆதரவு அளித்தது.


Also Read | தற்காலிகமாக நிறுத்தப்பட்டது IPL, பல அணிகளில் பரவியது தொற்று


உலகின் பணக்கார கிரிக்கெட் வாரியம் - இந்தியாவில் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் - இந்த ஆண்டு இந்தியன் பிரீமியர் லீக்கிற்காக ஒதுக்கப்பட்ட ஒளிபரப்பு மற்றும் ஸ்பான்சர்ஷிப் தொகையில் 2000 கோடிக்கு மேல் இழப்பை சந்திக்கும்.  


கடந்த இரண்டு நாட்களில் அகமதாபாத் மற்றும் புதுடெல்லியில் இருக்கும் ஐ.பி.எல் வீரர்கள் மற்றும் ஊழியர்களில் பலருக்கு கோவிட் -19 வழக்குகள் அதிகரித்ததை அடுத்து போட்டிகளை கால வரையற்று ஒத்திப் போட்டது பி.சி.சி.ஐ .


ஐ.பி.எல், 52 நாட்களில் 60 போட்டிகள் நடத்துவதற்கான திட்டம் சரியாக செயல்பட்டிருந்தால், இந்த போட்டித்தொடர் மே 30 அன்று அகமதாபாத்தில் முடிவடைந்திருக்கும். கொரோனா வைரஸ் பாதிப்பால் விளையாட்டுகள் ஒத்திப் போடப்படுவதற்கு முன்பு 29 ஆட்டங்கள் முடிந்துள்ளன.


Also Read | திமுக சட்டமன்றக் கட்சித் தலைவராக ஸ்டாலின் ஒருமனதாக தேர்வு


 "இந்த சீசன் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில், நடுவில் போட்டிகளை ஒத்திவைப்பதால் 2000 முதல் 2500 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்படலாம். 2200 கோடி என்பது துல்லியமான மதிப்பீட்டிற்கு நெருக்கமாக இருக்கலாம்,”என்று தனது பெயரை வெளியிட விரும்பாத பிசிசிஐ மூத்த அதிகாரி ஒருவர் பி.டி.ஐ செய்தி முகமையிடம் தெரிவித்தார்.


பி.சி.சி.ஐ.க்கு மிகப்பெரிய இழப்பு, போட்டியின் ஒளிபரப்பு உரிமைகளுக்காக ஸ்டார் ஸ்போர்ட்ஸிடமிருந்து கிடைக்கும் பணம் மிகப் பெரிய நட்டம் ஆகும்.


ஸ்டார் தொலைகாட்சியுடன் 16,347 கோடி ரூபாய் மதிப்புள்ள ஐந்தாண்டு ஒப்பந்தம் உள்ளது, இது ஆண்டுக்கு ரூ. 3269.4 கோடி. ஒரு பருவத்தில் 60 ஆட்டங்கள் இருந்தால், ஒரு போட்டியின் மதிப்பீடு சுமார் ரூ .54.5 கோடியாக இருக்கும்.


Also Read | உலகிலேயே அதிக செலவு பிடித்த விவாகரத்துகளில் ஒன்று Bill and Melinda divorce


ஒரு போட்டி என்பதன் அடிப்படையில் கணக்கிடும்போது வாரியத்திற்கு ரூ .1690 கோடி இழப்பு ஏற்படும். இதேபோல், மொபைல் உற்பத்தியாளரான விவோ, போட்டியின் பட்டத்தில் தனது பெயரை இடம் பெற செய்வதற்காக சீசன் ஒன்றுக்கு 440 கோடி ரூபாய் கொடுக்கிறது. தற்போது பிசிசிஐ (BCCI) போட்டியை ஒத்திவைப்பதால் அந்த தொகையில் பாதிக்கும் குறைவாகவே கிடைக்கும்.


இதனுடன் சேர்த்து, அசோசியேட் ஸ்பான்சர் நிறுவனங்களான யுனகாடமி, ட்ரீம் 11, சி.ஆர்.டி, அப்ஸ்டாக்ஸ் (VIVO Unacademy, Dream11, CRed, Upstox) மற்றும் டாடா மோட்டார்ஸ் (Tata Motors) ஆகியவை தலா ரூ .120 கோடி வரை செலுத்துகின்றன.  கொரோனா வைரஸின் பரவலால் பணக்கார ஐ.பி.எல் போட்டியிலும் பல சரிவுகளை காண முடிகிறது.


ALSO READ |  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மே 7ம் தேதி முதல்வராக பதவி ஏற்கிறார்


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற  ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR