சென்னை: புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற பிரதிநிதிகளின் கூட்டம் திமுக கட்சி தலைமையகம் அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்றது. எம்.எல்.ஏக்கள அனைவரும் திமுக தலைவர் எம்.கே.ஸ்டாலினை தங்கள் சட்டமன்றக் கட்சியின் தலைவராக ஒருமனதாக தேர்ந்தெடுத்தனர்.
காட்பாடி சட்டமன்றத் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் தீர்மானத்தை முன்மொழிந்தார், மற்ற எம்.எல்.ஏக்கள் தீர்மானத்தை ஆதரித்தனர்.
கழக தலைவர் @mkstalin அவர்கள், தமிழ்நாடு சட்டப்பேரவை திமுக தலைவராக தேர்வு.
சென்னை - அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்ற திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் ஒரு மனதாக தீர்மானம்.#DMK #MKStalin pic.twitter.com/Mg8lYkojGY
— DMK (@arivalayam) May 4, 2021
திராவிட முன்னேற்ற கழகம் (DMK) தலைவர் மு.க. ஸ்டாலின் மே 7 ஆம் தேதி தமிழக முதல்வராக பதவியேற்க உள்ளார். வெள்ளிக்கிழமை காலை 11:00 மணிக்கு ராஜ் பவனில் பதவியேற்பு விழா நடைபெறுகிறது. தமிழ் நாட்டில் புதிய அரசாங்கம் அமைக்கப்பட உள்ள நிலையில், ஆளுநர் பன்வரிலால் புரோஹித் தமிழக சட்டசபையை மே 3 ம் தேதி கலைத்தார்.
ALSO READ | திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மே 7ம் தேதி முதல்வராக பதவி ஏற்கிறார்
இந்த தேர்தலில் ஆளும் கட்சி அதிமுக (All India Anna Dravida Munnetra Kazhagam) தோல்வியை தழுவியதால், தனது முதல்வர் பதவியை எடப்பாடி பழனிசாமி (Edappadi K. Palaniswami) ராஜினாமா செய்தார்.
மு.க.ஸ்டாலின் பதவியேற்பு விழா ஏற்பாடுகள் குறித்து தலைமைச் செயலகத்தில் அதிகாரிகள் ஆலோசனையில் ஈடுபட்டு உள்ளனர்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR