தீபாவளி போனசுக்கும் வரி விதிக்கப்படுமா? வருமான வரி சட்டம் கூறுவது என்ன?
Income Tax Rules: இந்த பரிசுகள் மற்றும் தீபாவளி போனசுக்கு வரி விதிக்கப்படலாம் என்பது பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. வருமான வரி விதிகளின் கீழ், நீங்கள் பரிசுகள் மற்றும் போனஸ் தொகைக்கு வரி செலுத்த வேண்டி வரலாம்.
Income Tax Rules: தீபாவளி பண்டிகை நெருங்கிவிட்டது. அலுவலக பணிகளில் இருப்பவர்கள் பலருக்கு தீபாவளி போனஸ் கிடைக்கும் காலம் இது. போனஸ் மட்டுமின்றி நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு தீபாவளி பரிசுகளையும் அளிக்கின்றன. இது தவிர நாம் நமது உறவினர்கள் மற்றும் நண்பர்களுடனும் பரிசுகளை பரிமாறிக்கொள்கிறோம். தீபாவளி பண்டிகைக்கு முன்னதாக போனஸ் மற்றும் பரிசுகள் பற்றிய உற்சாகம் மக்களிடம் இருப்பது இயல்பான ஒன்று.
ஆனால், இந்த பரிசுகள் மற்றும் தீபாவளி போனசுக்கு வரி விதிக்கப்படலாம் என்பது பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. வருமான வரி விதிகளின் கீழ், நீங்கள் பரிசுகள் மற்றும் போனஸ் தொகைக்கு வரி செலுத்த வேண்டி வரலாம். இதை பற்றி இந்த பதிவில் விரிவாக காணலாம். தீபாவளி பரிசுகள் மற்றும் போனசுக்கு விதிக்கப்படும் வரி எவ்வளவு? இந்த வரிகளைத் தவிர்ப்பதற்கான வழிகள் என்ன? இவற்றை பற்றி இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.
தீபாவளி பரிசு மற்றும் போனஸ் மீதான வரி
வருமான வரிச் சட்டத்தின் கீழ், நிறுவனத்திடமிருந்து பெறப்படும் அனைத்து வகையான பரிசுகளும் போனஸ் தொகைகளூம் உங்கள் சம்பளத்தின் ஒரு பகுதியாக கருதப்படுகின்றன. ஆகையால் இவை வரி வரம்பின் கீழ் வரும். ஆகையால், போனஸ் மூலம் கிடைக்கும் வருமானத்தின் மீது விதிக்கப்படும் வரி உங்களின் ஒட்டுமொத்த வரி அடுக்குக்கு ஏற்ப தீர்மானிக்கப்படும். எனினும். சில தீபாவளி பரிசுகள் மற்றும் போனஸ்களுக்கு வரி விதிக்கப்படாது.
Diwali Gifts: ரூ.5,000 வரையிலான பரிசுகள்
நிறுவனத்திடமிருந்து ரூ.5,000 வரை பெறப்படும் பரிசுகளுக்கு ஊழியர்களுக்கு வரி விதிக்கப்படாது.
மற்றவர்களிடமிருந்து பெறப்பட்ட பரிசுகள்:
வாடிக்கையாளர் அல்லது சப்ளையர் போன்ற உறவினர்கள் அல்லாதவர்களிடமிருந்து பெறப்பட்ட பரிசுகளுக்கு, அவற்றின் மதிப்பு எவ்வளவாக இருந்தாலும், பொதுவாக வரி விதிக்கப்படுவதில்லை.
தீபாவளி பரிசுகள் மற்றும் போனஸில் வரியைச் சேமிப்பதற்கான வழிகள்:
நீங்கள் பெறும் தீபாவளி பரிசுகள் மற்றும் போனஸுக்கு வரி செலுத்துவதைத் தவிர்க்க வேண்டுமென்றால், பின்வரும் வழிகளைக் கருத்தில் கொள்ளவது பயனுள்ளதாக்க இருக்கும்.
விலக்கு கோரலாம்: உங்கள் தீபாவளி பரிசின் மதிப்பு ரூ.5,000 -க்குள் இருந்தால், பரிசு தொடர்பான ஆவணங்களைக் காட்டி அதற்கு விலக்கு கோரலாம்.
விலையுயர்ந்த பரிசுகளுக்கு இந்த வழியில் வரியைச் சேமிக்கலாம்: உங்கள் நிறுவனம் உங்களுக்கு 5,000 ரூபாய்க்கு மேலான மதிப்புள்ள பரிசை வழங்கப் போகிறது என்றால், நீங்கள் அதற்கு வரி செலுத்த வேண்டிய அவசியம் வராத வகையில், அந்த பரிசை வகைப்படுத்த நிறுவனத்திடம் கேட்டுக் கொள்ளலாம். உதாரணமாக, நிறுவனம் மொத்த தொகையை 2 பிரிவுகளாக பிரித்து, 5,000 ரூபாய் வரை பரிசு வவுச்சராகவும் மீதமுள்ள தொகையை போனஸாகவும் வழங்கலாம்.
பணத்திற்கு பதிலாக இந்த விருப்பங்களை தேர்வு செய்யவும்: ரொக்கமாக பெறுவதற்கு பதிலாக, பரிசு வவுச்சர்கள், தங்க நாணயங்கள் அல்லது ஏதேனும் ஒரு வீட்டு உபயோக சாதனம் போன்ற வடிவங்களில் பரிசை பெறுவது வரியை தவிர்க்க ஏற்ற வழியாக இருக்கும். ஏனெனில் ரொக்கமாக கிடைக்கும் போனஸ் தொகையுடன் ஒப்பிடும்போது, பொதுவாக இவற்றின் மீது வரி விதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு.
தொண்டு: உங்கள் தீபாவளி போனஸின் ஒரு பகுதியை அங்கீகரிக்கப்பட்ட தொண்டு நிறுவனத்திற்கு நன்கொடையாக வழங்க உங்கள் நிறுவனம் அனுமதித்தால், நீங்கள் அப்படி செய்து, நன்கொடை அளிக்கப்பட்ட தொகைக்கு வரி விலக்கு கோரலாம்.
இவற்றைத் தவிர, தீபாவளி பரிசுகள் மற்றும் போனஸுக்கான வரி குறித்து நினைவில் கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள்:
பரிசின் எங்கிருந்து வந்தது என்பதை பொறுத்து வரி விதிக்கப்படும்: பரிசின் மதிப்பு எதுவாக இருந்தாலும், நண்பர் அல்லது உறவினர் அல்லாதவர்களிடமிருந்து பெறப்படும் பரிசுகளுக்கு வரி விதிக்கப்படாது. இருப்பினும், ஒரு உறவினர் மூலம் பரிசு அனுப்பப்பட்டால், மதிப்பு ஒரு குறிப்பிட்ட வரம்பை மீறினால் அதற்கு வரி விதிக்கப்படலாம்.
பணம், நகைகள்: பணம் அல்லது நகைகள் போன்ற சில வகையான பரிசுகளுக்கு மற்ற பரிசுகளை விட வரி விதிக்கப்படுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது.
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ