முழு நேர வேலை பார்ப்பவர்களும் முதலாளி ஆகலாம்! ‘இதை’ செய்யுங்கள் போதும்..
Side Hustle Jobs For Ful Time Employees : பலர், முழு நேர வேலை பார்த்தாலும் தனியாக சுய தொழில் செய்ய வேண்டும் என்று யோசிப்பர். அப்படிப்பட்ட சுய தொழிலுக்கான ஐடியாக்கள் என்னென்ன என்பதை இங்கு பார்ப்போம்.
Side Hustle Jobs For Ful Time Employees : நம் நாட்டில் இருக்கும் பல இளம் தலைமுறையினர், சுயமாக தொழில் தொடங்க வேண்டும் என்று முடிவெடுத்து தங்களிடம் இருக்கும் திறனையும், பணத்தையும் சரியான வகையில் முதலீடு செய்து வருகின்றனர். ஒரு சிலர், கல்லூரி படிப்பை முடித்தவுடன் மாதம் சம்பளம் வாங்கும் வேலைக்கு சென்றாலும், தனது தொழிலுக்கு தேவையான பணத்தை சேர்த்தவுடன் அதை தொழிலில் முதலீடு செய்து பின்னர் வேலையை விடுகின்றனர். இப்படி, சொந்தமாக தொழில் தொடங்கி, ஒரு நிறுவனத்திற்கு முதலாளி ஆக வேண்டும் என்ற கணவுடன் இருக்கும் பலர், தாங்கள் செய்யும் வேலையை தவிர்த்து Side Hustle என்ற பெயரில் வேறு சில தொழில்களையும் செய்து பணம் ஈட்டி வருகின்றனர். இந்த Side Hustle எனப்படுவது, நமக்கு பெரிதாக ஆரம்பத்தில் சம்பாதியத்தை தராது எனினும் நாட்கள் செல்ல செல்ல அதுவே நிரந்தர தொழிலாகவும் மாறலாம். இது, உங்களுக்கு Long Term Income ஆகவும் இருக்கும். அப்படிப்பட்ட சில தொழில்கள் குறித்து இங்கு பார்ப்போம்.
Affiliate Marketing:
இணைந்த சந்தைப்படுத்துதலை Affiliate Marketing என்று கூறுவர். இது, ஏதாவது தொழிலை விற்க முயல்புவர்களுக்கு உதவும் சந்தைப்படுத்துதல் முறையாகும். இதனை, ஆன்லைனில் செய்வது ஏதுவானது. இந்த வேலையை செய்து கொடுக்கும் தனி நபருக்கு அவர் செய்து கொடுக்கும் வேலைக்கு ஏற்ற கமிஷன் கிடைக்கும். இதற்கு இணையதள அறிவும், சந்தைப்படுத்தும் திறனும் இருந்தால் போதுமானதாக இருக்கும் என கூறுகின்றனர்.
கண்டண்ட் ரைட்டிங்க்:
எழுத்துத்துறையில் ஆர்வம் அதிகம் இருப்பவர்களுக்கு ஏற்ற துறை, Content Writing. இந்தியாவில், இந்த துறைக்கு அதிகளவில் வெகுமதியும் வரவேற்பும் இருக்கிறது. கணினி அறிவுடன் நன்றாக எழுத தெரிந்தவர்கள், பிராண்டிங் செய்ய தெரிந்தவர்களுக்கு ஏற்ற துறை இது. இதற்காக பகுதி நேரமாக வேலை பார்த்தால் வருடத்திற்கு 3.6 லட்ச ரூபாய் வரை சம்பாதிக்கலாம் என்று ஒரு தரவு கூறுகிறது.
மேலும் படிக்க | இந்த பயணிகளுக்கு இனி ரயில் டிக்கெட்டில் 75% வரை தள்ளுபடி, இந்திய ரயில்வே ஜாக்பாட்
ஃப்ரீலான்சிங்க்:
உங்கள் கையில் இருக்கும் திறனை வைத்தே ஒரு வேலையை செய்து கொடுத்து, Freelancing முறையில் சம்பாதிக்கலாம். மார்கெட்டிங், டேட்டா அனலிஸ்ட், பிராண்டிங் என பல்வேறு துறைகளில் ஃப்ரீலான்சிங்கிற்கு வாய்ப்புகள் இருக்கின்றன. இதற்கு நேரத்தை சரியாக உபயோகிக்கும் திறனும், நிதி மேலான்மை திறனும் இருந்தாலே போதுமானது. இந்த முறையில் ஒரு தனி நபரால் 10.3 லட்சம் வரை ஒரு வருடத்திற்கு சம்பாதிக்க முடியும் என கூறப்படுகிறது.
ஆன்லைன் டீச்சிங்:
ஏதேனும் ஒரு துறை அல்லது, தலைப்பில் நீங்கள் கைதேர்ந்தவராக இருந்தால், உங்களுக்கு Online tutoring சிறந்த தொழிலாக இருக்கும். இது படிப்பு சம்பந்தப்பட்டதாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஏதேனும் ஒரு இசைக்கருவியை வாசிப்பதாகவோ அல்லது திறன் மேலான்மை பயிற்சியாகவோ கூட இருக்கலாம். கைவினை பொருட்கள் செய்தல், பிற மொழி கற்றுக்கொடுத்தல் போன்ற விஷயங்களைனீங்கள் ஆன்லைனில் கற்றுக்கொடுத்து பணம் சம்பாதிக்கலாம். ஒரு நாளைக்கு 5 முதல் 6 மணி நேரம் வரை இதற்காக செலவு செய்தாலே போதுமானது. இதனால், வருடத்திர்கு 2.9 லட்சம் வரை சம்பாதிக்கலாம் என கூறப்படுகிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ